Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Ashokamitthiran.

Ashokamitthiran Ashokamitthiran > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-27 of 27
“பசிக்கு எந்த விவஸ்வதையும் கிடையாது. சுயமரியாதை, அரசியல், ஜாதி, அந்தஸ்து எதுவும் கிடையாது.”
அசோகமித்திரன் [Ashokamitran], அசோகமித்திரன் குறுநாவல்கள்: முழுத்தொகுப்பு
“பக்கத்து வீட்டுப் பாட்டியை வீட்டில் வந்து இருக்கச் சொல்லிவிட்டு மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு எழும்பூர் ஆஸ்பத்திரி அடைந்து அங்கிருந்த மணியை இழுத்து ஒலித்தான். பிரசவ ஆஸ்பத்திரிகளில் ஏன் ஆராய்ச்சி மணி மாதிரி இப்படியொரு ஏற்பாடு என்று அவனுக்குத் தோன்றியது. உடனே மனுநீதிச் சோழர் ஞாபகம் வந்தது, உடனே தேர்க்காலில் கன்றும் மகனும். இது அவனுடைய கலக்கத்தை அதிகரித்தது. இந்தியாவில் எல்லாக் காலங்களிலும் தெருக்களில் மாடுகள் உலவி வந்திருக்கின்றன என்ற பூர்வமான ஆதாரம் நல்ல சகுனமாக அவனுக்குப் படவில்லை.”
Ashokamitran
“My life had indeed become meaningless to me. Even lack of sleep was not a concern for me; only hunger remained a sensation worthy of articulation. Once that hunger was assuaged, I would return to my inert state.”
Ashokamitran, The Ghosts of Meenambakkam
“அந்தக் குழந்தைக்கும் தன்னைப் போலக் கண்ணீர் வற்றிப் போய் அழமுடியாமல் போக இன்னும் ஐந்தாறு ஆண்டுகளாவது ஆகும். பெண் குழந்தை ஆதலால் பதினைந்து இருபது வயது வரை கூட அழலாம். அதற்கு மேலும் கூட அழலாம். ஆனால் அப்படி அழச் சந்தர்ப்பங்கள், வளர்ந்து வயது முற்றியவர்களுக்கே பொருத்தமான சந்தர்பங்களாக இருக்கும். அந்த அழுகையைப் பிறர் ஆறுதல் கூறித் தணிக்க வேண்டியதில்லை. அது முடியாததும் கூட. அவள் குழந்தையாக இருக்கும் வரையில்தான் அழுகைக்கு ஆறுதல் கூறுவது சாத்தியமும் அவசியமும் ஆகும்.”
அசோகமித்திரன் [Ashokamitran], பறவை வேட்டை
“நீதி ஸ்தலங்கள் எவ்வளவு விதங்களில் பழமையைப் போற்றி பேணும் இடங்களாக இருக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் இந்த பழமைதான் மனிதனின் நியாய உணர்வில் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“நன்றாக வட்ட வடிவமாக இருக்கும் பந்தைச் சமாளிப்பதில் என்ன பெரிய கெட்டிக்காரத்தனம் இருக்கிறது? பிள்ளையார் மோதகம் போல இருக்கும் பந்து கீழே விழுந்தால் என்ன செய்யும், எப்படிப் போகும் என்று யாருக்கும் தெரியாது.”
அசோகமித்திரன் Ashokamithran, ஆடிய ஆட்டமென்ன
“எனக்குச் சுபாவம் என்று ஒன்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவன் ஈடுபடும் வேலை அவனுடைய சுபாவத்தை நிர்ணயித்து விடுகிறது.”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“என்ன ஸ்கோர், முதலில் ஆடியவர்கள் எவ்வளவு அடித்தார்கள் ஒன்றும் தெரியவில்லை. ஒரு கணம் காலையில் ஆடிய கோஷ்டியின் ஓட்டங்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால் கடைசிவரை நானிருந்து ஆட்டத்தைப் பார்க்கப்போவதில்லை, ஸ்கோர் தெரியவேண்டிய அவசியம் என்ன? ஸ்கோர் விவரம் தெரியாமல் வேடிக்கை பார்ப்பதிலும் இன்பம் உண்டு. ஸ்கோர் போன்றவற்றை நாமே கற்பனை செய்துகொண்டு சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு யாதொரு பந்தமும் நினைவுச் சுமையும் இல்லாமல் எழுந்து போவதில் ஓர் அசாதாரண சுதந்திர உணர்வு கிடைக்கிறது. நினைவுகளைக் காட்டிலும் நினைவுகளை அழித்தல் குதூகலம் தரக்கூடியது.”
அசோகமித்திரன் [Ashokamitran], கல்யாணம் முடிந்தவுடன்
“இருநூறு ரூபாய்க்குத் தாளம் போடும் ரகுநாதன் போன்றவர்களுக்கு அம்மாதிரி விடுதிகள் இருப்பதுகூடத் தெரியாமல் போவதுதான் நல்லது. இருப்பாரைப் பார்த்துத்தானே இல்லாமை அதிகம் தெரிகிறது?”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“ஓர் அடிப்படையான நடைப் புரட்சி நிகழாமலேயே இருந்தது. அது கடைசியாக 1967இல் நடந்தது. ‘தலைமுறைகள்’ நாவல் வெளிவந்தது.”
Ashokamitran, படைப்புக்கலை
“Avvaiyar ran for a day less than six months at the Wellington and it was succeeded by another Gemini film which proved a dud. The title of the film was Rajee My Darling. To the hero, maybe, but definitely not to the audience.”
அசோகமித்திரன் [Ashokamitran], My years with Boss: at Gemini Studios
“நாம் வாழ்க்கையின் விஸ்தாரத்தைக் காட்டக் கூடிய நாவல்களைக் காட்டிலும் வாழ்க்கையின் சிறு துகள்களை மட்டும் பிரதிபலிக்கக் கூடும் சிறுகதைகளை அதிகம் வேண்டுபவர்களாக இருக்கிறோம்.”
Ashokamitran, படைப்புக்கலை
“ஐரோப்பிய யுத்தம் முடிந்து, ஜப்பான் யுத்தம் முடிந்து, கொரியா யுத்தம் முடிந்து, சூயஸ் யுத்தம் முடிந்து, பங்களாதேஷ் யுத்தம் முடிந்து, வியட்நாம் யுத்தம் முடிந்து .. எவ்வளவு யுத்தங்கள் முடிந்து விட்டன. இவை தவிர துப்பாக்கி ஏந்தாத யுத்தங்களும்தான் எவ்வளவு நடந்து விட்டன, நடந்து கொண்டிருக்கின்றன.”
அசோகமித்திரன் [Ashokamitran], அந்தரங்கமானதொரு தொகுப்பு
“மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டக்காரர்கள் எப்படியெல்லாம் நேரத்தை வீணாக்கலாமோ அதையெல்லாம் செய்தார்கள். (அப்போது அபராதம் ஏதும் கிடையாது.) ஒரு முறை பவுண்டரிக்குப் போன பந்தை விக்கெட் கீப்பர் வால்காட் போய் எடுத்து வந்தார்.”
அசோகமித்திரன் Ashokamithran, ஆடிய ஆட்டமென்ன
“முதன் முறை ஆஸ்திரேலிய அணியோடு இந்தியர்கள் சந்திப்பு. பிராட்மன் (வெள்ளை) மட்டையெடுத்தபோதெல்லாம் சதம், இரட்டைச் சதம் என்ற வண்ணம் வதம் புரிந்தார்.”
அசோகமித்திரன் Ashokamithran, ஆடிய ஆட்டமென்ன
“1961-62ஆம் ஆண்டுகள் எனக்கு ஒரு திருப்புமுனைக் காலம். உலகமே ஏதோ முடிவுக்கு வந்துவிடப் போகிறது போன்ற எண்ணங்கள். இருமுறை வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டேன். சில கடுமையான நியமங்கள் அனுஷ்டித்து லட்சக்கணக்கில் சில மந்திரங்களை ஜபித்திருந்தேன்.”
Ashokamitran, படைப்புக்கலை
“எழுதுவதுதான் முக்கியம் என்றிருப்பவர்கள் தான் அங்கத்தினராக இருக்க வேண்டும் என்பது தளர்ந்து போய்ப் பல வருஷங்கள் ஆகிவிட்டன சங்கத்திற்கு.”
Ashokamitran, படைப்புக்கலை
“இப்போது நான் பாடும்போது அவரும் சேர்ந்து பாடினார். இருவரும் பாடுவதை வேறு யாரும் கேட்டு விடப் போகிறார்களே என்று நான் பயந்துகொண்டேயிருந்தேன். அப்பயம் நான் ஒவ்வொரு வரி பாடும்போதும் சுருதி அங்குமிங்கும் தாவுவதில் நன்கு வெளிப்பட்டது. தம்பிமுத்துவுக்க்கும் சுருதிக் கட்டுப்பாட்டுகளின் அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க முடியாது. இருவருமாக மனிதக் குரலில் சாத்தியமான எல்லா ஓசைகளையும் எழுப்பித் தீர்த்தோம். தம்பிமுத்து மிகவும் சந்தோஷமாக இருந்தார். சங்கீதம் இவ்வள்வு சக்தி வாய்ந்தது என்று எனக்குத் தெரியாது. "இதாம்பா நான் முதல் தடவை தமிழ்ப்பாட்டு பாடறது” என்று ஒத்துக்கொண்டார்.”
Ashokamitran
tags: humor
“குழந்தைதான் என்றால்கூட அது அழுதால் சகிக்க முடிவதில்லை. ஆனால் மொழியும் சொற்களும் பயன்படாதபோது அழுகைதான் மொழியாக இருக்கிறது. அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது.”
அசோகமித்திரன் [Ashokamitran], பறவை வேட்டை
“நல்ல கதை என்றால் அன்று உலகத்தில் எப்பாகத்திலும் உருவாக்கப்படும் எந்த உயரிய கதையுடனும் ஒப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும்.”
Ashokamitran, படைப்புக்கலை
“வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எழுதப்பட்ட முதல் தொடர்கதை இக் ‘கள்வனின் காதலி’ தான் என்று நினைக்கிறேன்.”
Ashokamitran, படைப்புக்கலை
“நாவலை ஏற்றுக் கொள்ளக் கூடிய பொறுமை, ஒரு நாவலை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தர வேண்டிய உழைப்பு, இவற்றை நாம் மட்டுப்படுத்திக் கொள்கிறோம்.”
Ashokamitran, படைப்புக்கலை
“கல்கி அவர்களின் படைப்புக்களில் நான் ‘தியாக பூமி’யைத்தான் தலைசிறந்ததாகக் கருதுகிறேன். காதல் கதை என்று அப்பட்டமாகத் தோன்ற வைக்காமல் ஆழமான காதலை நுணுக்கமான விவரங்கள் மூலம் சித்திரித்திருக்கிறார்.”
Ashokamitran, படைப்புக்கலை
“ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரிதோ சிறிதோ இருக்கிறது. அதை அவன் விழிப்போடு கைவசம் வைத்துக்கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன்மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன. நீ என்றாவது திவாலாகப் போனால் இதை நினைவு வைத்துக்கொள். நீ ஒரே நாளில் திவாலாகவில்லை.”
Ashokamitthiran, கரைந்த நிழல்கள்
“ஒருத்தன் ஒத்தாசையா இருக்கானே என்பதற்காக அவனுடைய மத்த மோசமான குணங்களை எல்லாம் மறந்துடறதா?"

"யாருக்கு மோசமான குணங்கள் இல்லே உனக்கு இல்லையா, எனக்கு இல்லையா? ஏன் மாலதிக்கே இல்லையா?”
Ashokamitthiran, ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“தமிழில் சர்வதேசத் தரம் முடியாதென்பதில்லை. ஆனால் சர்வதேசத் தரம் கொண்டு வரத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆர்வம் வேண்டும்; அந்த ஆசை வேண்டும்; அந்தத் திருப்தியின்மை வேண்டும்.”
Ashokamitran, படைப்புக்கலை
“நீல. பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ தமிழ் உரைநடைப் போக்கில் முக்கியமானதொரு திருப்புமுனையாகும். பேச்சுத் தமிழ் இலக்கியப் படைப்புக்குரியதே என்று செயல்முறையில் செய்து காட்டிய சாதனை நீல. பத்மநாபனுடையது.”
Ashokamitran, படைப்புக்கலை

All Quotes | Add A Quote