உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1947 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜாஸ் பாடகர் பில்லி ஹாலிடே பாடிய போது

ஓசையுடன் தூக்கிப் பாடப்படுவது பாட்டு (song) இஃது ஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை, உணர்ச்சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள நீண்ட செய்யுள்களைப் பாட்டு எனவும்எட்டுத்தொகை நூலில் உள்ள செய்யுள்களைப் பாடல் எனவும் வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

ஒலிநயம் உள்ள சொற்களைக் கோர்த்து உணர்ச்சியையும் கற்பனையையும் கருத்தையும் சில பரவலான யாப்பு வடிவங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தலை பாட்டு எனலாம். இது வாய்மொழி இலக்கியமாகவோ அல்லது எழுத்து இலக்கியமாகவோ அல்லது இரண்டாகவும் அமையலாம். பொதுவாக பாட்டு இசையுடன் பாடப்படும்.

வகைகள்

[தொகு]

கலைப் பாடல்

[தொகு]
நாச்சட் அன்ட் டிரய்யூம் என்ற தலைப்பில் கலைப் பாடல் .

கலைப் பாடல் (Art songs) என்பது கின்னரப்பெட்டி துனைகொண்டு தனி நபரால் பாடப்படும் பாடல் ஆகும். கலைப் பாடலுக்கு நல்ல குரல்வளமும், மொழிவளமும் தேவை.

மொழிகள்

[தொகு]

கலைப் பாடல் என்பது பல்வேறு மொழிகளில் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி நாட்டில் உருவாக்கப்படுகின்ற பாடல்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டில் ஆங்கில கலைப் பாடல்

[தொகு]

16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாலிபோனிக் இசையானது உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் வீணை இசைக்கருவியானது புகழ்பெறத் தொடங்கியது, 1600 ஆம் ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலான மக்கள் வீணையினை வாசிக்கக் கற்றிருந்தனர்.

17 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளர்கள்

[தொகு]

20 ஆம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள்

[தொகு]
  • ரோஜர் கில்லர் (1877-1953)
  • பிராங்க் பிரிட்ஜ் (1879-1941)
  • ஜான் அயர்லாந்து (1879-1962)
  • அர்னால்டு பாக்ஸ் (1883-1953)
  • ஜார்ஜ் பட்டர்வொர்த் (1885-1916)
  • இவோர் குர்னே (1890-1937)
  • ஹெர்பர்ட் ஹோவெல்ஸ் (1892-1983)
  • பீட்டர் வார்லாக் (1894-1930)
  • மைக்கேல் ஹெட்(1900-1976)
  • எரிக் தியமன் (1900-1975)
  • ஜெரால்ட் பின்சி (1901-1956)
  • பெஞ்சமின் பிரிட்டென் (1913-1976)
  • வில்லியம் வால்டன் (1902-1983)

நாட்டார் பாடல்

[தொகு]
நாட்டார் இசை
1908 ஆம் ஆண்டில் ஸ்லோவக்கில்விவசாயிகளின் பாடல்களை பதிவு செய்தபோது
பாரம்பரியம்பாரம்பரிய நாட்டார் இசை மரபுகளின் பட்டியல்
இசைக் கலைஞர்கள்நாட்டார் இசைக் கலைஞர்களின் பட்டியல்
இசைக் கருவிகள்நாட்டார் இசைக் கருவிகள்
மற்ற தலைப்புகள்
  • சமகால நாட்டுப்புற இசை
  • பிரபலமான இசை
  • மறுமலர்ச்சி
  • நாட்டுப்புற இசை

நாட்டார் பாடல் என்பது பாரம்பரிய மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி பெற்ற இசையின் கலவையாகத் தற்போது உள்ளது. நாட்டார் பாடல் என்ற சொற்கூறு 19-ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது, ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் இவ்வகையான இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டார் பாடல்களானது பலவகைகளில் அறியப்படுகிறது. அவையாவன,

  • வாய்மொழியாக பாடப்படுவது,
  • அறியப்படாத நபர்களால் பாடப்படுவது,
  • இலக்கிய நயம் வாய்ந்த (கிளாசிக்கல்), வர்த்தக ரீதியாக பாடப்படும் பாடல்களுக்கு இவை எதிரானவை ஆகும்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரம்பரிய நாட்டார் பாடலில் இருந்து நவீன வடிவத்திற்கு மாற்றம் பெறத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு நாட்டார் இசைக்கான இரண்டாவது மறுமலர்ச்சியாக அறியப்படுகிறது. 1960 களில் இவ்வகையான இசை உச்சத்திலிருந்தது. இதன் வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவை சில நேரங்களில் சமகால இசையாகவும் கருதப்படுகின்றன.

பாரம்பரிய நாட்டார் பாடல்

[தொகு]
பாரம்பரிய நாட்டார் இசை
நாகரிகம் துவக்கம்
பாரம்பரிய இசை
மண்பாட்டு தொடக்கம்
அறியப்படாத நாடுகள் அல்லது பிரதேசங்கள்
இசைக்கருவிகள்
நாட்டார் இசைக் கருவிகள்
Derivative forms
  • பிரபலமான இசை
  • தற்கால இசை
இசை வகை
மற்றவை
நாட்டார் இசை மறுமலர்ச்சி

பாரம்பரிய நாட்டார் பாடலுக்கான விளக்கங்கள் தெளிவில்லாமல் அல்லது மழுப்புகின்ற அளவில் உள்ளது. [1] நாட்டார் இசை, நாட்டார் பாடல், நாட்டுப்புற நடனம் என்ற பல பெயர்களில் தற்போதைய பயன்பாட்டில் உள்ளது. இவைகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் என்பதன் உட்பிரிவுகளாகவே கருதப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல்1846 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தொல்பொருள் ஆய்வாளரான வில்லியம் தாம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவருடைய கூற்றுப்படி நாட்டுப்புறவியல் என்பது மக்கள் தங்களின் மரபு, பழக்கவழக்கங்கள் , மற்றும் மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விளக்குவதற்காகப் பாடப்படுவது ஆகும் எனக் கூறியுள்ளார். நாட்டார் இசை என்பது நாட்டின் பல்வேறு இசைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியது ஆகும். [2]

இரண்டு நூற்றாண்டுகள் ஆன பின்பும் இதற்கான ஒரு தெளிவான வரையறை கிடைக்கவில்லை.[3] நாட்டார் இசைக்கு என சில பண்புகள் இருந்தாலும் அவை முழுமையான இசை என்று அறியப்படுவதற்குப் போதுமானவையாக இல்லை என கூறப்படுகிறது. [4] அறியப்படாத நபர்களால் பாடப்பட்ட பாடல் என்பதே இதற்கான விளக்கமாகப் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. [5]

பண்புகள்

[தொகு]

பின்வரக்கூடிய பண்புகள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நாட்டார் இசைக்கான பண்புகளாகப் பார்க்கப்படுகின்றன.[6]

  • இவ்வகையான பாடல்கள் வாய்மொழியாகவே பரப்பப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இருந்த பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் எழுத்தறிவு அற்றவர்களாகவே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடமிருந்து அந்தப் பாடல்களை அவர்கள் பாடும் போது அதைக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டனர். மேலும் இவ்வகையான பாடல்கள் நூல்களின் வாயிலாகவோ அல்லது தகவல் பரிமாற்ற ஊடகங்கள் வாயிலாகவோ பரிமாற்றம் செய்யப்படவில்லை.
  • இவ்வகையான இசை பெரும்பாலும் அவர்களுடைய பண்பாடுகளுடன் தொடர்புடையது. குறிப்பாக அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தோடு தொடர்புடையது ஆகும். புலம்பெயர்ந்த மக்களால் இவை பாடப்பட்ட போது இந்த இசையின் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாகக் கிரேக்க ஆசுத்திரேலியர்கள், சோமாலிய அமெரிக்கர்கள், பஞ்சாபிய கனடா மக்கள் போன்றவர்களின் பாடல்கள். இவர்கள் இநதவகையான இசை,நடனம் போன்றவற்றை தங்களுடைய மூதாதையர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட நிகழ்வினை போற்றும் வகையில் இவ்வகையான பாடல்களைப் பாடுகின்றனர். வருடத்தின் சில முக்கிய நாட்களான உயிர்ப்பு ஞாயிறு, மே நாள், கிறித்துமசு, மேலும் ஒரு சில பாடல்கள் வருடத்தின் சுழற்சி முறையில் ஏற்படும் நாட்களை நினைவு கூறும் வகையில் அமைகின்றது. திருமணம், பிறந்தநாள், இறந்தோர் நாள் போன்ற நாட்களிலும் அதற்கேற்ற இசை, நடனம் போன்றவைகளும் இடம்பெறுகின்றன. மதத் திருவிழாக்கள் நடைபெறும்போது நாட்டார் இசை நிகழ்ச்சிகள் அங்கே நடைபெறும். அந்த இசை நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மற்றும் தொழில்முறை அல்லாத பாடகர்கள் அனைவரும் இணைந்து தங்களுடைய மகிழ்ச்சியினை இசையின் மூலமாக வெளிப்படுத்துவர்.
  • இவ்வகையான பாடல்களுக்கு பதிப்புரிமை கிடையாது.

இந்திய நாட்டார் இசை

[தொகு]
தம்புரா மீட்டும் பெண் 1735

இந்திய நாட்டுப்புற இசை ( Indian folk music) இந்தியாவின் பரந்த கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாகப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. இது, பாங்கரா (நடனம்) லாவணி, தாண்டியா, மற்றும் ராஜஸ்தானி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது. மற்றும் பரப்பிசை போன்றவற்றின் வருகையால் நாட்டார் இசையின் புகழ் குறையத் தொடங்கியது. இந்தியாவில் நாட்டார் இசை என்பது நடனம் சார்ந்தது ஆகும்.

வழங்கப்படும் பெயர்கள்
[தொகு]

பாங்கரா

[தொகு]
பாங்கரா
நாகரிகம் துவக்கம்
பாரம்பரிய பஞ்சாபிய இசை, பாப் இசை
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
குரல், தபேலா, முரசு, தால், டம்பி, சாரங்கி, மின் கிதார், ஒலி கிதார், சிதார், வயலின், தோல்கி
Derivative formsபாங்கரா (நடனம்)
மண்டல நிகழ்வுகள்
பாக்கித்தான், இந்தியா

முதன்மை கட்டுரை : பாங்கரா (இசை)

பாங்கரா: பஞ்சாபி குடியேறிய பஞ்சாபிய (இந்தியா) இளைஞர்களுடன் தொடர்புடையது. இது இந்தியா, பாக்கித்தான் நாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களால் 1970 ஆம் ஆண்டு உருவாகியது.

கர்பா

[தொகு]
கர்பா
ગરબા
வதோதராவில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவின் போது ஒரு தம்பதியின் கர்பா நடனம்
சொற்பிறப்புgárbha, என்ற சொல்லில் இருந்து வந்தது [7]
தோற்றம்குஜராத், இந்தியா

கர்பா (பாடல்) நவராத்திரி காலத்தில் இந்து கடவுள்களை வணங்கும் பொருட்டு பாடப்படுவது ஆகும். கிருட்டிணன், அனுமன், இராமன், மற்றும் பிற கடவுள்களை போற்றி பாடுகின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. முடிவில்லா மறுமலர்ச்சி - மைக்கேல் எஃப். ஸ்கல்லி The சிக்காகோ பல்கலைக்கழகம் 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-03333-9
  2. முடிவில்லா மறுமலர்ச்சி - மைக்கேல் எஃப். ஸ்கல்லி The சிக்காகோ பல்கலைக்கழகம் 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-03333-9 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-03333-9
  3. மிடில்டன் , ரிச்சர்டு, பிரபலமான இசையை கற்றல்- Open University Press (1990/2002). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-335-15275-9, p. 127.
  4. தி ஆக்ஸ்ஃபோர்டு கம்பெனியன் டூ மியூசிக் 1977, கட்டுரை நாட்டார் பாடல்
  5. ரொனால்டு டி. கோஹென் நாட்டார் பாடல் : அறிமுகம் (CRC Press, 2006), pp. 1–2.
  6. மில்ஸ் இசபெல்லா 1974 தெ ஹார்ட் ஆஃப் தெ ஃபோக் சாங்Mills, Isabelle (1974). http://cjtm.icaap.org/content/2/v2art5.html பாரம்பரிய இசை பற்றிய கனடாவின் அறிக்கை Vol. 2
  7. Lanman, Charles Rockwell (1884). A Sanskrit Reader: with vocabulary and notes, Parts 1-2. Boston: Ginn, Heath, & Company. p. 149. பார்க்கப்பட்ட நாள் 26 January 2017.
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டு&oldid=2950999" இலிருந்து மீள்விக்கப்பட்டது