உள்ளடக்கத்துக்குச் செல்

கைவினை வெடி குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் 2005இல் பாக்தாத் நகரில் இராக்கிய காவல்துறையினர் கண்டுபிடித்த கைவினை வெடிகுண்டுகளாக தயாரிக்க வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்
இராக்கின் அல் அன்பரில் கவச படை வண்டி ஒன்று 300-500 பவுண்ட் அளவுள்ள கைவினை வெடிகுண்டின் நேரடித் தாக்குதலால் சிதறடிக்கப்பட்டுள்ளது.

கைவினை வெடிகுண்டு (improvised explosive device, IED) அல்லது தெருவோர குண்டு என்பது கைவினையாக வீடுகளில் செய்யப்பட்டு, வழமையான படைத்துறை சண்டைகளைப் போலன்றி மாற்றுவழிகளில் செயல்படுத்துகின்ற வெடிகுண்டுகளாகும். வழமையான படைத்துறை ஆயுதங்களை, காட்டாக எறிகணைகளை, வெடிக்கவைக்கும் இயங்குமுறையோடு இணைத்தும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகைய கைவினை வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் செயல்படுத்தலாம்; அல்லது வழமையில்லா போர்களில் கொரில்லாப் போர்முறையில் போராளிகளும் அதிரடி படைகளும் தங்கள் சண்டைக்களங்களில் பயன்படுத்தலாம். இரண்டாவது இராக் போரின்போது கைவினை வெடிகுண்டுகள் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன; 2007ஆம் ஆண்டு இறுதியில் இராக்கில் இறந்த கூட்டுப் படையினரில் 64% கைவினை வெடிகுண்டுகளுக்கே பலியாயுள்ளனர். ஆப்கானிஸ்தானிலும் கிளர்ச்சிக்காரர்கள் இவ்வகை வெடிகுண்டுகளால் 2001 முதல் இன்றுவரை 66% கூட்டுப் படையினரை அழித்ததாக மதிப்பிடப்படுகிறது.[1]

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் படைத்துறை இலக்குகளை நோக்கி இத்தகைய வெடிகுண்டுகளையே பயன்படுத்தினர்.[2][3] இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்களில் கைவினை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
  2. "Suicide Terrorism: A Global Threat". Pbs.org. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
  3. "13 killed in blasts, arson in Sri Lanka". Hindu.com. 2006-04-13. Archived from the original on 2006-04-14. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவினை_வெடி_குண்டு&oldid=3551486" இலிருந்து மீள்விக்கப்பட்டது