ஆசிய மேட்டுநில மூஞ்சூறு
Appearance
ஆசிய மேட்டுநில மூஞ்சூறு Asian highland shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இயுலிபோடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | சன்கசு
|
இனம்: | ச. மோன்டனசு
|
இருசொற் பெயரீடு | |
சன்கசு மோன்டனசு கெலார்ட், 1850 | |
இந்தியாவிலும் இலங்கையிலும் ஆசிய மேட்டுநில மூஞ்சூறு பரம்பல் |
ஆசிய மேட்டுநில மூஞ்சூறு (Asian highland shrew)(சன்கசு மோன்டனசு) பாலூட்டி வகுப்பில் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த மூஞ்சூறு ஆகும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இதன் வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். வாழ்விட இழப்பால் இதன் வாழ்வு அச்சுறுத்தப்படுகிறது. சிங்கள மொழியில் இது ශ්රී ලංකා කදු හික් මීයා என அறியப்படுகிறது.
விளக்கம்
[தொகு]தலையும் உடலும் 9 முதல் 11 செ.மீ. (3.5–4.3 இல்) நீளமுடையது. வால் சுமார் 7 செ.மீ (2.8 இல்) நீண்டது. உடலின் மேற்பகுதியானது அடர் நீல-பழுப்பு முதல் கருப்பு நிறம் வரையும் அடிப்பகுதி வெளிறியும் காணப்படும். ஒரு சில முதிர்ச்சியடைந்த மூஞ்சூறு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளன. மென்மையானது மற்றும் வெல்வெட்டு முடிகளுடனும், முடி இல்லாத உடல் பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Molur, S.; Nameer, P.O.; de A. Goonatilake, W.I.L.D.P.T.S. (2008). "Suncus montanus". IUCN Red List of Threatened Species 2008: e.T21147A9251556. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T21147A9251556.en. https://www.iucnredlist.org/species/21147/9251556.
- பூச்சிஉண்ணி நிபுணர் குழு 1996. சன்கசு மாண்டனசு . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.