வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா
வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
கெய்சர் பிரான்ஸ் ஜோசப் கடனீர் இடுக்கேரி | |
அமைவிடம் | கிறீன்லாந்து ( டென்மார்க்) |
ஆள்கூறுகள் | 76°N 30°W / 76°N 30°W |
பரப்பளவு | 972,000 km2 (375,000 sq mi) |
நிறுவப்பட்டது | 21 மே 1974 |
வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா (Northeast Greenland National Park) என்பது உலகின் மிகப் பெரிய தேசியப் பூங்காவாகும். உலகிலுள்ள மிகப் பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியும் இப் பூங்காவே ஆகும்[1]. புவிப்பரப்பில் வடகோளத்தில் மிகமிக வடக்கே அமைந்துள்ள தேசியப் பூங்காவாக இப்பூங்கா கருதப்படுகிறது. 1974 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு பின்னர் 1988 ஆம் ஆண்டில் இப்போதுள்ள அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இப்பூங்கா மொத்தமாக 9,72,001 சதுர கிலோமீட்டர்கள் பரப்பினைக் கொண்டதாகும். அரசாங்கத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா கிரீலாந்தில் இருக்கும் ஒரே பூங்காவாகவும் உள்ளது.
புவியியல்
[தொகு]மேற்கில் 45 பாகை மேற்கு தீர்க்கரேகையின் உச்சியில், தெற்கில் செர்மெர்சூக்கு நகராட்சியும், மேற்கில் அவானாடா நகராட்சியும் என இப்பூங்கா நேர்கோடுகள் இனைந்திருப்பது போல தன்னுடைய எல்லைகலைப் பங்கிட்டுக் கொள்கிறது. பூங்காவின் பெரிய அளவிலான உட்பகுதி கிரீன்லாந்து பனிப்படலப் பகுதியின் ஒரு பகுதியாகும். ஆனால் இப்பூங்காவிற்குள் பனிக்கட்டியால் சூழப்படாத நிலப்பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகள் வடக்கு கிரீன்லாந்தின் பியரி லேண்டு பகுதியிலும், கடற்கரை நீளத்திற்குமாக அமைந்துள்ளன. பியரி லேண்டு பகுதி மட்டுமல்லாமல் அரசர் எட்டாம் பிரடெரிக் லேண்டு மற்றும் அரசர் பத்தாம் கிறிசுட்டியன் லேண்டு என்ற புவியியல் பிரதேசங்களும் இப்பூங்காவில் இட,பெற்றுள்ளன. இப்பகுதிகளில் எதிர்பார்த்த
அளவை காட்டிலும் அதிகமாக பனி இழக்கப்பட்டுள்ளது[2].
வரலாறு
[தொகு]1974 ஆம் ஆண்டு மே மாதம் 22 அன்று கிழக்கு கிரீன்லாந்தின் மூன்று மாகாணங்களில் ஒன்றான துனு மாகாணத்தில் மக்கள் குடியேறாமல் இருந்த இட்டூக்கோர்ட்டுமீட் நகராட்சியில் இப்பூங்கா ஆரம்பிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு இப்பூங்கா 272000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டு இன்றைய நிலைக்கு விரிவடைந்தது. வடக்கு கிரீன்லாந்தின் முந்தைய அவானா மாகாணத்தின் வடகிழக்குப் பகுதி இப்பூங்காவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1977 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பூங்காவிற்கு அனைத்துலக உயிர்க்கோள பாதுகாப்பகம் என்ற மதிப்பு வழங்கப்பட்டது. கிரீன்லாந்து நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை துறையின் மேற்பார்வையில் பூங்கா உள்ளது. இன்றைய பூங்காவின் எல்லைகளுக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆராய்ச்சி முகமைகள் அமைந்துள்ளன.
மக்கள் தொகை
[தொகு]இந்த பூங்காவிற்கு நிரந்தரமான மக்கள் தொகை
என்று ஏதுமில்லை. 1986 ஆம் ஆண்டில் இப்பூங்காவில் நிரந்தரமான மக்கள் 40 பேர் இருந்தனர். அவர்கள் இராணுவ புறக்காவல் நிலையமிருந்த மேசுடெர்சுவிக்கில் தங்கி வாழ்ந்து வந்தனர், இருப்பினும் பூங்காவில் 400 இடங்கள் அவ்வப்போது கோடைகால பயன்பாட்டுக்காக இருக்கின்றன. தங்கியிருந்த இந்த 40 பெரும் சுரங்கத் துப்புரவுத் தளங்களில் தூய்மைப்படுத்துதல் மற்றும் சுரங்க ஆய்வுப் பயண இடங்களை மூடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு விரைவில் அவ்விடத்தை விட்டுச்சென்றனர்.
அப்போதிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நிரந்தரமான மனிதர்களின் எண்ணிக்கை அங்கு இல்லாமலேயே இருந்தது. சமீபத்தில் வடகிழக்கு கிரன்லாந்தில் குளிர்காலத்தில் 31 பேர் மற்றும் 110 நாய்கள் மட்டுமே இங்கு வந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 31 பேர்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது:[3][4].
- டேன்போர்க்கு (12) சிரியசு போக்குவரத்துக் காவல்
தலைமையகம்., பூங்காவின் காவல் முகமை
- டேன்மார்க்சவான் (8) – வானிலை மைய பணியாளர்கள்
- நார்டு நிலையம் (5) இராணுவத்தினர்
- மெசுட்டர்விக் (2) இராணுவப் புறக்காவல் நிலையம்
- சாக்கென்பெர்க் (0) கோடைகால ஆராய்ச்சிக்கு மட்டும்
*உச்சிமாநாட்டு முகமை (4) ஆராய்ச்சி நிலையம்
கோடைகாலத்தில் விஞ்ஞானிகள் எண்னிக்கை கூடும். சேக்கன்பெர்க் சூழலியல் ஆராய்ச்சி இயக்க நிறுவனம் கிட்டத்தட்ட 20 விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களை இங்கு அனுப்புகிறது.
உயிரினங்கள்
[தொகு]5000 முதல் 15000 வரை எண்னிக்கையில் கத்தூரி எருமைகள், துருவக் கரடிகள், வால்ரசுக்கள், சிலவகை ஆந்தைகள் உள்ளிட்ட சில பறவைகள் போன்றவை பூங்காவின் கடற்கரை ஓரத்தில் காணப்படுகின்றன.
சிலவகை ஆந்தைகள் உள்ளிட்ட சில பறவைகள், காட்டெருமை, துருவக்கரடி, சீல், பலூகா எனும் திமிங்கலம் போன்றவை இங்கு காணப்படுகிறன. 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கத்தூரி எருமைகளின் உலக இருப்பில் 40% இங்குள்ளதாகக் கணக்கிடப்பட்டது[5]. ஆர்க்டிக் நரி, குறுவால் மரநாய் சில வகை எலிகள், ஆர்க்டிக் முயல், போன்ற பாலூட்டி
விலங்குகள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.
கடல் வாழ் பாலுட்டிகளான காதுகளற்ற சீல், தாடியுள்ள சீல், முக்காடிட்ட சீல், பலூகா திமிங்கலம், நார்வால் திமிங்கலம் உள்ளிட்டவையும் இங்கு காணப்படுகின்றன.
மடையன் பறவைகள், பார்னாக்கள் வாத்துகள், சிவப்புக்கால் வாத்துகள், ஆந்தைகள், கடல் வாத்துகள், பனி ஆந்தைகள் உள்ளிட்ட பறவைகள் பூங்காவில் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The National Park". Greenland.com. Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
- ↑ Ramskov, Jens. "Climate models underestimate the melting of the ice cap " In English Ingeniøren, 26 December 2014. Accessed: 26 December 2014.
- ↑ "The Sirius Sledge Patrol". Destination EastGreenland. Archived from the original on 2011-04-21. பார்க்கப்பட்ட நாள் 2008-10-03.
- ↑ NOAA Research பரணிடப்பட்டது 2008-09-16 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Kalaallit Nunaat high arctic tundra". Terrestrial Ecoregions. World Wildlife Fund. பார்க்கப்பட்ட நாள் 2008-10-03.
புற இணைப்புகள்
[தொகு]
- "Kalaallit Nunaat high arctic tundra". Terrestrial Ecoregions. World Wildlife Fund.