ஜூனாகத்
ஜூனாகத்
જૂનાગઢ | |
---|---|
நகரம் | |
ஜூனாகத், குசராத்து | |
ஆள்கூறுகள்: 21°31′20″N 70°27′28″E / 21.5222°N 70.4579°E[1] | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | ஜூனாகத் |
அரசு | |
• நிர்வாகம் | ஜூனாகத் மாநகராட்சி |
• மேயர் | ஜிதேந்திரபாய் ஹிர்பரா |
• மாநகராட்சி ஆணையாளர் | பி. கே. தாக்கூர் |
• சட்டமன்ற உறுப்பினர் | மகேந்திர மாசூரு |
• மக்களவை உறுப்பினர் | ராஜேஸ் சூடசமா |
பரப்பளவு | |
• மொத்தம் | 59 km2 (23 sq mi) |
ஏற்றம் | 102.27 m (335.53 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 3,20,250 |
• அடர்த்தி | 5,400/km2 (14,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சலக சுட்டு எண் | 36200x |
தொலைபேசி குறியீடு | +91285xxxxxxx |
வாகனப் பதிவு | GJ-11 |
நகர நிர்வாகம் | ஜூனாகாத் மாநகராட்சி |
இணையதளம் | www |
ஜூனாகத் (Junagadh, ⓘ, குசராத்தி: જુનાગઢ) என்பது இந்தியாவின் குஜராத் மாநில சௌராஷ்டிரப் பகுதியில், ஜூனாகத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். குஜராத்தி மொழியில், ஜூனாகத் எனில் பழைய துறைமுகம் எனப் பொருள். குஜராத்தின் 7வது பெரிய நகரம். ஜுனாகத் பகுதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இசுலாமிய மன்னராட்சி நாடாக இருந்தது. இந்திய விடுதலைக்குப்பின்பு, சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் ஜூனாகத் அரசு, இந்தியாவுடன் இணைந்தது.
ஜூனாகத்தை ஆண்டவர்கள்
[தொகு]ஆண்டவர்கள் | காலம்[2] |
---|---|
மௌரிய அரச குலம் | கி. மு., 319 |
கலிங்க அரசு குலம் | கி. மு., 185 |
கிரேக்கர்கள் | கி. மு 73-70 |
சக அரச குலம் | கி. பி., 100-275 |
சத்ரபா அரச குலம் | கி. பி., 276-455 |
குப்த அரச குலம் | கி. பி., 456-770 |
சூடசாமா அரசகுலம் | கி. பி., 875-1472 |
முகமது பேக்டா, கலீல் கான் | கி. பி., 1472-1572 |
மொகலாயர்கள் | கி. பி., 1573-1748 |
பாபி குல நவாப் (யூசூப் பதான்) | கி. பி., 1749-1949 |
நிலவியல்
[தொகு]ஜூனாகத், கடல் மட்டத்திலிருந்து சுமார் 335.53 அடி உயரத்தில், 21°31′20″N 70°27′28″E / 21.5222°N 70.4579°E[2] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜூனாகத் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 27.2 (81) |
28.3 (82.9) |
31.4 (88.5) |
32.7 (90.9) |
33.4 (92.1) |
32.9 (91.2) |
30 (86) |
29.3 (84.7) |
30.1 (86.2) |
32.5 (90.5) |
31.6 (88.9) |
28.7 (83.7) |
30.68 (87.22) |
தாழ் சராசரி °C (°F) | 13.1 (55.6) |
14.7 (58.5) |
18.1 (64.6) |
21.6 (70.9) |
25.2 (77.4) |
26.5 (79.7) |
25.7 (78.3) |
24.7 (76.5) |
23.9 (75) |
21.9 (71.4) |
18.3 (64.9) |
14.9 (58.8) |
20.72 (69.29) |
பொழிவு mm (inches) | 0 (0) |
0 (0) |
2 (0.08) |
1 (0.04) |
3 (0.12) |
118 (4.65) |
372 (14.65) |
191 (7.52) |
116 (4.57) |
19 (0.75) |
5 (0.2) |
1 (0.04) |
828 (32.6) |
ஆதாரம்: Climate-Data.org[3] |
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஜூனாகத் மாநகராட்சிப் பகுதியின் மக்கட்தொகை 320,250 ஆகும்.[1] பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 952 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 88.63% ஆக உள்ளது.
ஜூனாகத் பகுதி சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ளதால், இங்கு வாழும் மக்கள் தங்களை சௌராஷ்ட்ரீகள் என்றும் கத்தியவாரிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். ஜூனாகாத்தில், இந்து, இசுலாமியர், சமணர்கள் மற்றும் கிறித்தவர்கள் வாழ்கின்றனர். குஜராத்தி, சிந்தி, இந்தி மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
அசோகரின் 14 கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் ஜூனாகத்திலும், ஒரு கல்வெட்டு கிர்நார் மலையிலும் உள்ளன. [4]
-
அசோகரின் முதல் கல்வெட்டு கிர்நார் மலை
-
அசோகரின் ஜூனாகத் கல்வெட்டு
-
அசோகரின் ஜூனாகத் கல்வெட்டு
-
தேசிய அருங்காட்சியகம், புது டில்லியில் உள்ள அசோகரின் கிர்நார் மலை கல்வெட்டு
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]- எட்டாயிரம் படிகளும் 3661அடி உயரமும் கொண்ட கிர்நார் மலைக் கோயில்.[5]
- கிர்நார்
- மகபத் மக்பாரா மசூதி
- வன உயிரினங்களின் அருங்காட்சியகம்
- உபர்கோட் கோட்டை
- சக்கர்பாக் உயிரியல் தோட்டம்
- காயத்திரி மற்றும் வாகேஸ்வரி கோயில்
- தாமோதரன் கோயில்
- அறிவியல் அருங்காட்சியகம்[6]
- வெல்லிங்டன் அணை.[7]
- மோதி தாவரவியல் பூங்கா
- முசுகுந்தன் குகைகள்.[8]
- ஆயுர்வேத அருங்காட்சியகம்
- நரசிங் மேத்தா ஏரி
- போதிநாத் சிவன் கோயில்
படக்காட்சியகம்
[தொகு]-
சுவாமி நாராயணன் கோயில்
-
மகபத் மக்பார மசூதி
-
ஜும்மா மசூதி, உபர் கோட்டை
-
கிர்நார் மலை ஏரி
-
ஜூனாகத் நகரத் தோற்றம்
-
தாமேதர குன்றிலிருந்து கிர்நார் மலைகள்
-
19ஆம் நூற்றாண்டு ஜூனாகத் நவாப்புகளும் அரசு முத்திரைகளும்
-
மகபத் கான் நினைவு மக்பாரா மசூதியின் குவிமாடம்
-
ஜூனாகத் அரசு அதிகாரிகளுடன் ஜூனாகத் நவாப், பகதூர் கான் III (1882-1892)
-
ஜூனாகத் நவாப், முகமது ரசூல் மற்றும் பகாதுதீன்பாய் ஹசைன்பாய், 1890
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (pdf). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
- ↑ "History of Junagadh". Archived from the original on 25 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 June 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Climate Data for Junagadh". பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
- ↑ The Edicts of King Asoka
- ↑ http://sss.vn.ua/india/gujarat/junagarh/index2en.htm photo gallery
- ↑ "Science Museum". Holiday IQ. Archived from the original on 2014-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-03-04.
- ↑ "Willingdon Dam". Harmoney Hotel.
- ↑ "Places to Visit". gujaratcityguide.com. Archived from the original on 2013-05-15. பார்க்கப்பட்ட நாள் 2015-03-04.