சனவரி 23
Appearance
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 23 (January 23) கிரிகோரியன் ஆண்டின் 23 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 342 (நெட்டாண்டுகளில் 343) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 393 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார்.
- 1368 – சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.
- 1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.
- 1570 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1579 – நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது.
- 1719 – புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது.
- 1750 – அழகுமுத்துக்கோன் கட்டாலங்குள மன்னராக முடிசூட்டிக்கொண்டு எட்டயபுரம் பாளையத்தை ஆட்சி செய்தார்.
- 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1793 – உருசியாவும் புருசியாவும் போலந்தைப் பிரித்தன.
- 1816 – கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கனும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[1]
- 1833 – போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.
- 1846 – தூனிசியாவில் அடிமை வணிகம் ஒழிக்கப்படட்து.
- 1870 – அமெரிக்கா, மொன்ட்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 அமெரிக்கப் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1874 – விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் உருசியாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.
- 1899 – முதலாவது பிலிப்பீன் குடியரசு நிறுவப்பட்டது. எமிலியோ அகுயினால்டோ அதன் முதலாவது அரசுத்தலைவராகத் தெரிவானார்.
- 1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகளுக்கு எதிரான சமரில் தென்னாபிரிக்கக் குடியரசு, ஆரஞ்சு விடுதலைப் படைகள் வென்றன.
- 1924 – விளாதிமிர் லெனின் சனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- 1937 – லியோன் திரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஆட்சிக்குட்பட்ட நியூ கினி மீதான சப்பானிய முற்றுகை ஆரம்பமானது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாட்சிகளிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது.
- 1950 – இசுரேலின் சட்டசபை எருசலேமை இசுரேலின் தலைநகராக அறிவித்தது.
- 1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 1958 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அதன் அரசுத்தலைவர் மார்க்கோசு சிமேனசு நாட்டை விட்டு வெளியேறினார்.
- 1963 – கினி-பிசாவு விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1973 – வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
- 1996 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
- 1998 – யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.
- 2003 – பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசித் தடவையாக மிகவும் மெலிதான சமிக்கை கிடைத்தது.
- 2005 – திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.
- 2018 – அலாஸ்கா வளைகுடாவில் 7.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது. ஆனாலும் பெரும் சேதம் ஏற்படவில்லை.
பிறப்புகள்
- 1814 – அலெக்சாண்டர் கன்னிங்காம், பிரித்தானியத் தொல்லியலாளர், படைத்துறைப் பொறியாளர் (இ. 1893)
- 1832 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (இ. 1883)
- 1833 – முத்து குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1879)
- 1838 – மேரியான் கோப், செருமானிய-அமெரிக்கக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1918)
- 1862 – டேவிடு இல்பேர்ட்டு, உருசிய-செருமானியக் கணிதவியலாளர் (இ. 1943)
- 1869 – எர்பெர்ட்டு குரோலி, அமெரிக்க கல்வியாளர், இதழாளர் (இ. 1930)
- 1893 – ஆர். அனந்த கிருஷ்ணர், ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (இ. 1979)
- 1894 – ஜோதிர்மாயி தேவி, இந்திய எழுத்தாளர் (இ. 1988)
- 1897 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1945)
- 1907 – ஹிடேகி யுகாவா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர் (இ. 1981)
- 1926 – பால் தாக்கரே, இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 2012)
- 1930 – டெரெக் வால்காட், நோபல் பரிசு பெற்ற செயிண்ட் லூசிய எழுத்தாளர் (இ. 2017)
- 1971 – நிரோஷா, தென்னிந்திய திரைப்பட நடிகை
- 1983 – நாரா லோகேசு, இந்திய அரசியல்வாதி
- 1984 – விமலா ராமன், தெனிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1622 – வில்லியம் பாஃபின், ஆங்கிலேய நாடுகாண் பயணி (பி. 1584)
- 1744 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1668)
- 1791 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய கிறித்தவ மதப் போதகர், தமிழறிஞர் (பி. 1711)
- 1944 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (பி. 1863)
- 1966 – த. மு. சபாரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, சட்டவறிஞர் (பி. 1895)
- 1967 – அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், கருநாடக இசை வித்துவான் (பி. 1890)
- 1975 – தியடோர் சாமர்வெல், ஆங்கிலேய மருத்துவர், மலை ஏற்ற வீரர், ஓவியர் (பி. 1890)
- 1989 – சால்வதோர் தாலீ, எசுப்பானிய ஓவியர் (பி. 1904)
- 2002 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மானிடவியலாளர் (பி. 1930)
- 2002 – ரோபேர்ட் நோசிக், அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1938)
- 2014 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (பி. 1953)
- 2015 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (பி. 1924)
- 2015 – இரா. இளவரசு, தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1939)
- 2017 – யாரொசுலாவ் வாச்செக், செக் தமிழறிஞர், இந்தியவியலாளர் (பி. 1943)
சிறப்பு நாள்
- சுபாசு சந்திர போசு ஜெயந்தி (ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்காளம்)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.