தாகோத்
தாகோத்
दाहोद દાહોદ | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | தாகோத் மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 79,185 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சலக சுட்டு எண் | 389151 |
தொலைபேசி குறியீடு எண் | 91 2673 |
வாகனப் பதிவு | GJ 20 |
தாகோத் (Dahod) , இந்தியா, குஜராத் மாநில தாகோத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமாகும். தாகோத் நகரம் துதிமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் வேறு பெயர் தோஹாத். குஜராத்தி மொழியில் தோஹாத் எனில் இரண்டு எல்லைகள் கொண்டது எனப் பொருள். ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லைப்புறத்தில் அமைந்த நகரம் தாகோத். தாகோத் நகரம், குஜராத் மாநிலதின் ஒரு முன் மாதிரி நகரமாக விளங்குகிறது. இது மொகலாய மன்னர் ஔரங்கசீப்பின் பிறந்த நகரம்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கீட்டின்படி இந்நகர மக்கள் தொகை 7,91,685 ஆகும்.[1] ஆண்கள் 52%ஆகவும், பெண்கள் 48%ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 45.65%. இது தேசிய எழுத்தறிவு விகிதம் 59.5%ஐ விட குறைவானதாகும்.
போக்குவரத்து வசதிகள்
[தொகு]தாகோத் நகரம், இருப்புப் பாதைகள் மூலம், மும்பை, தில்லி, அகமதாபாத், போபால், இந்தூர், குவாலியர், ஜபல்பூர், உஜ்ஜையினி, ரத்லம், கான்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், கோட்டா ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது.
சாலைகள், அகமதாபாத், வதோதரா மற்றும் இந்தூர் நகரங்களை இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999%7Carchiveurl=http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999%7Carchivedate=2004-06-16%7Ctitle=[தொடர்பிழந்த இணைப்பு] Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}
வெளி இணைப்புகள்
[தொகு]- தாகோத் நகர இணையதளம் பரணிடப்பட்டது 2013-02-07 at the வந்தவழி இயந்திரம்
- www.dahod.com
- Kasba Dahod