உள்ளடக்கத்துக்குச் செல்

மோர்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோர்பி
நகரம்
அடைபெயர்(கள்): சௌராஷ்டிர தீபகற்பத்தின் பாரிஸ்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்மோர்பி
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்2,50,000
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
363641 & 363642
வாகனப் பதிவுGJ-36

மோர்பி (Morbi or Morvi), இந்தியா, குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இந்நகரம் மச்சு ஆற்றாங்கரையில், சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இது ராஜ்கோட் நகரத்திலிருந்து 60 கி. மீ., தொலைவில் உள்ளது.

இந்நகரத்தில் மச்சு ஆறு பாய்கிறது. பருத்தி, தானியங்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்களாகும்.

ராஜபுத்திர ஜடேஜா மன்னர் குலத்தினர் இந்நகரை தலைநகராகக் கொண்டு, இந்தியா விடுதலைக்கு முன் வரை ஆண்டனர். [1].[2].

பொருளாதாரம்

[தொகு]

மோர்பி நகரம், இந்தியாவின் பீங்கான் பொருட்கள் உற்பத்தியில் 70 விழுக்காடும், உலக அளவில் 5 விழுக்காடும் கொண்டுள்ளது. [3]. இந்தியாவில் தயாரிக்கப்படும் சி எப் எல் மின் விளக்குகள் உற்பத்தியில் 80 விழுக்காடு வரை மோர்பி நகரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மோர்பி, சுவர் கடிகார உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண். 8ஏ மற்றும் மாநில நெடுஞ்சாலை எண். 7, குஜராத் மாநிலத்தின் பிற பகுதிகளை, மோர்பி நகரத்துடன் இணைக்கிறது.

மோர்பி அணை

[தொகு]

மச்சு ஆற்றின் தொங்கு பாலம் விபத்து

[தொகு]

30 அக்டோபர் 2022 அன்று சாத் பூஜையின் போது மோர்பி நகரத்தின் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்ததால், தொங்கு பாலத்தில் நின்றிருந்த 140 மேற்பட்டோர் பலியானர்கள்.[4]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்பி&oldid=4055927" இலிருந்து மீள்விக்கப்பட்டது