1389
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1389 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1389 MCCCLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1420 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2142 |
அர்மீனிய நாட்காட்டி | 838 ԹՎ ՊԼԸ |
சீன நாட்காட்டி | 4085-4086 |
எபிரேய நாட்காட்டி | 5148-5149 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1444-1445 1311-1312 4490-4491 |
இரானிய நாட்காட்டி | 767-768 |
இசுலாமிய நாட்காட்டி | 790 – 792 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1639 |
யூலியன் நாட்காட்டி | 1389 MCCCLXXXIX |
கொரிய நாட்காட்டி | 3722 |
1389 (MCCCLXXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 24 – நோர்வே, டென்மார்க் அரசி முதலாம் மார்கரெட் சுவீடன் மன்னர் ஆல்பர்ட்டை சமரில் வென்று மூன்று நாடுகளுக்கும் பேரரசியானார். ஆல்பர்ட் சிரைப்பிடிக்கப்பட்டார்.
- மே 19 – முதலாம்ம் வசீலி மாஸ்கோவின் இளவரசரானார்.
- சூன் 15 – கொசோவோ போர்: உதுமானியர் செர்பிய மற்றும் கிறித்தவக் கூட்டுப் படைகளை வென்றனர்.[1] சுல்தான் முதலாம் முராட், செர்பிய இளவரசர் லசார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
- சூன் 15 – முதலாம் முராது கொல்லப்பட்டதை அடுத்து முதலாம் பயெசிது உதுமானியப் பேரரசரானார்.
- சூன் 15 – மூன்றாம் இசுடெஃபான் செர்பியாவின் மன்னரானார்.
- சூலை 18 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தும் பிரான்சும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
- நவம்பர் 2 – ஆறாம் அர்பனுக்குப் பின்னர் ஒன்பதாம் பொனிபசு 203-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- உதுமானியப் பேரரசில் இருந்து தமது நாடுகளைக் காக்கும் முகமாக வலாச்சியா மன்னர் முதலாம் மெர்சியாவுக்கும், போலந்து மன்னர் இரண்டாம் விளாதிசுலாவ் சகியெல்லோவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- இரண்டாம் ஜாஜி எகிப்தின் மம்லுக் சுல்தானாகப் பதவியேற்றார்.
- ஹயாம் வுரூக்கிற்குப் பின்னர் விக்கிரமவர்தனன் மயாபாகித்து பேரரசராக (இன்றைய இந்தோனேசியாவில்) முடிசூடினார்.
- தில்லி சுல்தான் துக்ளக் கான் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் அபூ பக்கீர் ஷா சுல்தானாகப் பதவியேற்றார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- அக்டோபர் 15 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)
- ஹயாம் வுரூக், மயாபாகித்து பேரரசர் (பி. 1334)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lock, Peter (2013). The Routledge Companion to the Crusades. Routledge. p. 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135131371.