உள்ளடக்கத்துக்குச் செல்

முதுகுளத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுகுளத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் முதுகுளத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி முதுகுளத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

இராஜ கண்ணப்பன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

14,789 (2011)

640/km2 (1,658/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 23.10 சதுர கிலோமீட்டர்கள் (8.92 sq mi)
குறிப்புகள்
  • www.townpanchayat.in/mudukulathur

முதுகுளத்தூர் (:Mudukulathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். இது இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முதுகுளத்தூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சியில் 3,559 வீடுகளும், 14,789 மக்கள்தொகையும் கொண்டது.[4]

இது 23.10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இந்த பேரூராட்சி முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

முக்கிய பயிர்

[தொகு]

இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்கள்

முதுகுளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி, பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி, பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி, கண்ணா மெட்ரிக் பள்ளி, பள்ளிவாசல் மெட்ரிக் & நர்சரி பள்ளி உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன.

கலைக்கல்லூரி

முதுகுளத்தூர் நகரில் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

ஐ.டி.ஐ.

அரசு தொழிற்பயிற்சி பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. முதுகுளத்தூர் நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. முதுகுளத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகுளத்தூர்&oldid=4070615" இலிருந்து மீள்விக்கப்பட்டது