குவாங்
குவாங் Kuang | |
---|---|
ஆள்கூறுகள்: 3°15′N 101°33′E / 3.250°N 101.550°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கோம்பாக் மாவட்டம் |
நிர்வாக மையம் | செலாயாங் |
அரசு | |
• நகராட்சி | செலாயாங் நகராட்சி (Selayang Municipal Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் |
அஞ்சல் குறியீடு | 48050 |
தொலைபேசி எண்கள் | +60-6037 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mps |
குவாங் (மலாய்: Kuang; ஆங்கிலம்: Kuang; சீனம்: 轟埠); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், கோம்பாக் மாவட்டத்தில் (Gombak District); செலாயாங் நகராட்சியில் (Majlis Perbandaran Selayang) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ. மேற்கே உள்ளது.[1]
முன்பு காலங்களில் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Malayan Railways) வடக்கு தெற்கு தொடருந்து பாதையில் இருந்து பத்து ஆராங் (Batu Arang) வரையில் ஒரு புதிய கிளைப் பாதை தொடங்கப்பட்டது.
அப்போது அந்தப் பாதை குவாங் நகரத்தைக் கடந்து சென்றது. அதில் இருந்து இந்த நகரம் புவியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.
பொது
[தொகு]இன்றைய நிலையில், சி.ஐ.எம்.ஏ. (Cement Industries of Malaysia Berhad) (CIMA) எனும் பைஞ்சுதை (Cement) தயாரிப்பு நிறுவனம் குவாங்கின் முக்கியத் தொழில் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் ஏறக்குறைய 1000 பேர் வேலை செய்கிறார்கள்.
பலர் குவாங்கில் தங்கி வேலை செய்கின்றனர். மேலும் பலர் சுங்கை பூலோ; கெப்போங்; ரவாங் பகுதிகளில் தங்கி, இங்கு வந்து வேலை செய்கிறார்கள்.[2]
போக்குவரத்து
[தொகு]சிற்றுந்து
[தொகு]குவாங் நகருக்கு கத்தரி பெருவழி விரைவுச்சாலை (Guthrie Corridor Expressway); அல்லது வடக்கு-தெற்கு விரைவுச்சாலை 1 (North–South Expressway Northern Route); அல்லது கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை (Kuala Lumpur–Kuala Selangor Expressway) (LATAR); ஆகிய சாலைகளின் வழியாகச் செல்லலாம்.
தொடருந்து
[தொகு]KA09 குவாங் கொமுட்டர் நிலையம் வழியாக கிள்ளான் துறைமுகத்திற்கு செல்லலாம்.
குவாங் தமிழ்ப்பள்ளி
[தொகு]குவாங் தமிழ்ப்பள்ளியில் 179 மாணவர்கள் பயில்கிறார்கள்; 16 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள். [3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD7453 | குவாங் | SJK(T) Kuang[4] | குவாங் தமிழ்ப்பள்ளி | 48050 | ரவாங் | 179 | 16 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Distance Kuang - Kuala Lumpur: A distance along the route Kuang (Malaysia) - Kuala Lumpur (Malaysia) ~ 33.9 km (18.019759 miles) Calculation of distances Kuang Kuala Lumpur, km, show route on the map, road maps". en.cutway.net. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ "Cement Industries of Malaysia Berhad (CIMA) is Malaysia's dynamic and progressive construction material partner, having been involved in various iconic infrastructure projects which have redefined the country's construction landscape since 1975". v5 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ "குவாங் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kuang தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.