பிசுமத்(III) நைட்ரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பிசுமத் முந்நைட்ரேட்டு, பிசுமத்(III) நைட்ரேட்டு ஐந்நீரேற்று
| |
இனங்காட்டிகள் | |
10035-06-0 | |
EC number | 600-076-0 |
பண்புகள் | |
Bi(NO3)3·5H2O | |
வாய்ப்பாட்டு எடை | 485.07 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது, வெண்மை |
அடர்த்தி | 2.90 கி/செ.மீ3 (ஐந்துநீரேற்று)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிசுமத்(III) நைட்ரேட்டு (Bismuth(III) nitrate) என்பது Bi(NO3)3•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத் நேர்மின் அயனி +3 ஆக்சிசனேற்ற நிலையிலும் நைட்ரேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஐந்நைட்ரேட்டுச் சேர்மமே மிகப் பொதுவாகக் காணப்படும் பிசுமத் நைட்ரேட்டு வடிவமாகும்[2]. மற்ற பிசுமத் சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க பிசுமத்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது[3]. வர்த்தக ரீதியாகவும் இச்சேர்மம் விற்பனைக்கு கிடைக்கிறது. இச்சேர்மம் மட்டுமே தொகுதி 15 தனிமத்தால் உருவாக்கப்படுகிறது மற்றும் இவ்வினையே பிசுமத்தின் உலோகப் பண்பை எடுத்துக்காட்டும் வினையாகவும் கருதப்படுகிறது[4].
தயாரிப்பு மற்றும் வினைகள்
[தொகு]பிசுமத் உலோகமும் அடர் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரியும் போது பிசுமத்(III) நைட்ரேட்டு உருவாகிறது.[5]
- Bi + 4HNO3 → Bi(NO3)3 + 2H2O + NO
பிசுமத்(III) நைட்ரேட்டு நைட்ரிக் அமிலத்தில் கரைகிறது ஆனால் அமிலத்தன்மை சுழியை விட அதிகரிக்கும்போது உடனடியாக நீராற்பகுக்கப்பட்டு பல ஆக்சிநைட்ரேட்டுகளைத் தோற்றுவிக்கிறது[6]
அசெட்டோன், அசிட்டிக் அமிலம் மற்றும் கிளிசரால் ஆகியனவற்றிலும் பிசுமத்(III) நைட்ரேட்டு கரைகிறது ஆனால் நடைமுறையில் எத்தனால் மற்றும் எத்தில் அசெட்டேட்டு [7] ஆகியனவற்றில் கரைவதில்லை.
கரிம வேதியியல் தொகுப்பு வினைகள் சிலவற்றிலும் பிசுமத்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது என்பது அறியப்படுகிறது. உதாரணமாக, அரோமாட்டிக் சேர்மங்களின் நைட்ரோ ஏற்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சல்பைடில் இருந்து சல்பாக்சைடாக மாற்றும் ஆக்சிசனேற்ற வினை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்[7] . டிராகெண்டோர்ஃப் வினையாக்கி உருவாக்கத்திலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
குப்பெர்ரான் மற்றும் பைரோகலாலுடன் பிசுமத்(III) நைட்ரேட்டு வினைபுரிந்து அணைவுச் சேர்மங்களைத் தருகிறது. பிசுமத்தின் இருப்பைக் கண்டறியும் பருமனறி பகுப்பாய்வில் இவ்விரு சேர்மங்களும் அடிப்படையானவைகள் ஆகும்[8].
சூடுபடுத்தும் போது பிசுமத்(III) நைட்ரேட்டு சிதைவடைந்து நைட்ரசன் ஈராக்சைடாக உருவாகிறது[9]
அமைப்பு
[தொகு]முச்சரிவு படிக அமைப்பில் பிசுமத்(III) நைட்ரேட்டு காணப்படுகிறது. மற்றும் இது 10 Bi3+ ஒருங்கிணைப்புகளைக் கொண்டுள்ளது., (மூன்று இரட்டை நைட்ரேட்டு அயனிகள் மற்றும் நான்கு தண்ணீர் மூலக்கூறுகள்).[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lazarini, F. (15 August 1985). "Redetermination of the structure of bismuth(III) nitrate pentahydrate, Bi(NO3)3.5H2O". Acta Crystallographica Section C Crystal Structure Communications 41 (8): 1144–1145. doi:10.1107/S0108270185006916.
- ↑ "Normal Bismuth Nitrate, Bi(NO3)3".
- ↑ Mary Eagleson (1994). Concise encyclopedia chemistry. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Rich, Ronald (2007). Inorganic Reactions in Water (e-book). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-73962-3.
- ↑ Lazarini, F. (1981). "Thermal dehydration of some basic bismuth nitrates". Thermochimica Acta 46 (1): 53–55. doi:10.1016/0040-6031(81)85076-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:00406031.
- ↑ 7.0 7.1 Suzuki, Hitomi, ed. (2001). Organobismuth Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-20528-4.
- ↑ A.I. Vogel,(1951), Quantitative Inorganic analysis, (2d edition), Longmans Green and Co
- ↑ Krabbe, S.W.; Mohan, R.S. (2012). "Environmentally friendly organic synthesis using Bi(III) compounds". In Ollevier, Thierry (ed.). Topics in Current chemistry 311, Bismuth-Mediated Organic Reactions. Springer. pp. 100–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-27239-4.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |