குவாங் கொமுட்டர் நிலையம்
குவாங் Kuang | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
குவாங் கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 48050, குவாங், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°15′29″N 101°33′18″E / 3.25806°N 101.55500°E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
தடங்கள் | கிள்ளான் துறைமுக வழித்தடம் கேடிஎம் கொமுட்டர் | ||||||||||
நடைமேடை | 2 நடை மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KA09 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1892 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
குவாங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kuang Commuter Station மலாய்: Stesen Komuter Kuang); சீனம்: 匡通勤站) என்பது மலேசியா, பேராக், கோம்பாக் மாவட்டம், குவாங் நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். குவாங் நகரத்தின் பெயர் இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.[1]
மலேசியாவில் மிகப் பழைமையான தொடருந்து நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பின்னர் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், 1995-ஆம் ஆண்டில், கோலா குபு பாரு, ராசா; செரண்டா; ரவாங், பத்தாங்காலி, சுங்கை பூலோ நகரங்களில் இருக்கும் கொமுட்டர் நிலையங்களுடன் இதன் சேவைகள் இணைக்கப்பட்டன.[2]
பொது
[தொகு]2015-ஆம் ஆண்டில் இருந்து, இந்த நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[3]
கிள்ளான் துறைமுக வழித்தடம்
[தொகு]இந்த நிலையம் காலனித்துவ காலத்தில் பத்து ஆராங் மற்றும் பெஸ்தாரி ஜெயா வரையிலான 23 கி.மீ நீளமுள்ள கிளைப் பாதையின் தொடக்கமாகச் செயல்பட்டது. 1971-ஆம் ஆண்டில், அந்தப் பாதை மூடப்பட்டது.[4]
கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் உள்ள மற்ற பெரும்பாலான நிலையங்களைப் போலவே இந்த நிலையத்திலும் இரண்டு நடைபாதைகள் உள்ளன. அத்துடன் (கேடிஎம் கொமுட்டர் தொடருந்துச் சேவைகளும் உள்ளன. பழைய தொடருந்து நிலையம் உடைக்கப்பட்டு விட்டது.
அடிப்படை வசதிகள்
[தொகு]இந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[5]
சேவைகள்
[தொகு]குவாங் கொமுட்டர் நிலையம், குவாங் நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் குவாங் நகரத்திற்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. குவாங் நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் குவாங் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.
கோம்பாக் மாவட்டம்
[தொகு]பேராக், கோம்பாக் மாவட்டத்தில் குவாங் நகரின் மேற்குப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை மலேசியக் கூட்டரசு சாலை 1-இன் வழியாகவும் அணுகலாம். தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை வழியாகவும் அணுகலாம். கிள்ளான் துறைமுக நிலையத்திற்கான நேரடிச் சேவைகள் 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "he Kuang KTM Komuter Station (formerly Kuang Railway Station) is a KTM commuter train halt located in the northern area of Kuala Lumpur along the Seremban Line. The Station was rebuilt and electrified on November 1995". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- ↑ "The KTM Kuang Railway Station (Stesen Keretapi Kuang) is located in the district of Gombak, Selangor and is a commuter train stop on the Tanjung Malim to Port Klang Line / Route (Laluan) with regular services to Kuala Lumpur city centre via KL Sentral railway station". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- ↑ "On April 21, 2007, a shuttle service between Rawang and Rasa was launched. The service, which extends the KTM Komuter network by 22 km, covers three new stations, namely Serendah, Batang Kali and Rasa". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.
- ↑ "Its main importance in older times was the starting of the railway branch to Batu Arang from the mainline of Malayan Railways". பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- ↑ "KTM Komuter - Kuang Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 21 December 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.
- "KTM Komuter service to Tanjung Malim, Perak (Perkhidmatan KTM Komuter Ke Kuala Kubu Bharu)". Official Keretapi Tanah Melayu website. 1 June 2008. பார்க்கப்பட்ட நாள் 3 June 2008.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kuang Komuter station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Kuang KTM Railway Station