பிராக்ஜோதிச நாடு
Appearance
பிராக்ஜோதிச நாடு (Pragjyotisha Kingdom) பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த மகாபாரத இதிகாச கால நாடுகளில் ஒன்றாகும். குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்ட இந்நாட்டின் மன்னர் பகதத்தன் ஆவார்.
வரலாற்று காலத்தில் இந்நாட்டை காமரூபம் என்றும்; தற்காலத்தில் அசாம் என்றும் அழைக்கப்படுகிறது.
மகாபாரத குறிப்புகள்
[தொகு]- தருமனின் இராசசூய வேள்வியின் போது, திறை வசூலிக்க படையுடன் சென்ற அருச்சுனன், பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தனை வென்றார்.[1]
- தருமர் செய்த இராசசூய வேள்வியில் கலந்து கொண்ட மன்னர்கள் பட்டியலில் பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தன் பெயர் உள்ளது. (மகாபாரதம் 2, 33) - (2, 50).
- குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தன் யாணைப்படைத் தலைவராக போரிட்டார்.[2][3]
- குருச்சேத்திரப் போரில் பகதத்தன் அருச்சுனனால் கொல்லப்பட்டார்.
வச்சிரதத்தன்
[தொகு]குருச்சேத்திரப் போருக்குப் பின்னர், பிராக்ஜோதிச நாட்டு மன்னராக பகதத்தனின் மகன் வஜ்ஜிரதத்தன் ஆட்சிக்கு வந்தார். தருமரின் அஸ்வமேத வேள்விக்கான திறையைப் பெற, அருச்சுனன் வஜ்ஜிரதத்தனை வென்றான். (14, 75)
நரகாசுரன்
[தொகு]பிராக்ஜோதிச நாட்டை ஆண்ட நரகாசூரனை, கிருட்டிணன் வென்றார். (5, 48) மற்றும் (12, 339)