உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டான்லி பூங்கா, வான்கூவர்

ஆள்கூறுகள்: 49°18′N 123°08′W / 49.30°N 123.14°W / 49.30; -123.14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Stanley Park
Map
வகைமாநகரசபை
அமைவிடம்வான்கூவர்
ஆள்கூறு49°18′N 123°08′W / 49.30°N 123.14°W / 49.30; -123.14
உருவாக்கம்1888
இயக்குபவர்வான்கூவர் பார்க் வாரியம்
நிலைஅனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்
அலுவல் பெயர்Stanley Park National Historic Site of Canada
தெரியப்பட்டது1988

ஸ்டான்லி பூங்கா (Stanley Park) கனடாவில் வான்கூவர் நகரில் உள்ள ஒரு பூங்கா. இது உலகின் மிகப் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகும். ஸ்டான்லி பார்க் ஆண்டு முழுவதும் பச்சை இலைகள் கொண்ட பாலைவனச் சோலையாகத் திகழ்கிறது. இது 405 எக்டேர் பரப்பளவு கொண்ட பூங்காவாகும். ஸ்டான்லி பார்க்கில் “இழந்த குளம்” மற்றும் “பீவர் ஏரி” போன்ற பல அடையாளங்கள் உள்ளன. பூங்கா உள்ளே “ஸ்டான்லி பார்க் விண்கலம்” மூலம் பயணிக்க முடியும். பூங்காவின் உள்ளே தொடருந்துகள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் முழுக் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய பல இடங்கள் உள்ளன. ஸ்டான்லி பார்க்கில் உள்ள “மால்கின் பௌல்” என்ற இடத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும். ஸ்டான்லி பார்க்கில் கண்கவர் கடற்கரைகள் உள்ளன. ஸ்டான்லி பார்க் செல்ல நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது. இருப்பினும் அங்கு உள்ள மீன் தொட்டி (Aquarium) பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Foss, Lindsay. "A Walk through Stanley Park". Travel. Canadian Geographic. Archived from the original on June 20, 2007. பார்க்கப்பட்ட நாள் 2006-12-10.
  2. Akrigg, G.P.V.; Akrigg, Helen B. (1986), British Columbia Place Names (3rd, 1997 ed.), Vancouver: UBC Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7748-0636-2
  3. Stephan, Bill; Vancouver Natural History Society (2006). Wilderness on the Doorstep: Discovering Nature in Stanley Park. Vancouver: Harbour Publishing. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55017-386-3.