உள்ளடக்கத்துக்குச் செல்

வல்சாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வல்சத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வல்சாடு
பல்சர்
நகரம்
தீத்தல் கடற்கரை
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்வால்சாட்
ஏற்றம்
13 m (43 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,14,636
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
396001
தொலைபேசி குறியீடு எண்912632
வாகனப் பதிவுGJ-15
பாலின விகிதம்926/1000 /
எழுத்தறிவு80.94 %

வல்சாடு (Valsad) நகரத்தின் உண்மையான பெயர் பல்சர் ஆகும். இந்நகரம் வல்சாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் அரபுக் கடலின் காம்பே வளைகுடாவிற்கு 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.[2].அல்போன்சா மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற நகரம். வல்சத் நகரம், மும்பையிலிருந்து 150 கி. மீ., தொலைவிலும், சூரத்திலிருந்து 100 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த ஊர் இது.

பெயர்க் காரணம்

[தொகு]

குஜராத்தி மொழியில் வல்சாட் என்ற கூட்டுச் சொல் வட-சாட் என்று பிரித்தால் ஆலமரம் என்று பொருள் தருகிறது. வட என்பதற்கு ஆல் என்றும், சாட் என்பதற்கு மரம் என்று பொருள். இந்நகரத்தில் இயற்கையாக ஆலமரங்கள் அதிகம் காணப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சத் நகர மக்கள் தொகை 1,45,592 ஆகும்.[3]. அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 80%ஆக உள்ளது.

வால்சாட் நகர சமய மக்கள்
இந்து சமயம்
85%
இசுலாம்
12%
கிறித்தவம்
0.4%
சமணம்
3.7%
பிறர்♦
0.9%
சமயப் பிரிவினர்
Includes சீக்கியம்s (0.2%).

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

தொடருந்து நிலையம், மும்பை, அகமதாபாத், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8 மும்பை, அகதாபாத் நகரங்களை இணைக்கிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

[தொகு]
  1. தீத்தல் கடற்கரை
  2. சுவாமி நாராயணன் கோயில்
  3. சாய்பாபா கோயில்

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=555577
  2. https://maps.google.com/maps?q=Bulsar,+India&hl=en&ll=20.604266,72.921066&spn=0.066602,0.132093&sll=37.274322,-79.957542&sspn=0.22648,0.528374&hnear=Valsad,+Gujarat,+India&t=m&z=14
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்சாடு&oldid=3575885" இலிருந்து மீள்விக்கப்பட்டது