பாறை மீன்
Appearance
பாறை மீன் (Rockfish) என்பது பாறைகளில் மறைந்து கொள்ளும் திறன் கொண்ட பல்வேறு வகையான மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும். உணவிற்குப் பயன்படும் பல்வேறு மீன்களைக் குறிக்கவும் பாறை மீன் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.[1] இந்த பொதுவான பெயரானது பல குழுக்களைச் சார்ந்த மீன்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய குழுக்கள் நெருங்கிய தொடர்புடையவை அல்ல. இவை தனித்தவையாக இருக்கலாம்.[2]
பாறைமீன் என்று அழைக்கப்படும் மீன்களின் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- குடும்பம் செபாசுடிடே, உலகெங்கிலும் உள்ள கடல்களில் வசிக்கும் கடல் மீன்கள். இசுகோர்பேமிடே குடும்பத்தில் இவற்றைச் சேர்க்கலாம்.[3]
- செபாசுடசு[4] செபாசுடிடேயில் வணிக ரீதியாக முக்கியமான மீன் வாய்ந்த மீன் பேரினம், முக்கியமாக வட பசிபிக் பகுதியில் வசிக்கும், ஆனால் வடக்கு அட்லாண்டிக் மற்றும் தெற்கு பெருங்கடல்களில் ஒரு சில சிற்றினங்கள் காணப்படுகின்றன.
- 'அகாந்தோக்ளினசு, நியூசிலாந்தில் காணப்படும் மீன் பேரினம்
- நர்ஸ்ஹவுண்ட் புல் ஹஸ் அல்லது புல் ஹஸ் ('இசுகைலியோஹினசு இசுடெல்லாரிசு'), உணவு வகைகளில் பயன்படுத்தும்போது பாறை சால்மன் என அழைக்கப்படும் சுறா
- 'ஹெக்ஸாகிராமோசு', இது வடபசிபிக் கிரீன்லிங் பேரினமாகும்
- 'ஹைப்போபிளெக்ட்ரோட்டசு', செரானிடே குடும்பத்தில் உள்ள மீன் பேரினம்
- சால்வேனியசு- காலா மீன் குடும்பத்தைச் சேர்ந்த மீன் பேரினம்
- கல் மீன், இந்தோ-பசிபிக் கடலில் காணப்படும் நஞ்சுள்ள பேரினம்
- வரி கொடுவா- வட அமெரிக்காவைச் சேர்ந்த மீனினம்
- பொதுவான மத்திய தரைக்கடல் பேரினமான இசுகார்பேனா ('இசு. மேடரென்சிசு')
- மைலியோபாடிஸ் குடீ, இது சில நேரங்களில் "பாறை மீன்" என்று அழைக்கப்படுகிறது
- களவா துணைக்குடும்பத்தினைச் சேர்ந்த மீன்கள்
- மைலியோபாடிசு கூடெய், விலாங்கு குடும்பத்தைச் சேர்ந்த மீன், பாறை மீன் என அழைக்கப்படுகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rockfish. Monterey Bay Aquarium Seafood Watch.
- ↑ Leschin-Hoar, C. Do Fish Names Encourage Fishy Business? National Public Radio. 30 July 2015.
- ↑ List of Rockfish (Scorpaenidae) Species. AFSC Guide to Rockfishes. Alaska Fisheries Science Center. NOAA.
- ↑ Rockfish (Sebastes spp.). Monterey Bay Aquarium.