உள்ளடக்கத்துக்குச் செல்

விழுங்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழுங்குதல் ஓர் சிக்கலான அனிச்சைச் செயலாகும்.இதனை முகுளத்தில் உள்ள விழுங்குதல் மையம் கட்டுப்படுத்துகிறது.விழுங்குதலில் மென்மையான மேலண்ணமும், குரல்வளையும் (Larynx)உயர்த்தப்படும். நாக்கு, உணவைத் தொண்டையினுள் திணிக்கும். மூச்சுக்குழல் மூடியானது மூச்சுக்குழலை மூடியவுடன் உணவு மெதுவாக, உணவுக் குழலினுள் இறங்கும்.உணவுக் குழலில் உணவு இறங்குதல் மேல்புறத்திலுள்ள உணவுக் குழல் சுருக்குத் தசைகளின் தளர்ச்சியால் ஏற்படும். பின் உணவு மெதுவாக இறைப்பையை நோக்கி இறங்கும். இதற்கென உணவுக்குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலை இயக்கங்கள் ஏற்படும். உணவுக் குழலில் அடுத்தடுத்துச் சுருக்கம் தளர்ச்சிகளாகத் தோன்றும் குழல் சுவர் இயக்கத்திற்குக் குடல் அலைவு என்று பெயர். மேலிருந்து தோன்றும் ஓர் அலைவு இறைப்பையை வந்தடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு 9 செகண்டுகள் ஆகும். குடல் அலைவு தோன்றுதலால் ஒருவர் தலைகீழ் நிலையிலும் உணவினை விழுங்க இயலும்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "inglutition". Oxford English Dictionary.
  2. Clave, P.; De Kraa, M.; Arreola, V.; Girvent, M.; Farre, R.; Palomera, E.; Serra-Prat, M. (2006). "The effect of bolus viscosity on swallowing function in neurogenic dysphagia". Alimentary Pharmacology & Therapeutics (Wiley) 24 (9): 1385–1394. doi:10.1111/j.1365-2036.2006.03118.x. பப்மெட்:17059520. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுங்குதல்&oldid=4103447" இலிருந்து மீள்விக்கப்பட்டது