உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயலட்சுமி பண்டித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயலட்சுமி நேரு பண்டிட்
விஜயலட்சுமி நேரு பண்டிட்
ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர்
பதவியில்
செப்டம்பர் 15, 1953 – செப்டம்பர் 21, 1954[1]
முன்னையவர்Lester B. Pearson
பின்னவர்Eelco N. van Kleffens
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1967-1971
முன்னையவர்ஜவஹர்லால் நேரு
பின்னவர்வி. பி. சிங்க்
தொகுதிஃபுல்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஆகஸ்ட், 1900
இறப்பு1 திசம்பர், 1990
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்ரஞ்சித் சீதாராம் பண்டிட்
பிள்ளைகள்நயன்தாரா சாஹல்
கையெழுத்து

விஜயலட்சுமி பண்டிட் (Vijaya Lakshmi Pandit), (ஆகஸ்ட் 18, 1900 - டிசம்பர் 1, 1990), இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.[2]

1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

இந்திரா காந்தியைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.

1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.

இவரது மகள் நயந்தரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயலட்சுமி_பண்டித்&oldid=4057507" இலிருந்து மீள்விக்கப்பட்டது