தண்டக நாடு
தண்டக நாடு (Danda) பற்றிய செய்திகள் இராமாயண இதிகாசத்தில் உள்ளது. தற்கால தண்டகாரண்யம் பகுதியான தண்டக நாடு, இலங்கை வேந்தன் இராவணனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. இராவணனின் தம்பியர்களான கர – தூசணர்கள் தண்டக நாட்டை ஆண்டனர். தண்டக நாட்டின் தலைநகரான சனத்தானம் தற்கால நாசிக் நகரத்தின் அருகில் அமைந்திருந்தது. தண்டக நாடு அரக்கர்களின் வாழ்விடமாக விளங்கியது.
இராமாயணக் குறிப்புகள்
[தொகு]இராமாயணக் காவியத்தில், பதினான்கு ஆண்டு வன வாசத்தின் போது பஞ்சவடியில் இராமன், சீதை மற்றும் இலக்குமணன் தங்கியிருந்த போது, சூர்ப்பனகையின் தூண்டுதலால், அறுபதாயிரம் படையினருடன் சென்ற கரன் மற்றும் தூசணன் இராமருடன் போரிட்டு அழிந்தனர். மேலும் தண்டக நாட்டில் தனியாக தங்கியிருந்த சீதையை இராவணன் கவர்ந்து இலங்கைக்குச் சென்றான்.
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]சகாதேவனின் படையெடுப்புகள்
[தொகு]தருமன் நடத்திய இராசசூய வேள்விக்கு நிதி திரட்டும் பொருட்டு, பரத கண்டத்தின் தெற்குப் பகுதியில் திக்குவிசயம் செய்த சகாதேவன் அவந்தி நாடு, குந்தி நாடு, சௌராட்டிர நாடு, சூரசேனம், விதர்ப்ப நாடு, சூர்பரக நாடு, கிட்கிந்தை மற்றும் தண்டக நாடுகளை வென்று கப்பம் பெற்ற செய்திகள், சபா பருவம் அத்தியாயம் 30-அ மற்றும் 30ஆ-இல் விளக்கப்பட்டுள்ளது.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]