மேசைப்பந்தாட்டம்
மேசைத் (தக்கைப்) பந்தாட்டப் போட்டி | |
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | பன்னாட்டு மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பு |
---|---|
முதலில் விளையாடியது | 1880கள், இங்கிலாந்து |
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
தொடர்பு | இல்லை |
அணி உறுப்பினர்கள் | ஒற்றையர் அல்லது இரட்டையர் |
பகுப்பு/வகை | மட்டை விளையாட்டு, உள்ளகம் |
கருவிகள் | செல்லுலாய்டு, 40 மிமீ |
தற்போதைய நிலை | |
ஒலிம்பிக் | 1988 முதல் கோடை ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்படுகிறது |
இணை ஒலிம்பிக் | 1960 முதல் |
19ம் நூற்றாண்டின் இறுதியில் பிங்-பாங் என்று அறியப்பட்ட மேசைப்பந்தாட்டம் (table tennis, டேபிள் டென்னிஸ்) தற்போது உலகம் முழுதும் பரவி ஏற்றுக்கொள்ளப்பட்டுளது. 1988ல் ஒலிம்பிக்சில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.[1][2][3]
ஒரு மேசையின் இருபுறமும் நின்று, சிறிய கைப்பிடியுள்ள வட்டமான மட்டையைக் கொண்டு மிக இலேசாக தக்கைபோல் உள்ள (பிளாஸ்டிக்) பந்தை எதிராளி தடுத்து அடிக்கமுடியாமல் முன்னும் பின்னுமாய் அடித்து ஆடும் விளையாட்டு. சரியாக மேசையின் நடுவில், உயரம் குறைவாக, சிறிய வலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ஆடுநர் பந்தை இவ்வலையைத் தாண்டி எதிராளியின் மேசைப்பகுதியில் விழுமாறு அடித்தல் வேண்டும். எதிராளியின் மேசையின் சரியான பகுதியில் பட்டு குதிக்கும் பந்தை, எதிராளி அவருக்கு எதிர்ப்புற மேசையில் படுமாறு திருப்பி அடிக்கத் தவறினால் அந்த பந்துக்கான புள்ளிக் கணக்கை இழப்பார். இப்படி எதிரெதிராக பந்தை இருவர் தனக்கு எதிராக இருப்பவர் பக்கம் பந்தை அடிக்கும் பொழுது பந்து ஒருமுறைதான் வேறு எங்கும் படாமல் எதிராளி மேசைமீது விழுந்து குதிக்க வேண்டும். எதிராளி மேசையின் மீது இருமுறையோ அதற்கு மேலோ குதிக்க விட்டுவிட்டால் எதிராளி புள்ளியிழப்பார். அதாவது யாரால் முறையாக விழுந்த பந்தை எதிர்ப்புற மேசையில் விழுமாறு திருப்பி அடிக்க முடியவில்லையோ அவர் புள்ளியிழப்பார். வலையில் தொட்டு எதிராளி மேசைப்புறம் விழுந்தாலும் அப்பந்து முறையாக விழுந்த பந்தாகும். ஒரு புதிய புள்ளிக்கான ஆட்டத்துவக்கத்தில் மட்டும் முதலாகப் பந்தை எதிராளிப்பக்கம் அடிப்பவர், தன்பகுதி் மேசை மீது பட்டுப் பின்னர் எதிராளியின் மேசை மீது விழுமாறும், நீளவாட்டில் மேசைமீது உள்ள நடுக்கோட்டுக்கு எதிராளியின் மேசையின் மாற்றுப்புறதில் (இட வலமாக அல்லது வல-இடமாக) பந்து விழுமாறும் அடிக்க வேண்டும். இல்லாவிடில், மீண்டும் ஒரேயொரு முறை முதல்பந்தடிக்கலாம். இருமுறையும் தவறு நிகழ்ந்தால் முதற்பந்தடிப்பவர் புள்ளியிழப்பார்.
மேசை
[தொகு]மேசை பரப்பு பச்சை அல்லது நீல நிறத்திலும், கோடுகள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேசை நடுவே நீளவாக்கில் போடப்பட்ட வெள்ளைக் கோடு இருவர் ஆட்டத்திற்கானது. ஒரு புள்ளிக்கான முதற்பந்து அடிப்பவர் மாற்றுப்புறத்தில் விழுமாறு அடிப்பதற்கும் பயன்படுவது.
ஒரு ஆட்டத்திற்கு 21 புள்ளிகள் (Points). வெற்றி பெறுபவர், மற்றவரை விட இரு புள்ளிகள் கூடுதல் பெற வேண்டும். ஆண்கள் போட்டிகளில் 5 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், பெண்கள் போட்டிகளில் 3 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், வெற்றியாளர் என அறிவிக்கப்படும்.
உலகக் கோப்பை
[தொகு]ஆண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, ஸ்வாதிலிங் கோப்பை (Swathyling Cup) எனவும், பெண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, கார்பில்லோன் கோப்பை (Corbillon Cup) எனவும் வழங்கப்படும்.
மட்டை
[தொகு]மட்டையின் பரப்பில் சொரசொரப்பான 2மி.மீ உருண்டைகள் கொண்ட இறப்பர் தாள் ஒட்டப்பட்டிருக்கும். புள்ளி துவக்கத்தில் சர்வ் செய்யும் போது பந்தை கையிலிருந்து உயரே தூக்கிப் போட்டு மட்டையால் நமது மேசை பகுதியில் முதலில் பட்டு எதிராளி பகுதிக்கு செல்லுமாறு அடிக்க வேண்டும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- சரத் கமல் - இந்திய ஆண்கள் அணி மேசைப்பந்தாட்ட வீரர்
- ஷாமினி குமரேசன் - - இந்திய பெண்கள் அணி மேசைப்பந்தாட்ட வீராங்கனை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hurt III, Harry (5 April 2008). "Ping-Pong as Mind Game (Although a Good Topspin Helps)". The New York Times இம் மூலத்தில் இருந்து 19 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110619122158/http://www.nytimes.com/2008/04/05/business/05pursuits.html.
- ↑ "ITTF Handbook". ITTF. Archived from the original on 20 August 2021. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
- ↑ "Member Associations". ITTF. Archived from the original on 7 August 2017. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.