பற்றவைத்த இணைப்பு
பற்றுவைத்த இணைப்பு (Welding joint) என்பது இரண்டு ஒரே மாதிரியான அல்லது வெவ்வேறு வகையான உலோகங்களை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேலே வெப்பப்படுத்தி இணைப்பது. இணைப்பு பயன்பாட்டிற்கு தகுந்தவாறு இணைப்பின்போது அழுத்தம் தரப்படுகிறது.
வகைகள்
[தொகு]- முட்டிணைப்பு (Butt Joint)
- இடைப்பட்டை இணைப்பு ( Fillet Joint )
முட்டிணைப்பு
[தொகு]ஒரே தளத்தில் அல்லது கிட்டத்தட்ட ஒரே தளத்தில் இரண்டு பொருட்களை இணைப்பது முட்டிணைப்பு ஆகும். இது 5 வகைப்படும்.
- சதுர முட்டிணைப்பு
- V வடிவ முட்டிணைப்பு
- U வடிவ முட்டிணைப்பு
- இரட்டை V வடிவ முட்டிணைப்பு
- பற்றவைப்பு உதவுபட்டையுடன் கூடிய V வடிவ முட்டிணைப்பு
சதுர முட்டிணைப்பு
[தொகு]பற்றவைப்பு செய்யபட வேண்டிய தட்டின் தடிமன் 5 மிமீ வரை இருக்கும்போது சதுர முட்டிணைப்பு செய்யப்படுகிறது. தட்டின் தடிமன் குறைவாக இருப்பதால் இணைப்பதற்கு முன் விளிம்பு உருவாக்கம் ( Edge Preparation ) செய்யத் தேவையில்லை.
V வடிவ முட்டிணைப்பு
[தொகு]பற்றவைப்பு செய்யப்பட வேண்டிய தட்டின் தடிமன் 5 மிமீ முதல் 25 மிமீ வரை இருக்கும்போது V வடிவ முட்டிணைப்பு செய்யப்படுகிறது. தட்டின் தடிமனுக்கு ஏற்றவாறு இரண்டு தட்டின் விளிம்புகளும் மழுக்கப்பட்டு இணைப்பதற்கு முன் விளிம்பு உருவாக்கம் (Edge Preparation) செய்யப்படுகிறது. இந்த இணைப்பு ஒரு பக்கத்தில் மட்டும் நடைபெறுவதால் இது ஒற்றை V வடிவ முட்டிணைப்பு (Single V-Butt Joint) எனவும் அழைக்கப்படுகிறது.
U வடிவ முட்டிணைப்பு
[தொகு]பற்றவைப்பு செய்யபட வேண்டிய தட்டின் தடிமன் 20 மிமீ க்கு மேல் இருக்கும்போது U வடிவ முட்டிணைப்பு செய்யப்படுகிறது. தட்டின் தடிமனுக்கு ஏற்றவாறு இரண்டு தட்டின் விளிம்புகளும் மழுக்கப்பட்டு இணைப்பதற்கு முன் விளிம்பு உருவாக்கம் (Edge Preparation) செய்யப்படுகிறது. இந்த இணைப்பு ஒரு பக்கத்தில் மட்டும் நடைபெறுவதால் இது ஒற்றை U வடிவ முட்டிணைப்பு (Single U-Butt Joint) எனவும் அழைக்கப்படுகிறது.
இரட்டை V வடிவ முட்டிணைப்பு
[தொகு]பற்றவைப்பு செய்யபட வேண்டிய தட்டின் தடிமன் 30 மிமீ க்கு மேல் இருக்கும்போது இரட்டை V வடிவ முட்டிணைப்பு செய்யப்படுகிறது. தட்டின் தடிமனுக்கு ஏற்றவாறு இரண்டு தட்டின் விளிம்புகளும் மழுக்கப்பட்டு இணைப்பதற்கு முன் விளிம்பு உருவாக்கம் (Edge Preparation) செய்யப்படுகிறது. இந்த இணைப்பு இரண்டு பக்கத்திலும் நடைபெறுவதால் இது இரட்டை V வடிவ முட்டிணைப்பு (Double V-Butt Joint) என அழைக்கப்படுகிறது.
பற்றவைப்பு உதவுபட்டையுடன் கூடிய V வடிவ முட்டிணைப்பு
[தொகு]கசிவு ஏற்படுவதை தடுப்பதற்கு இந்த பற்ற வைப்பு உதவுகிறது. இங்கு உதவுபட்டையானது இரும்பு அல்லது தாமிரம் பொருளால் ஆனது.
இடைப்பட்டை இணைப்பு
[தொகு]செங்குத்து தளம் அல்லது இரண்டு பொருட்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்குமாறு இணைப்பது முட்டிணைப்பு ஆகும். இது இரண்டு வகைப்படும். அவையாவன:
- குறுக்குநிலை இடைப்பட்டை இணைப்பு (Transverse Fillet Joints)
- இணைநிலை இடைப்பட்டை இணைப்பு (Parallel Fillet Joint)
குறுக்குநிலை இடைப்பட்டை இணைப்பு
[தொகு]இணைப்பு செய்யப்படும் திசைக்கு குறுக்குநிலை அல்லது செங்குத்தான திசையில் விசை செயல்பட்டால் அது குறுக்கு நிலை இடைப்பட்டை இணைப்பு எனப்படும். இது இரண்டு வகைப்படும். அவையாவன:
- ஒற்றை குறுக்கு நிலை இடைப்பட்டை இணைப்பு
- இரட்டை குறுக்கு நிலை இடைப்பட்டை இணைப்பு
இணைநிலை இடைப்பட்டை இணைப்பு
[தொகு]இணைப்பு செய்யப்படும் திசைக்கு நேரான அல்லது கிடைத்தள திசையில் விசை செயல்பட்டால் அது இணைநிலை இடைப்பட்டை இணைப்பு எனப்படும். இது இரண்டு வகைப்படும். அவையாவன:
- ஒற்றை இணைநிலை இடைப்பட்டை இணைப்பு
- இரட்டை இணைநிலை இடைப்பட்டை இணைப்பு