புஷ்கர்
புஷ்கர் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): தீர்த்தராஜ் புஷ்கர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ராஜஸ்தான் |
மாவட்டம் | அஜ்மீர் |
ஏற்றம் | 510 m (1,670 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 14,789 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 305022 |
புஷ்கர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள சிறு நகரம். இந்துக்கள் வழிபடும் முக்கிய புனிதத் தலங்களில் இதுவும் ஒன்று. புஷ்கர் நகரின் புஷ்கரணி எனும் புனித குளமும், பிரம்மன் கோயிலும், ஒட்டகத் திருவிழாவும் புகழ் பெற்றவையாகும். அருகில் உள்ள பெரு நகரம் அஜ்மீர்.
பெயர்க் காரணம்
[தொகு]புஷ்கர் என்றால் சமசுகிருதத்தில் நீலத்தாமரை என்று பொருள்.[1] இந்துக்களின் புராணத்தின்படி, பிரம்மா பூமியில் செய்யவிருக்கும் யாகத்திற்கு இடம் தேவைப்பட்டது. இதனால், அன்னம் தாமரையை இடும் இடத்தை, தேர்வு செய்யலாம் என்ற யோசனை எழவே, அவ்வாறே செய்யப்பட்டது. தாமரை மலர் விழுந்த இடமே புஷ்கர் எனப்பட்டது. தாமரைக் கொடிகள் நிறைந்த குளத்தை புஷ்கரணி என்பர்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, புஷ்கர் நகரத்தின் மொத்த மக்கட்தொகை 14,789, அவர்களில் ஆண்கள் 54%, பெண்கள் 46%. சராசரி எழுத்தறிவு 69%, ஆறு வயதிற்குட்டவர்கள் 14% ஆகும்.[2]
படக்காட்சியகம்
[தொகு]-
புஷ்கரணி அல்லது புனித குளம்
-
குளிர் காலத்தில் புஷ்கர் ஏரி
-
புஷ்கர் ஏரி கோடை காலத்தில்
-
புஷ்கர் குளத்தின் படித்துறைகள்
-
புஷ்கர் ஒட்டகத் திருவிழா
-
புஷ்கர் ஏரியின் ஓரத்தில் அமைந்த பாலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A. Kalyanaraman. Aryatarangini, the saga of the Indo-Aryans, Volume 2. Asia Pub. House, 1970. p. 551.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- Pushkar map Important places in Pushkar பரணிடப்பட்டது 2019-12-03 at the வந்தவழி இயந்திரம்