உள்ளடக்கத்துக்குச் செல்

போர்ச்சுகல்லின் தேசியக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்த்துகல் குடியரசு
பிற பெயர்கள் Bandeira das Quinas
அளவு 2:3[1]
ஏற்கப்பட்டது 30 சூன் 1911; 113 ஆண்டுகள் முன்னர் (1911-06-30)[2]
வடிவம் இரு வண்ண செவ்வக வடிவிலான கொடியாகும். இது செங்குத்தாக இரு பாகங்களாக அதாவது கம்பத்தின் பக்கம் பச்சையும் பறந்திடும் பாகம் சிவப்பு வண்ணத்திலும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடியின் வேறுபாடு போர்த்துகல் குடியரசு
பயன்பாட்டு முறை இராணுவ பிரிவுகளின் தேசிய நிறம் Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 12:13
ஏற்கப்பட்டது 30 சூன், 1911

போர்த்துகலின் தேசியக் கொடி ( போர்த்துக்கேய மொழி: Bandeira de Portugal ) போர்த்துகல் குடியரசின் தேசியக் கொடியாகும் . இது ஓர் இரு வண்ண செவ்வக வடிவிலான கொடியாகும். இது செங்குத்தாக இரு பாகங்களாக அதாவது கம்பத்தின் பக்கம் பச்சையும் பறந்திடும் பாகம் சிவப்பு வண்ணத்திலும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய ராணுவப்படையின் முத்திரை நடுவில் பதிக்கப்பட்டுள்ளது. 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி அரசியலமைப்பு முடியாட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், இதன் விளக்கக்காட்சி 1 திசம்பர் 1910 அன்று செய்யப்பட்டது. இருப்பினும், சூன் 30, 1911இல் தேசியக் கொடியாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வ ஆணை வெளியிடப்பட்டது. முதல் போர்த்துகீசிய குடியரசின் இந்த புதிய தேசியக் கொடியானது, கொலம்பனோ போர்டலோ பின்ஹெய்ரோ, ஜோவோ சாகாஸ் மற்றும் ஏபெல் போட்டெல்ஹோ ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வடிவமைப்பு

[தொகு]

குடியரசுக் கொடியை சட்டப்பூர்வமாக உருவாக்கிய ஆணை , அரசியலமைப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அரசு இதழில் சூன் 19,1911இல் எண் 141இல் வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அரசிதழில் சூன் 30இல் எண்:151இல் வெளியானது.[3]

கட்டுமானம்

[தொகு]
கொடியின் அதிகாரப்பூர்வ பரிமாணங்களைக் கொண்ட கட்டுமானத் தாள். அனைத்து நடவடிக்கைகளும் நீளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கொடியின் நீளம் அகலத்தின் 1+12 மடங்கிற்கு சமமாக உள்ளது, இது 2:3 என்ற விகிதத்தில் உள்ளது.கொடியின் பின்னணி செங்குத்தாக இரண்டு வண்ணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்களின் அளவு எந்த சட்ட ஆவணத்திலும் துல்லியமாக குறிப்பிடப்படவில்லை. பரிந்துரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:[4]

திட்டம் சிவப்பு பச்சை மஞ்சள் நீலம் வெள்ளை கருப்பு
PMS 485 CVC 349 CVC 803 CVC 288 CVC கருப்பு 6 CVC
RGB 255-0-0 0-102-0 255-255-0 0-51-153 255-255-255 0-0-0
#FF0000 #006600 #FFFF00 #003399 #FFFFFF #000000
CMYK 0-100-100-0 100-35-100-30 0-0-100-0 100-100-25-10 0-0-0-0 0-0-0-100

மேற்கோள்கள்

[தொகு]
  1. "flag of Portugal | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  2. "flag of Portugal | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  3. Portugal, Government. "Decreto que aprova a Bandeira Nacional". Símbolos Nacionais (in போர்ச்சுகீஸ்). Portal do Governo. Archived from the original on 27 August 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2007.
  4. Sampaio, Jorge. "Bandeira nacional da República Portuguesa — desenho". Símbolos da República (in போர்ச்சுகீஸ்). Presidente da República. பார்க்கப்பட்ட நாள் 6 April 2008.