Anitha's Reviews > ஒற்றன் [Ottran]
ஒற்றன் [Ottran]
by
by
அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சென்று அங்கு ஏழு மாதங்கள் தங்கி இருந்த நாட்களை புனைவாக்கி இருக்கிறார்.
புதிதாக அமெரிக்காவிற்கு செல்பவர்கள் அநேகமாக எல்லோருமே இப்படியான அனுபவங்களை சந்தித்திருப்பார்கள். இதில் புதிதாக எதுவுமில்லை...அப்படித்தான் தோன்றியது முதல் பக்கம் படித்த பொழுது...அதனால் முதல் பக்கத்தோடே புக் மார்க் நீண்ட நாட்கள் உறைந்திருந்தது...அமி என்கிற பெயராலேயே அந்த புக் மார்க் நீண்ட நாட்களுக்கு பின்பு உயிர்த்தெழுந்தது.
அனுபவங்களை தொகுத்து புனைவாக்கி அதை எப்படி வரிசைப்படுத்தவேண்டும், எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும், அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு பாடமே நடத்தி இருக்கிறார் ஆசிரியர்.
நாம் வெவ்வேறு உணவு பழக்க முறை, வாழ்க்கை முறை, ஏற்ற தாழ்வுகள், மதிப்பீடுகள், முகங்கள், நிறங்கள் கொண்ட மனிதர்களாக இருந்தாலும், புலம்பும் பொழுதும், அழும் பொழுதும், ஆறுதல் தேடும் பொழுதும், பொறாமையிலும், கோபத்திலும் என உணர்வுகளில் ஒன்றாகவே இருக்கிறோம்.
அவர் தங்கி இருந்த ஏழு மாதங்களும் உணவு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்திருக்கிறது.
போரிட்ஜ் என்று நினைக்கிறேன் அமெரிக்க பொங்கல் என்கிற அடைமொழியில் சாப்பிட்டிருக்கிறார்...தினசரி உணவாக சீரியல், பால், சக்கரை, காபி அதனோடவே ஏழு மாதங்களை கடத்தி இருக்கிறார்.
அயோவா பல்கலைக்கழகத்தில் புதிதாக வந்து சேர்ந்த இத்தாலிய பெண்ணான இலாரியாவிற்கு அவர் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது...அவருக்காக ஒரு முறை சமைத்து தருகிறாள்...அது வேற விஷயம்...ஆனால் பெண்கள் எந்நாட்டினவராக இருந்தாலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்...ஆண்களிடம் அன்பை காட்ட, அவர்களை அணுகும் வழிகளாக சமையலே முதன்மை இடத்தை பெறுகிறது. அவருக்கு அவள் சமையல் ஒத்துக்கொள்ளாமல் போய் விடுகிறது. அவள் சமையலுக்கு மட்டுமில்லை அவர் மேல் இருந்த ஈர்ப்புக்கும் நாசுக்காக முற்றும் போட்டு விடுகிறார்…
ஒன்று பெண்கள் “டகராஜன்”(தியாகராஜன் அமியின் இயற் பெயர்) மேல் ஈர்ப்பு கொள்கிறார்கள் அல்லது பெண்கள் அவரால் ஈர்க்க படுகிறார்கள் என்று ஆண்கள் பொறாமை கொள்கிறார்கள்.
அநேகமாக எல்லா கடைகளிலுமே அமெரிக்காவில் ரிட்டன் பாலிசி உண்டு...அதிக நாட்கள் தேவைப்படாத, குறைந்த விலையில் பொருட்கள் தேர்வுக்கு கே - மார்ட், வால் - மார்ட் ஒரு வரம். ஆனால் அங்கு ரிட்டன் செய்யும் பொருட்களை பரிசோதித்து பார்க்காமல் எடுத்து கொள்வது எந்த அளவுக்கு திருப்பி கொடுப்பவர்களுக்கு வசதியோ அந்த அளவுக்கு அதே பொருளை வாங்கி செல்பவர்களுக்கு கஷ்டம்.
அயோவாவின் பனி பொழிவை சமாளிக்க கே-மார்ட்டில் அவர் வாங்கிய வின்டர் பூட்ஸ் அவர் காலை பதம் பார்த்து விடுகிறது. யாரோ உபயோகித்து பார்த்துவிட்டு திருப்பி கொடுத்திருந்த பூட்ஸை கடை பணியாளர்கள் சோதித்து பார்க்காமல் அப்படியே விற்பனைக்கு அடுக்கிவிட ...அதில் அவர் வசதிக்காக சொருகி இருந்த அட்டையால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என்று அவருக்கு தெரிய வருவதற்குள் நம் பாத விரல்களே அந்த வலியை உணர்கிற எழுத்து நடை.
போர்ட் காலின்ஸில் இருந்து க்ரீலிக்கு செல்ல பேருந்து நிலையம் வருகிறார். அது கொஞ்சம் உள்ளடங்கிய ஊர்.
சிறு ஊர்களிலும் பெரும்பாலும் கார்கள் உபயோகத்தில் இருப்பதால் அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் அதிக மக்கள் வரத்து இருக்காது. பேருந்து போக்குவரத்து வசதியே அதிகமாக பார்சல் எடுத்து செல்லவே உபயோகப்படும்.
க்ரீலிக்கு சென்று சான்பிரான்ஸ்கோ ட்ரெயின் பிடிப்பதற்காக 6.30 க்கு வந்து காத்திருக்கிறார் ஏழு மணிக்கு பேருந்து என்று போட்டிருக்கிறது ஆனால் அங்கு அதற்கான அடையாளமில்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து பதட்டமடைகிறார். ஒரு லாரி வந்து நிற்பதை அவர் பஸ் இல்லையே இது என்று யோசனையோடு பார்க்கும்போதே … “ஐயோ அது தான் போய் கேளுங்க, விட்டுடாதீங்கன்னு” அடுத்த வரியை முந்திக்கொண்டு கூக்குரலிட்டு கொண்டிருந்தது என் மனது...அந்த அளவுக்கு அந்த பேருந்தை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்தி இருப்பார்.
நம்மூரில் எச்.எம்.டி , டைட்டன் கைக்கடிகாரம் கட்டியவர்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் கைக்கடிகாரத்தின் அளவு மூன்று மடங்கு பெரியது தான். இன்று நிறைய வகைகள் வந்து விட்டாலும் எழுபதுகளில் அது அப்படித்தான் இருந்ததாக கேள்வி. அமி யின் கைக்கடிகாரம் செயலிழந்து விட புது கடிகாரம் வாங்க கே- மார்ட் போகிறார். அதன் அளவை பார்த்து பயந்து பாக்கெட்டில் சொருகி கொள்ள கூடிய பேனாக் கடிகாரம் வாங்கி வருகிறார். வீட்டிற்கு வருமுன்னே அது தொலைந்து விடுகிறது.
பெரும்பாலும் புதிதாக வாங்கிய கோட்டில் கூட உள் பைகளில் முனையில் ஒரு ஓட்டை இருக்கும். லேசாக தையல் விட்டிருக்கும். ஒருவேளை கோட் தயாரிப்பவர்கள் அதை ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்றுவார்கள் போல...நம்மில் பலருக்கு அனுபவத்தில் எப்பொழுதுமே கோட் வாங்கியதும் சோதித்து பார்ப்பது வாடிக்கையாகிவிட்டிருக்கும்.
பேனாக் கடிகாரம் தொலைந்தது என்று படித்தவுடனேயே தோன்றியது “கோட்” என்பதால் அது பையின் ஓட்டையின் வழியே லைனிங்கிற்குள் விழுந்து இருக்கும் என்று...ஆனால் அதை எப்படி சொல்ல போகிறார் என்று ஆர்வத்தோட தொடர்ந்தேன்...
கீழே விழுந்தாலும் சரி, தொலைத்துவிட்டு தேடினாலும் சரி யாருடைய தனிப்பட்ட வாழ்விலும் தலையிடாத மக்கள், அதே சமயம் தங்கள் கடமைகளை சரிவர செய்வார்கள்...ஒரு பயணிக்காக வண்டி எடுப்பார்கள், ஒருவருக்காக மட்டுமே கூட தியேட்டரில் படம் ஓட்டுவார்கள்… அவர் ஏறி சென்றது அன்றைய நாளின் பேருந்துக்கு கடைசி ட்ரிப் ஆகிவிட...பனிபொழிவில் கைவிட்டு தேடியும் பேனா கிடைக்காமல் வீட்டை அடைய ஏழு கிலோமீட்டர் குளிரிலும் பனியிலும் நடந்து வீட்டை வந்தடைந்து பின்பு பொறி தட்ட கோட்டை ஆராயும் வரை... நமக்கு ஏற்கனவே விடை தெரிந்தாலும் சுவாரசியம் குறையாமல் வைத்திருக்கார்.
ஒரே கோட்டையே அங்கிருக்கும் வரை போட்டுக்கொண்டிருக்கும் “ஒற்றன்”என்கிற கதை எழுதும் குபேக்னா, ஹாலிவுட்காரர்களை போல சார்ட் போட்டு, முன் திட்டம் அமைத்து “மகா ஒற்றன்”கதை எழுதும் பிராவோ, இவர்களைவிட “ஒற்றன்”என்கிற இந்த புனைவை எழுதி இருக்கும் அசோகமித்திரன் தான் உண்மையான ஒற்றன்.
ஏழுமாதத்தில் இத்தனை அனுபவங்களா என்று மிக ஆச்சரியமாகவே இருக்கிறது. ஒவ்வொன்றையும் அத்தனை நுணுக்கமாக கவனித்திருக்கிறார். உடையோ, உணவோ, மொழியோ, கலாச்சாரமா, குளிரோ, ஒரு தடையாக கருதாததால் தான் அவரால் இத்தனை அனுபவங்களை, அத்தனை மனிதர்களை சேகரிக்க முடிந்திருக்கிறது.
இந்த கதையில் ஆரம்பம் முதல் முடிவு வரை கதையின் முக்கியமான முடிச்சுகளை, யோசிக்க கூடிய விஷயங்களை அங்கதமாக தூவிக்கொண்டே வந்திருப்பார்.
“அம்மாவின் பொய்கள்” என்கிற பகுதியில் விக்டோரியா ஒரு நாடகம் நடத்துகிறாள் அதை பார்த்து கொண்டிருக்கும் அமி அதில் நடிக்கும் நடுத்தர வயது பெண் பேசும் வசனத்திற்கு மனதிற்குள் பதில் சொல்லி கொண்டிருப்பார். அந்த பகுதி மிக நகைச்சுவையாக சொல்லி இருப்பார்.
////////////நடுவயதுப் பெண்மணி மட்டும் இருமுறை கண் சிமிட்டினாள், தலையை அசைத்தாள், முகத்ததைச் சிணுங்கினாள். ஐந்தாறு வீடு தள்ளியிருந்த ஜன்னலில் தொற்றிக்கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தால். “பெண்களையே சுற்றிக் கொண்டிருந்தாள் உன் காது அறுந்து விழுந்துவிடும்” என்றாள்.
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“இப்படித் தப்புத்தண்டா செய்துகொண்டே இருந்தால் கடவுள் கண்ணைக் குத்திடுவான்.”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“ஓயாமல் தின்னக் கேட்டுக்கொண்டே இருந்தால் வயிற்றுக்கு ஆகாது.” பிறகு தனக்குள் கூறிக்கொள்வது போலச் சொன்னாள்: “இங்கே வீட்டில் தின்ன என்ன இருக்கிறது?”
எனக்கு நிலையே கொள்ளவில்லை. ‘எப்படி’ என்று ரின் சோப் விளம்பரத்தில் மங்கலான சட்டைக்காரர் மின்னலடிக்கும் வெண்மைச் சட்டைக்காரரைப் பார்த்துக் கேட்பது போலத் துடித்தேன்.////////////
இந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்ததும்...நானும் நிமிர்ந்து உட்கார்ந்தேன்… என் அனுபவங்களை அவர் எழுத்தில் பார்த்த போது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது… அது சுவாரசியமாக எனக்குள் ஊடுருவி செல்லும்போதும், அதையே அங்கதமாக நுணுக்கமாக சொல்லும்போதும் வேறு ஒரு பார்வையை காட்டும்போதும் எனக்கு நிலையே கொள்ளவில்லை… ‘எப்படி’ என்று அமியிடம் நானும் ரின் சோப்பு விளம்பரத்தில் கேட்பது போலத் துடித்தேன்.

Sign into Goodreads to see if any of your friends have read
ஒற்றன் [Ottran].
Sign In »
Reading Progress
Finished Reading
September 5, 2017
– Shelved