பியூனிக் போர்கள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
உரோம் மற்றும் கார்த்தீசியதிற்கு இடையே கி.மு. 264 முதல் கி.மு 146 வரை நடந்த மூன்று தொடர் பர்கள் பியூனிக் பர்கள் என்பதாகும். அக்காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போர் என கருதப்படுகிறது. கார்த்தீசிய பேரரசு மற்றும் ரோம் நாட்டின் விரிவாக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடே இப்போரின் காரணமாக கூறப்படுகிறது. முதலாம் பியூனிக் போரில், மேற்கு மெடீடேரியப் பகுதியில் தன்னுடைய பலமான கப்பற்படை மூலம் கார்த்தீசிய அரசு மேலாதிக்கம் செலுத்தியது. இத்தாலியில் ஆட்சி வலுப்பெற்றிருந்ததாலும், ரோமன் அரசு கப்பற்படை வலுவில்லாமல் இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேல், இருப்பக்கமும் பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்பில் முடிந்த பியூனிக் போரிற்குப்பின், கார்த்தீசிய பேரரசு, ரோமன் பேரரசால் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் மேற்கு மெடீடேரிய பகுதி முழுதும் ரோமன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
போரின் பின்னணி
[தொகு]கி.மு 3ஆம் நூற்றாண்டில், துனிசியா கடலோரடத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கியது. மேற்கு மெடீடேரியப் பகுதியில் கார்த்தீசிய அரசின் இணையாக விளங்கிய ஒரே நாடு ரோமன் ஆகும். ரோமன் அரசிடம் மிகவும் ஒழுக்கமான, மிகப் பெரிய படை இருந்த போதிலும், முதலாம் பியூனிக் போரின் பின்னடைவிற்கு கப்பற்படை இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, முதலாம் பியூனிக் போர் முடியும் தருவாயில் ரோமன் அரசின் கப்பற்படை மிகவும் பெரியதாகவும் உறுதியாகவும் உருவாக்கப்பட்டது.
முதலாம் பியூனிக் போர் (கி.மு. 264 முதல் 241 வரை)
[தொகு]முதலாம் பியூனிக் போர் சிசிலி மற்றும் ஆப்பிரிக்க பகுதியில் போரிடப்பட்டாலும், இந்த போர் கடற்போராகவே அமைந்தது. சைரக்கூஸ் நாட்டின் அரசன் இரண்டாம் ஹேய்ரோவிற்கும் மெசீனா கூலிப்படையினரிற்கும் நடுவே ஏற்பட்ட மோதலே முதல் பியூனிக் போரின் மூலாதாரமாக கருதப்படுகிறது. மெசீனாவிற்கு உதவிட ரோமன் அரசு தனது காலாட்படையை அனுப்பயதால் சீற்றம் கொண்ட கார்தீசிய அரசு சைரக்கூயுசிற்கு உதவியது. இதனால் இரு பெரும் அரசிற்கும், சிசிலியை எவர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டு அதன் விளைவாக போர் மூண்டது. கி.மு.262-இல் அக்ரிஜென்தத்தில் நடைபெற்ற போரில் தோல்வியை தழுவியதால் கார்தீசிய அரசு, ரோமன் அரசுடன் தரைப்படையின் மோதலை தவிர்த்து, தன்னுடைய பலமான கப்பற்படையால் ரோமனை தாக்க தீர்மானித்தது.
முதலில் கார்தீசிய அரசின் கைமேலோங்கி இருந்தது. கி.மு.260-இல் லிபாரியில் நடைபெற்ற போரில் கார்தீசிய அரசு ரோமன் அரசை தோற்கடித்தது. ஆயினும் இரண்டே மாதத்தில், 100 கப்பல்களை கொண்ட கப்பற்படையை ரோமன் அரசு உருவாக்கியது. தூக்குப்பாலம் மூலம் எதிரியின் கப்பலை அடைந்து, அதன் மூலம் கார்தீசிய கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக உத்தி கையாளப்பட்டது. இந்த நூதன உத்தியின் மூலம், கார்தீசிய கப்பற்படையை, தன்னுடைய, காலாட்படை மூலமே எதிர்கொள்ள ரோமன் அரசிற்கு ஏதுவாக அமைந்தது. தூக்குப்பாலம் சிக்கலாகவும், அபாயகரமானதாகவும் இருந்த போதிலும், கப்பற்படை வெகுவிரைவாக பலம் பெற்றதால், இந்த அபாயம் தவிர்க்கப்பட்டது. ட்யூனிசில் நடைபெற்ற போரில் பெறும் பேரழழிவை சந்தித்த போதிலும், போரில் ரோமன் அரசு நூலிழையில் வென்றது.
கி.மு.241-இல் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி, கார்தீசிய அரசு சிசிலியை விட்டு வெளியேறியது. அத்துடன் போரிற்காக ரோமன் அரசிற்கு இழப்பீடும் கொடுத்தது. இருபுறமும், மிகவும் இழப்பு நேர்ந்த போதிலும், இப்போரின் பின் கார்தீசிய நாடு மிகவும் சீர்க்குலைந்தது.
கி.மு.238-இல் கார்தீசிய அரசு கூலிப்படையினரின் தாக்குதலை சமாளித்து கொண்டிருந்தபோது, ரோமன் அரசு, சார்டினிய மற்றும் கோர்சிக தீவுகளை கைப்பற்றியது. இதன் பின் மேற்கு மெடீடேரிய பகுதியின் வல்லரசாக ரோமன் அரசு மாறியது. கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், நாட்டைப் பாதுக்காக்க மற்றும் பிற நாட்டினை படையெடுக்கவும் ரோமன் அரசின் மிகப்பெரிய கப்பற்படை உதவிகரமாக அமைந்தது.
போரிற்கு பின்
[தொகு]முதலாம் பியூனிக் போரிற்கு பின்னர், கார்த்தீகேஜ் தன்னுடைய நிதி நிலையை மேம்படுத்துவதற்கு மிக காலத்தை செலவிட்டது. பார்சிட் பரம்பரையின் ராணுவ உத்தியின் மூலம், ஹிஸ்பானியாவை கைப்பற்றி, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அச்சமயத்தில் ரோமன் அரசின் கவனம் முழுதும், இலேரியன் போரில் இருந்தது.