உள்ளடக்கத்துக்குச் செல்

குலாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலாளா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலங்காணா கர்நாடகா கேரளா
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு மலையாளம் கர்நாடகா
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வேளார், உடையார், செட்டியார், குயவர்


தமிழ்நாட்டில் குலாளா என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான கடவுள் சிலை, மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார். குலாளர், குலாளா குலாள்,கோலப்பர், வேளார், சேரமா, செட்டியார், பூசாரி,பண்டுரை, பாண்ட, பாண்டிய, தெங்கரை, தெலுங்கு மானுடை, மண்உடையார், உடையார், , ஓசிரையர், சாலியர், சோலியர், மண்ணையர் எனப் பல்வேறு இனக்குழுப் பெயராலும், தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திருவிட மொழிகளாலும், பூர்வீக நிலவாழ்வினாலும் பல்வேறு துணைப் பிரிவினராக அறியப்படும் குலாளர் அன்றைய காலத்தில் சமூக மதிப்பீட்டில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் என்பது பல்வேறு கல்வெட்டு, இலக்கியப் பதிவுகளின் மூலம் புலப்படுகின்றன.குலாளர் மட்பாண்டத் தயாரிப்போடு அவற்றைப் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டார்கள்.சங்க, புராண இலக்கியங்களில், கலம்செய்கேரி, மண்ணுடையார், மண்ணீட்டாளர், மண்வினை மாக்கள், மண்மகன், வேட்கோ, வேட்கோவர் என்றெல்லாம் தொழில்முறையாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் கோயில் பணியாளர்களாக, பாதுகாவலர்களாக பூசகர் மரபினராக இருந்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். மற்றும் தமிழகத்தில் குலாளர்கள் 39 லட்சத் திற்கும் மேலனோர் வசிக்கின்றனர் .[1] [2] [3]

சமுதாயச் சிறப்புக்கள்

[தொகு]
  • 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் என்பவர் குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4][5][6] 1930களில் இந்த மக்களின் நலத்தை முன்னேற்ற குலாலமித்திரன்[7] என்னும் இதழ் வெளிவந்தது.

அரசியல் பங்களிப்பு

[தொகு]

குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் அரசியலில் முக்கியப் பிரமுகர்களாக சிலர் பங்களிப்பு செய்துள்ளனர்.

  • சுப்புராஜ் - முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர்
  • பெரிய வீரன் - முன்னாள் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக
  • பி. கே. நல்லசாமி -முன்னாள் பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் முதல் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஈரோடு மாவட்டம்

கேரளா குலாளர்

[தொகு]

கேரளாவில், குலாளர் சமூகத்தினர் கும்பாரர் குசவன்,வேளான்,நாயர்,மூல்யா வேளார்,என அழைக்கப்படுகின்றனர்.இதில் கும்பாரா என்பவர்கள் கும்பார மொழி பேசுகின்றனர். கேரளத்தில், நிலாம்பூர் பிரதேசத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் மொழியாகும். இவர்கள் எல்லோரும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து, தமிழகம் வழியாகக் கேரளம் போய்ச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் துளு,என்று கலந்து சேர்ந்த மொழிதான் கும்பார மொழி. இதற்கு வரிவடிவம் கிடையாது என்பதால், கும்பார இனத்தவர்கள் தங்களுக்குப் பழக்கமான மலையாள வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "மண்கலைஞர்கள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  4. கி. வா. ஜகந்நாதன், ed. (1980). விடைகள் ஆயிரம். Vol. 20. அமுத நிலையம். p. 169. 624.திருநீலகண்ட நாயனர், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனர் ஆகிய இருவரும் ஒருவரா? இருவரும் வேறு.திருநீலகண்டநாயனர் குலால வம்சத்தைச் சேர்ந்தவர், திருநீலகண்டயாழ்ப்பாணர் பாணர் குலத்தினர்;
  5. கி. வா. ஜகன்னாதன் (1941). கீழாம்பூர். ஆர்.நாராயணஸ்வாமி (ed.). கலைமகள் இதழ். Vol. 20. p. 78:. சிதம்பரத்தில் குலாளர் குலத்தில் கிருநீலகண்டரென்பவர் உதித்து இளமை தொடங்கியே சிவபக்திச் செல்வமுடையவராகி விளங்கினர் {{cite book}}: Missing |author1= (help); no-break space character in |quote= at position 75 (help)CS1 maint: extra punctuation (link)
  6. புலவர் செ. இராசு, ed. (1991). கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். அரை காலிகோ. p. 184. திருநீலகண்டர் குலாளர் சமூகத்தில் பிறந்தவர்  .கிபி . 15ஆம் நூற்றாண்டில் தீர்த்தகிரி மலையில் குலாளர் குலப் பெருமக்களால் திருநீலகண்டர் பெயரில் திருமடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.இது 56 தேசத்திலும் உள்ள திருநீலகண்டர்கள் ( குலாளர்கள் ) பலர் சேர்ந்து ஏற்படுத்திய மடம் .மடத்தில் திருநீலகண்டரையும் , இராமலிங்க பண்டாரத்தையும் பிரதிட்டை செய்தனர் . {{cite book}}: line feed character in |quote= at position 14 (help)
  7. சுப்பிரமணிய ராமசாமி புலவர், ed. (1961). நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1. p. 166. குலாலமித்திரன் 1931
  8. மத்தளராயன் என்பவர் கட்டுரையில் ஒரு செய்தி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாலா&oldid=3832799" இலிருந்து மீள்விக்கப்பட்டது