உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்சனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மெகசானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மெக்சனா
મહેસાણા
நகரம்
மெகசானா நகரத் தெரு
மெகசானா நகரத் தெரு
நாடு இந்தியா
குஜராத்குஜராத்
மாவட்டம் மெகசனா
அரசு
 • மாவட்ட ஆட்சியர்லொசன் சஹிரா
 • கூடுதல் ஆட்சியர்முகேஷ் காத்வி
ஏற்றம்
81 m (266 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • நகரம்1,84,133
 • பெருநகர்1,90,189
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சலக சுட்டு எண்
384001 / 384002
தொலைபேசி குறியிடு எண்91 2762
வாகனப் பதிவுGJ 2
பாலின விகிதம்1.12[1] /

மெக்சனா அல்லது மகிசானா (Mehsana or Mahesana), ஒலிப்பு , இந்தியா, குஜராத் மாநிலத்தில் மெக்சனா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். இந்நகரம் அகமதாபாத் நகரிலிருந்து 75 கி. மீ., தொலைவில் உள்ளது. மோதரா சூரியன் கோயில் இந்நகரத்திலிருந்து 20 கி. மீ., தொலைவில் உள்ளது.

வரலாறு

[தொகு]

சௌதா அரச குலப் பரம்பரையில் வந்த மெசாஜி சௌதா எனும் ராஜபுத்திர அரசர், மெகசானா நகரத்தை நிறுவினார். [3] மெகசனாவில் கெயிக்வாட் அரசர்கள் ராஜ்மகால் எனும் அரண்மனையை நிறுவினர்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, மெகசானா நகர மக்கட்தொகை 1,84,133ஆக உள்ளது.[1] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 84.26%ஆக உள்ளது. மொத்த மக்கட்தொகையில் 6 வயதிற்கு குறைவானவர்கள் 9.4%ஆக உள்ளனர். .[1].[4]

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]
  1. ஹிங்லாஜ் மாதா கோயில்
  2. காயத்திரி கோயில்
  3. சுவாமி நாராயணன் கோயில்
  4. அம்பிகா மாதா கோயில்
  5. அய்யப்பன் கோயில்
  6. சிமந்தர் சுவாமி ஜெயின் கோயில்

பொருளாதாரம்

[தொகு]

தொழில்கள்

[தொகு]

பால் உற்பத்தி, வேளாண்மை மற்றும் சாலைகள் அமைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிலகங்கள் அதிகம் கொண்டவை. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய தூத்சாகர் கூட்டுறவு பால் பண்னை இங்கு செயல்படுகிறது.

பால் பண்ணை தொழில்

[தொகு]

அதிக பால் தரும் மெகசானி எனும் உள்ளூர் எருமை உற்பத்திக்கு மெகசனா நகரம் புகழ் பெற்றது. தூத்சாகர் என்றியப்படும் மெகசனா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், ஆசியாவில் மிகப்பெரியது. நாள் ஒன்றுக்கு 1.41 மில்லியன் கிலோ கிராம் பாலை பதனிடுகிறது. 1150 கிராமங்களில் உள்ள 45 இலட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்வதற்கு தேவையான கட்டமைப்பு கொண்டுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு

[தொகு]

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், 6000 கி. மீ., பரப்பளவில் 28 எண்ணெய் வயல்கள், 1967ஆம் ஆண்டில் தொடங்கியது. மேலும் 1311 எண்ணெய்க் கிணறுகளும், நாள் ஒன்றிற்கு 5800 டன் எரிவாயு உற்பத்தி செய்யும் 16 இயற்கை எரிவாயு கிணறுகளும் மெகசனா கொண்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள்

[தொகு]
மெகசானா நகர வழிகாட்டுப் பலகை

சாலைப் போக்குவரத்து

[தொகு]

மெகசனா மாநில நெடுஞ்சாலைகள் பேருந்துகள் மூலம் அகமதாபாத், காந்திநகர், பதான், உஞ்சால், பாலன்பூர் நகரங்களை இணைக்கிறது.

தொடருந்து நிலையம்

[தொகு]

மெகசனா இரயில் நிலையம், இரயில்கள் மூலம், அகமதாபாத், தில்லி, மும்பை, ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  2. "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  3. "Mehsana - History". NRI Division. Government of Gujarat. 2009. Archived from the original on அக்டோபர் 21, 2014. பார்க்கப்பட்ட நாள் March 17, 2013.
  4. Radha Sharma & Bharat Yagnik (13 January 2012). "Mehsana, shame of India!". The Times of India. Archived from the original on 23 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 23 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சனா&oldid=3568406" இலிருந்து மீள்விக்கப்பட்டது