நரை நரி
நரை நரி Hoary fox[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லைகலோபெக்சு
|
இனம்: | லை. வெட்டூலசு
|
இருசொற் பெயரீடு | |
லைகலோபெக்சு வெட்டூலசு (லுண்ட், 1842) | |
பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
சூடோஅலோபெக்சு வெட்டூலசு |
நரை நரி (Hoary fox) என்பது பிரேசிலில் ராபோசின்ஹா-டோ-காம்போ என்றும் அழைக்கப்படும் லைகலோபெக்சு வெட்டூலசு (போர்ச்சுகீசிய மொழியில் "புல்வெளியின் சிறிய நரி") என்பது பிரேசிலில் மட்டுமே காணப்படும் ஓர் அகணிய நரிச் சிற்றினம் ஆகும். இது பிற நரிகளைப் போலல்லாமல், முதன்மையாகப் பூச்சிகள் போன்ற சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது.
விளக்கம்
[தொகு]நரை நரி குறுகிய முகவாயில் சிறிய பற்களைக் கொண்டுள்ளது. மெல்லிய தோலுடன் குட்டைக் கால்களைக் கொண்டது. உடலின் மேல் பகுதி சாம்பல் நிறமாகவும், உடலின் அடிப்பகுதி நுரை அல்லது மான் நிறத்திலிருக்கும். வால் நுனியில் கருப்பு நிறத்தில் மேல் மேற்பரப்பில் இருண்ட பட்டையுள்ளது. இது ஆண் விலங்குகளில் கழுத்தின் பின்புறம் வரை நீட்டிக்கப்படலாம். காதுகள் மற்றும் கால்களின் வெளிப்புறப் பகுதி சிவப்பு அல்லது பழுப்பு நிறமாகவும், கீழ்த் தாடை கருப்பு நிறமாகவும் இருக்கும். சில நிறமற்ற அல்பினோ விலங்குகளும் பதிவாகியுள்ளன.[3] [4]
இந்த நரிக்குச் சிறியது, 3 முதல் 4 kg (6.6 முதல் 8.8 lb) எடையுடையது. தலை மற்றும் உடல் நீளம் 58 முதல் 72 cm (23 முதல் 28 அங்) வரையும் வாலின் நீளம் 25 முதல் 36 cm (9.8 முதல் 14.2 அங்) வரையிலிருக்கும். இதன் மெல்லிய உருவம், இது சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க ஏதுவாக உள்ளது. அதே சமயம் இதனுடைய பலவீனமான பற்கள் காரணமாகப் பெரிய இரையை விட முதுகெலும்பில்லாத சிறிய உயிரினங்களையே வேட்டையாட வழிவகுக்கின்றது.[4]
நடத்தையும் உணவும்
[தொகு]நரை நரிகள் இரவு நேர விலங்குகளாகவும்.[5] இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் தனித்தனியாகக் காணப்படும். இவை பூச்சிகளை, குறிப்பாகக் கறையான்கள், சாண வண்டுகள் மற்றும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிடுகின்றன.[6] ஆனால் கொறித்துண்ணிகள், சிறிய பறவைகள் மற்றும் பழங்களையும் சாப்பிடலாம். உள்ளூர் சூழலைப் பொறுத்து மாறுபட்ட வாழிட வரம்புகளைக் கொண்டுள்ளன. சுமார் 385 ha (950 ஏக்கர்கள்) பகுதி தெற்கு பாகையாவில் 1 வயது வந்த பெண் நரிக்கும், 456 ha (1,130 ஏக்கர்கள்) மினாஸ் ஜெரைசு மேய்ச்சல் நிலத்தில் வயது வந்த இனப்பெருக்க இணைக்கும் 5 இளம் சந்ததிகளைக் கொண்ட குழுவிற்கும், மற்றும் 48 ha (120 ஏக்கர்கள்) கிழக்கு மாட்டோ க்ரோசோவில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் 3 ஆய்வுக் குழுக்களில் 2 இனப்பெருக்க இணைகளுக்கான வாழிடமாக உள்ளது.[4]
வரம்பு
[தொகு]நரை நரியின் பூர்வீகம் தென்-மத்திய பிரேசில் ஆகும். இருப்பினும் சில நரிகள் நாட்டின் வடக்கில் காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பிலிசுடோசீன் புதைபடிவங்கள் அர்கெந்தீனாவிலிருந்து அறியப்படுகின்றன. இவை மிகவும் குறுகிய வாழிடங்களில் காணப்பட்டாலும், பொதுவாக செராடோவில் 90 மற்றும் 1,100 m (300 மற்றும் 3,610 அடி) உயரப் பகுதிகளில் வாழ்கின்றன. இங்குத் திறந்த வனப்பகுதிகள், புதர் நிலங்கள் மற்றும் சவன்னாக்கள் மென்மையானவை அல்லது மரங்களால் சிதறிக்கிடக்கின்றன.[4]
துணையினங்கள் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை.
இனப்பெருக்கம்
[தொகு]ஆகத்து முதல் செப்டம்பர் வரை குட்டிகளை ஈனும் காலமாகும். ஒரு முறை இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை 50 நாள் கர்ப்பக்காலத்திற்குப் பின் ஈனும்.[7] பாலின விகிதம் 1:1 என்ற அளவிலே உள்ளது.[8] பெண் நரி தோண்டும் குகையிலோ அல்லது பிற விலங்குகள் பயன்படுத்தும் குகையிலோ குட்டிகளைப் பிரசவிக்கும். பாலூட்டுதல் நான்கு மாதக் கால அளவிற்குத் தொடரும்.[9] குட்டிகளை வளர்ப்பதில் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்படும்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
{{cite book}}
:|editor=
has generic name (help); External link in
(help)CS1 maint: multiple names: editors list (link)|title=
- ↑ Lemos, F.G.; Azevedo, F.C.; Paula, R.C.; Dalponte, J.C. (2020). "Lycalopex vetulus". IUCN Red List of Threatened Species 2020: e.T6926A87695615. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T6926A87695615.en. https://www.iucnredlist.org/species/6926/87695615. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Lycalopex vetulus". University of Michigan Museum of Zoology. Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 30 October 2010.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Dalponte, J.C. (2009). "Lycalopex vetulus (Carnivora: Canidae)". Mammalian Species 847: 1–7. doi:10.1644/847.1.
- ↑ Courtenay, O. (2006). "First observations on South America's largely insectivorous canid: the hoary fox (Pseudalopex vetulus)". Journal of Zoology 268 (1): 45–54. doi:10.1111/j.1469-7998.2005.00021.x.
- ↑ "Lycalopex vetulus (Hoary fox)". Animal Diversity Web.
- ↑ Dalponte, J.C. (2009). "Lycalopex vetulus (Carnivora: Canidae)". Mammalian Species 847: 1–7. doi:10.1644/847.1.
- ↑ Courtenay, O. (2006). "First observations on South America's largely insectivorous canid: the hoary fox (Pseudalopex vetulus)". Journal of Zoology 268 (1): 45–54. doi:10.1111/j.1469-7998.2005.00021.x.
- ↑ Dalponte, J.C. (2009). "Lycalopex vetulus (Carnivora: Canidae)". Mammalian Species 847: 1–7. doi:10.1644/847.1.
- ↑ Courtenay, O. (2006). "First observations on South America's largely insectivorous canid: the hoary fox (Pseudalopex vetulus)". Journal of Zoology 268 (1): 45–54. doi:10.1111/j.1469-7998.2005.00021.x.