மைய விலக்கு சுழற்சிக் கருவி
மையவிலக்கு சுழற்சிக் கருவி (Centrifuge) என்பது ஒரு திரவத்தின் பல்வேறு கூறுகளை பிரிக்க மையவிலக்கு சக்தியைப் பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆகும். ஒரு கொள்கலனுக்குள் அதிக வேகத்தில் திரவத்தை சுழற்றுவதன் மூலம் இது அடையப்படுகிறது, இதன் மூலம் வெவ்வேறு அடர்த்தி கொண்ட திரவங்களை (எ.கா. பாலில் இருந்து வெண்ணெய்) அல்லது திடப்பொருட்களிலிருந்து திரவங்களை பிரிக்கிறது. அடர்த்தியான பொருட்கள் மற்றும் துகள்கள் கோணத்திசையில் வெளிப்புறமாக வேகமாக சுழற்றப்படுவதன் மூலம் இது செயல்படுகிறது. இவ்வாறான சுழற்சியின் மூலம், குறைந்த அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் இடம்பெயர்ந்து மையத்தை நோக்கியும் அதிக அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் மையத்திலிருந்து விலகியும் நகரும். ஒரு ஆய்வக மையவிலக்க சுழற்சிக்கருவியில், மாதிரிகளைக் கொண்ட குழாய்கள் ஆர முடுக்கத்தின் காரணமான சுழற்சியின் போது அடர்த்தியான துகள்கள் குழாயின் அடிப்பகுதியில் சேகரமாகிறது.[1] அதே நேரத்தில், குறைந்த அடர்த்தி கொண்ட பொருட்கள் மேலே உயர்கின்றன. ஒரு மையவிலக்கு சுழற்சிக்கருவி என்பது திரவத்தின் முக்கியப்பகுதியிலிருந்து தூய்மையற்ற பகுதிப்பொருள்களைப் பிரிக்கும் மிகவும் பயனுள்ள வடிப்புக் கருவியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Susan R. Mikkelsen & Eduardo Cortón. Bioanalytical Chemistry, Ch. 13. Centrifugation Methods. John Wiley & Sons, Mar 4, 2004, pp. 247–267.