டோங் மாவட்டம்
டோங் (Tonk) மாவட்டம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். டோங் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இம்மாவட்டம் ஜெய்ப்பூரில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
எல்லைகள்
[தொகு]இம்மாவட்டத்தில் எல்லைகளாக கிழக்கே சவாய் மதோபூர் மாவட்டமும், தென்கிழக்கே கோட்டா மாவட்டமும், வடக்கே ஜெய்ப்பூர் மாவட்டமும், தெற்கே புந்தி மாவட்டமும், தென்மேற்கே பில்வாரா மாவட்டமும், மேற்கே ஆஜ்மீர் மாவட்டமும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,21,711 ஆகும்.[1] இது சுவிசர்லாந்து நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[2] அல்லது அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[3] இங்கு மக்கள் அடத்தி 198 பேர் ஒரு சதுர கிலோமீட்டருக்கு எனும் வீதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 62.46% ஆகும்.[1]
மாவட்டப் பிரிப்பு
[தொகு]இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய கேக்கிரி மாவட்டம் நிறுவப்பட்டது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state