ஆமணி
ஆமணி | |
---|---|
பிறப்பு | மஞ்சுளா 16 நவம்பர் 1973 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | மீனாட்சி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990– தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | (தி.2002-தற்போது வரை) |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | நந்தி (2 முறை), பிலிம்பேர் (1 முறை) |
ஆமணி (Aamani, பிறப்பு 16 நவம்பர் 1973) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தோன்றினார்.[1] இ. வீ. வெ. சத்யநாராயணா இயக்கிய தெலுங்கு படமான ஜம்ப லக்கிடி பாம்பாவில் நரேஷுக்கு ஜோடியாக முன்னணி கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானார். திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
பாபு இயக்கிய மிஸ்டர் பெல்லாம் படத்தில் இவர் நடித்தார். இது தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை சுப லக்னம் படத்திற்காகவும், சுப சங்கல்பம் மற்றும் மிஸ்டர் பெல்லாம் படங்களுக்கான சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார் .
திரைப்பட வாழ்க்கை
[தொகு]ஆமணி பெங்களூரில் பிறந்தார். ஆடதி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இதனையடுத்து, விஷ்ணுவர்தன், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, கிருஷ்ணா, மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஜெகபதி பாபு, கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் முன்னணி நடிகையாக நடித்தார். தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை சுப லக்னம் படத்திற்காகவும், சுப சங்கல்பம், மிஸ்டர் பெல்லம் படங்களுக்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதை வென்றார் . பல வருட இடைவெளிக்குப் பிறகு, ஆ நலுகுரு படத்தில் நடித்தார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் பெங்களூரில் பிறந்தார். இவரது கணவர் ஒரு தொழிலதிபர். நடிப்பு வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டதால், பத்தாம் வகுப்புக்குப் பிறகு கல்வியை தொடரவில்லை. இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
1990 | புதிய காற்று | தமிழ் | ( "மீனாட்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது) | |
1991 | ஒண்ணும் தெரியாத பாப்பா | தமிழ் | ( "மீனாட்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது) | |
1991 | தங்கமான தங்கச்சி | தமிழ் | லட்சுமி ( "மீனாட்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது) | |
1992 | ஆடதி | தெலுங்கு | குமாரி | |
1992 | இதுதாண்டா சட்டம் | தமிழ் | அமுதா ( "மீனாட்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது) | |
1992 | முதல் சீதனம் | தமிழ் | ( "மீனாட்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது) | |
1993 | ஜம்ப லக்கிடி பம்பா | தெலுங்கு | ராமலட்சுமி | |
1993 | மிஸ்டர் பெல்லாம் | தெலுங்கு | ஜானகி | சிறந்த நடிகைக்கான நந்நி விருது பிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு) பரிந்துரை |
1993 | பஞ்சனி சம்சாரம் | தெலுங்கு | பாலா | |
1993 | அம்மா கொடுக்கு | தெலுங்கு | ||
1993 | சபாஷ் ராமு | தெலுங்கு | ராதா | |
1993 | ரேப்படி ரவுடி | தெலுங்கு | ஜெயந்தி | |
1993 | பிரேமா நா பிராணம் | தெலுங்கு | பிரியங்கா | |
1993 | கண்ணைய்யா கிட்டையா | தெலுங்கு | ருக்குமணி தேவி | |
1993 | சின்னல்லுடு | தெலுங்கு | ராணி | |
1993 | அண்ணா செல்லு | தெலுங்கு | லட்சுமி | |
1993 | ஸ்ரீநாத கவி சர்வபொவ்முடு | தெலுங்கு | தமயந்தி | |
1993 | நக்ஷத்திர போராட்டம் | தெலுங்கு | துருவ பிரசாத்தின் சகோதரி | |
1994 | ஸ்ரீவாரி பிரியருலு | தெலுங்கு | வசந்தா | |
1994 | தீர்ப்பு | தெலுங்கு | ||
1994 | சுபலக்ணம் | தெலுங்கு | ராதா | பிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு) |
1994 | அல்லரி போலிஸ் | தெலுங்கு | கீதா | |
1994 | மரோ குவிட் இண்டியா | தெலுங்கு | ||
1994 | ஹலோ பிரதர் | தெலுங்கு | பாடலில் சிறப்புத் தோற்றம் | |
1994 | ஆனஸ்ட் ராஜ் | தமிழ் | புஷ்பா | |
1995 | அம்ம தொங்கா | தெலுங்கு | அலிவேலு | |
1995 | எங்கிருந்தோ வந்தான் | தமிழ் | ஜானகி | |
1995 | விட்னஸ் | தமிழ் | ||
1995 | கரான புல்லோடு | தெலுங்கு | மல்லி | |
1995 | சுப சங்கல்பம் | தெலுங்கு | Ganga | சிறந்த நடிகைக்கான நந்தி விருது <br / பரிந்துரை-பிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு) |
1995 | மாயா பஜார் | தெலுங்கு | சசிரேகா | |
1995 | சுபமஸ்த்து | தெலுங்கு | கஸ்தூரி | |
1995 | இதேண்டி மா வாரி வரசா | தெலுங்கு | ||
1995 | கொண்டப்பள்ளி ரத்தயா | தெலுங்கு | சிறீதேவி | |
1995 | ஆலுமகுளு | தெலுங்கு | மல்லேஸ்வரி | |
1996 | வம்ஷனிக்கொக்கடு | தெலுங்கு | சிரிசா | |
1996 | மாவிச்சிகுரு | தெலுங்கு | சீதா | |
1996 | வரிங் | தெலுங்கு | சுப்பிரியா | |
1996 | பீலின ஜோதி | கன்னடம் | ||
1996 | அப்பாஜி | கன்னடம் | லட்சுமி | |
1997 | வம்மோ வாதூ ஓ பெல்லாமு | தெலுங்கு | ||
1997 | சீதக்கா | தெலுங்கு | சீதா | |
1997 | சுபமுகூர்த்தம் | தெலுங்கு | ||
1997 | கோடலு தித்தின காப்புரம் | தெலுங்கு | ||
1997 | பிரியமைனா ஸ்ரீவாரு | தெலுங்கு | சந்தியா | |
1997 | தெம்மாங்கு பாட்டுக்காரன் | தமிழ் | சிவகாமி | |
1997 | புதையல் | தமிழ் | சுந்தரி | |
2004 | சுவாமி | தெலுங்கு | டாக்டர் பாரதி, முதல்வர் | |
2004 | மத்தியனம் ஹத்யா | தெலுங்கு | லட்சுமி | |
2004 | ஆ நலுகுரு | தெலுங்கு | பாரதி | பரிந்துரை – சிறந்த ஆதரவு நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு |
2012 | தேவஸ்தானம் | தெலுங்கு | சரஸ்வதி | |
2014 | சந்தமாமா கதலு | தெலுங்கு | சாரதா | |
2017 | பட்டேல் எஸ். எப். ஆர். | தெலுங்கு | பாரதி | |
2017 | மிடில் கிளாஸ் அப்பாயி | தெலுங்கு | நானியின் அத்தை | |
2018 | பரத் அனே நேனு[3] | தெலுங்கு | பரத்தின் தாய் | |
2018 | சீனிவாச கல்யாணம் | தெலுங்கு | சீதா | |
2018 | ஹலோ குரு பிரேமகோசம் | தெலுங்கு | லட்சுமி | |
2019 | பிரஷ்னிஸ்டா | தெலுங்கு | அன்னபூர்ணா | |
2021 | ஸ்ரீகாரம் | தெலுங்கு | ||
2021 | சாவு கபுரு சல்லகா | தெலுங்கு | கங்கம்மா | |
2021 | மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர் | தெலுங்கு | தயாரிப்பில் | |
2021 | அர்தாம் | தெலுங்கு | தயாரிப்பில் |
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | அலைவரிசை | மொழி |
---|---|---|---|---|
2020 | அக்கா மொகுடு | குடும்ப ஆலோசகர் | ஜெமினி தொலைக்காட்சி | தெலுங்கு |
2020-தற்போது | பூவே உனக்காக | ரத்தினவள்ளி | சன் தொலைக்காட்சி | தமிழ் |
2020 | ரோஜா | ரத்தினவள்ளி (சிறப்புத் தோற்றம்) |
குறிப்புகள்
[தொகு]
- ↑ Y. Sunita Chowdhary (2012-04-14). "Arts / Cinema : Sensitive and soulful". The Hindu. Archived from the original on 24 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31.
- ↑ [1]
- ↑ Jayakrishnan (14 March 2018). "Mahesh Babu and Kiara Advani shooting a romantic number for 'Bharat Ane Nenu'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/mahesh-babu-and-kiara-advani-shooting-a-romantic-number-for-bharat-ane-nenu/articleshow/63301613.cms.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Aamani
- http://www.apgap.com/aamani-biography-and-filmography/ பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் ஆமானி சுயசரிதை
- https://web.archive.org/web/20110930113844/http://www.cineherald.com/PhotoGallery/amani/index.htmlAmani படங்கள்