உள்ளடக்கத்துக்குச் செல்

வந்தே மாதரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bônde Mātôrôm/বন্দে মাতরম্

ஆங்கிலம்: Vande Mātaram
வந்தே மாதரம்
இயற்றியவர்பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம்,, 1882
இசைஜாதுனாத் பட்டாச்சாரியா
சேர்க்கப்பட்டதுசனவரி 24, 1950
இசை மாதிரி
Vande Mataram all stanzas(Vocal)

வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম্, Bônde Mātôrôm), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.

வரலாறும் சிறப்பும்

[தொகு]
பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை கட்டாயமாக்கினார்கள்.[1]. பங்கிம் சந்திரர், இப்பாடலை தான் புலமை பெற்றிருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். எனினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.[1]. இப்பாடல், 1882ல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட ஆனந்தமடம் (வங்காள மொழியில் Anondomott என்று உச்சரிக்கப்படுகிறது) என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் 1876லேயே[1] எழுதப்பட்டுவிட்டது. அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார்.[1].

நாட்டளவில், வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.[1].

"இப்பாடல் பிரபலமடைவதை காண நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தியனாலும் பாடப்படும்" என்று தன் பாடல் குறித்து தீர்க்கத்தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர். இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பாடலின் பல்வேறு வடிவ இசைப்பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின. Leader, அமர் ஆஷா, ஆனந்த்மத் ஆகிய திரைப்படங்களில் இப்பாடலுக்கான காட்சியமைப்புகள் இடம்பெற்றன. அனைத்திந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும் வந்தே மாதரப் பாடலுக்கு ரவி சங்கர் இசையமைத்துத் தந்ததாக நம்பப்படுகிறது.[1]. இன்று வரை, வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக கருதப்படுகிறது.

சர்ச்சை

[தொகு]

வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது. இசுலாமியர்கள், வந்தே மாதரப் பாடல், நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக கருதியதால், சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை; தவிரவும், வந்தே மாதரப் பாடல் இடம்பெற்றிருந்த பங்கிம் சந்திரரின் நூல் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் கருதினார்கள்.

1937ல் இந்திய தேசிய காங்கிரஸ், இப்பாடலின் தகுதி நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியது. பாடலின் முதல் இரு பத்திகள் தாய்மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும் பிற பத்திகள் தாய் மண்ணை துர்கையுடன் ஒப்புமைபடுத்துவதாக கருதப்பட்டது. எனவே, பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் நாட்டுப் பாடலாக அறிவிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.

2006ஆம் ஆண்டுச் சர்ச்சை

[தொகு]

வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 7, 2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலைப் பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், பல இசுலாமிய அமைப்புக்கள் இந்தப் பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அடுத்து, சில இசுலாமிய அமைப்புகள், அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டாலும், பல இசுலாமியர்களின் பங்கேற்போடு நாட்டுப் பாடலின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் நிகழ்ந்தன.

வந்தே மாதரம் பாடல் வரிகள்

[தொகு]

1905ல் காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட வரிகள்

[தொகு]

தேவநாகரி எழுத்துக்களில்
वन्दे मातरम्
सुजलां सुफलां मलयजशीतलाम्
शस्य श्यामलां मातरम् |
शुभ्र ज्योत्स्न पुलकित यामिनीम्
फुल्ल कुसुमित द्रुमदलशोभिनीम्,
सुहासिनीं सुमधुर भाषिणीम्
सुखदां वरदां मातरम् ||

வங்காள மொழி எழுத்துக்களில்
বন্দে মাতরম্
সুজলাং সুফলাং মলযজশীতলাম্
শস্য শ্যামলাং মাতরম্ |
শুভ্র জ্যোত্স্ন পুলকিত যামিনীম্
ফুল্ল কুসুমিত দ্রুমদলশোভিনীম্,
সুহাসিনীং সুমধুর ভাষিণীম্
সুখদাং বরদাং মাতরম্ ||

ஆன்ந்தமடம் நூலில் உள்ள முழுவடிவம்

[தொகு]


தேவநாகரி எழுத்துக்களில்
सुजलां सुफलां मलयजशीतलाम्
सस्य श्यामलां मातरंम् .
शुभ्र ज्योत्सनाम् पुलकित यामिनीम्
फुल्ल कुसुमित द्रुमदलशोभिनीम्,
सुहासिनीं सुमधुर भाषिणीम् .
सुखदां वरदां मातरम् ॥

सप्त कोटि कन्ठ कलकल निनाद कराले
द्विसप्त कोटि भुजैर्ध्रत खरकरवाले
के बोले मा तुमी अबले
बहुबल धारिणीम् नमामि तारिणीम्
रिपुदलवारिणीम् मातरम् ॥

तुमि विद्या तुमि धर्म, तुमि ह्रदि तुमि मर्म
त्वं हि प्राणाः शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारै प्रतिमा गडि मन्दिरे-मन्दिरे ॥

त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी
कमला कमलदल विहारिणी
वाणी विद्यादायिनी, नमामि त्वाम्
नमामि कमलां अमलां अतुलाम्
सुजलां सुफलां मातरम् ॥

श्यामलां सरलां सुस्मितां भूषिताम्
धरणीं भरणीं मातरम् ॥

வங்காள மொழி எழுத்துக்களில்
সুজলাং সুফলাং মলয়জশীতলাম্
শস্যশ্যামলাং মাতরম্॥
শুভ্রজ্যোত্স্না পুলকিতযামিনীম্
পুল্লকুসুমিত দ্রুমদলশোভিনীম্
সুহাসিনীং সুমধুর ভাষিণীম্
সুখদাং বরদাং মাতরম্॥

কোটি কোটি কণ্ঠ কলকলনিনাদ করালে
কোটি কোটি ভুজৈর্ধৃতখরকরবালে
কে বলে মা তুমি অবলে
বহুবলধারিণীং নমামি তারিণীম্
রিপুদলবারিণীং মাতরম্॥

তুমি বিদ্যা তুমি ধর্ম, তুমি হৃদি তুমি মর্ম
ত্বং হি প্রাণ শরীরে
বাহুতে তুমি মা শক্তি
হৃদয়ে তুমি মা ভক্তি
তোমারৈ প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে॥

ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী
কমলা কমলদল বিহারিণী
বাণী বিদ্যাদায়িনী ত্বাম্
নমামি কমলাং অমলাং অতুলাম্
সুজলাং সুফলাং মাতরম্॥

শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাম্
ধরণীং ভরণীং মাতরম্॥

தமிழாக்கம்

[தொகு]

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள்

பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்

  1. 1 மூலக் கவிதை - http://sank.tripod.com/india.html
  2. 2 வங்காளி மொழியில் 'அபலா ' என்ற சொல் 'பெண் ', 'வலிமையற்றவள் ' என்று இரு பொருள் படும்

தமிழாக்க ஆதாரம் - ஜடாயு

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Suresh Chandvankar, Vande Mataram பரணிடப்பட்டது 29 ஆகத்து 2006 at the வந்தவழி இயந்திரம் (2003) at Musical Traditions (mustrad.org.uk)

குறிப்புகள்

[தொகு]
  1. Much Ado About A Song, The Times of India, பெங்களூர், ஆகஸ்ட் 31, 2006.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தே_மாதரம்&oldid=3521722" இலிருந்து மீள்விக்கப்பட்டது