மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையம்
Malaysian Communications Multimedia Commission Suruhanjaya Komunikasi Multimedia Malaysia | |
மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையச் சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 நவம்பர் 1998 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | மலேசியா |
தலைமையகம் | MCMC HQ Tower 1, Jalan Impact, Cyber 6, 63000, சைபர்ஜெயா |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு |
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
மலேசிய பல்லூடக ஆணையச் சட்டம் 1998 Multimedia Commission Act 1998 |
மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையம் (மலாய்: Suruhanjaya Komunikasi Multimedia Malaysia (SKMM); ஆங்கிலம்: Malaysian Communications Multimedia Commission) (MCMC); என்பது மலேசியாவின் தொடர்பு துறை; பல்லூடகத் துறை; மற்றும் இலக்கவியல் துறை (Communications and Multimedia Industry) ஆகியவற்றின் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் மலேசிய நடுவண் அரசு சார்ந்த சட்டப்பூர்வ ஆணையம் (Malaysian Statutory Body) ஆகும்.[1]
மலேசிய தொடர்பு துறை மற்றும் பல்லூடக ஆணையச் சட்டம் 1998 (Malaysian Communications and Multimedia Commission Act 1998); தொடர்பு துறை பல்லூடகச் சட்டம் 1998 (Communications and Multimedia Act 1998); மற்றும் உத்திசார் வர்த்தகச் சட்டம் 2010 (Strategic Trade Act 2010) ஆகிய சட்டங்கள் வழங்கிய அதிகாரங்களின் கீழ் இந்த ஆணையம் இயங்கி வருகிறது.[2][3]
பொது
[தொகு]பொதுவாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துறைகளுக்கான அரசாங்கத்தின் தேசியக் கொள்கையின் நோக்கங்களைச் செயல்படுத்துவதும்; மேம்படுத்துவதும் மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையத்தின் பொறுப்பு ஆகும்.
அத்துடன், தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் தொழில்கள் (Telecommunications and Broadcasting Industries) மற்றும் இணையச் செயல்பாடுகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை (New Regulatory Framework) மேற்பார்வையிடும் பொறுப்பையும் மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையம் கொண்டுள்ளது.
அஞ்சல் சேவைகள் சட்டம் 1991
[தொகு]2001-ஆம் ஆண்டில், மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையத்தின் பங்கு விரிவாக்கப்பட்டது. அஞ்சல் சேவைகள் சட்டம் 1991-இன் (Postal Services Act 1991) கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அஞ்சல் சேவைத் துறையை மேற்பார்வையிடுவது அதில் அடங்கும்; மற்றும் இலக்கவியல் சட்டம் 1997-இன் (Digital Signature Act 1997) கீழ் உரிமம் வழங்குவதும் அடங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malaysian Communications and Multimedia Commission Act 1998 (Act 589)" (PDF). Attorney General's Chambers of Malaysia. 1 January 2006. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Communications and Multimedia Act 1998 (Act 588)" (PDF). Attorney General of Malaysia. 1 சனவரி 2006. Archived (PDF) from the original on 13 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்பிரல் 2018.
- ↑ "Strategic Trade Act 2010 (Act 708)" (PDF). Attorney General of Malaysia. 1 May 2015. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Official website பரணிடப்பட்டது 2021-02-28 at the வந்தவழி இயந்திரம்