சுங்கை காடுட்
சுங்கை காடுட் | |
---|---|
Sungai Gadut | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°40′N 102°00′E / 2.667°N 102.000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | சிரம்பான் |
சுங்கை காடுட் (ஆங்கிலம்: Sungai Gadut; மலாய் மொழி: Sungai Gadut) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சுங்கை காடுட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அனைத்துலக அளவில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செனவாங் தொழிற்சாலைப் பகுதி, மாநிலத்தின் இரண்டாவது மிக முக்கியமான தொழில்துறைப் பகுதியாக விளங்குகிறது.
பொது
[தொகு]இந்த நகரப் பகுதி மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (North–South Expressway Southern Route); செனவாங் சந்திப்பு (Senawang Junction); கூட்டரசு சாலை 1 (மலேசியா) ; மற்றும் சுங்கை காடுட் சாலை N5 வழியாக இணைக்கப்பட்டு உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்
[தொகு]அருகிலுள்ள வீடுமனை குடியிருப்புகள்
[தொகு]- தாமான் துவாங்கு ஜபார் - Taman Tuanku Jaafar
- பண்டார் சிரம்பான் செலாத்தான் - Bandar Seremban Selatan
- தாமான் பெங்கீரான் செனவாங் - Taman Pinggiran Senawang
- தாமான் செனவாங் பெர்டானா - Taman Senawang Perdana
- லாடாங் சிரம்பான் - Ladang Seremban
- கம்போங் உலு ரந்தாவ் - Kg. Ulu Rantau
- தாமான் ஸ்ரீ பெர்த்தாமா - Taman Sri Pertama
சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
[தொகு]சுங்கை காடுட் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 565 மாணவர்கள் பயில்கிறார்கள். 44 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1][2]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|
NBD4081 | சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Seremban | சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | சுங்கை காடுட் | 565 | 44 |
மேற்கோள்
[தொகு]- ↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
- ↑ "SJK(T) Ladang Seremban - This school has been selected for School Transformation Programme 2025 (TS25) by Ministry of Education". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.