உள்ளடக்கத்துக்குச் செல்

குறு ஒளிர்வண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூஜிசி 9128 என்னும் குறு ஒளிர்வண்டத்தில் நூறு மில்லியன் விண்மீன்களே காணப்படுகின்றன.

குறு ஒளிர்வண்டம் (dwarf galaxy) என்பது சில பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு சிறிய விண்மீன் பேரடையாகும். எமது பால் வழிப் பேரடையில் இருக்கக்கூடிய 200–400 பில்லியன் விண்மீன்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறு ஒளிர்வண்டம் ஒன்றில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகும். 30 பில்லியன் விண்மீன்களைக் கொண்ட பெரும் மெகல்லானிய மேகங்கள் சிலவேளைகளில் குறு ஒளிர்வண்டமெனக் கூறப்படுகிறது.

குறு ஒளிர்வண்டத்தின் தோற்றம்

[தொகு]

தற்போதைய கொள்கையின் படி, குறு ஒளிர்வண்டங்கள் உட்பட பெரும்பாலான விண்மீன் பேரடைகள் கரும்பொருளின் உதவியுடன் அல்லது உலோகங்களைக் கொண்டிருக்கக்கூடிய வளிமங்களினால் உருவாகின. ஆனாலும், நாசாவின் அண்டத் தேட்டக் கலம் என்ற விண்கலம் உலோகங்களைக் கொண்டிராத வளிமங்களினால் உருவாகிய புதிய குறு ஒளிர்வண்டங்களைக் கண்டறிந்துள்ளது.[1].

உள் குறு ஒளிர்வண்டங்கள்

[தொகு]
பீனிக்சு குறு ஒளிர்வண்டம்: இதன் உட்பகுதியில் இளம் விண்மீன்களும், வெளிப்பகுதியில் வயது போன விண்மீன்களும் காணப்படுகின்றன[2]

உட் குழுவில் பெருமளவு குறு ஒளிர்வண்டங்கள் காணப்படுகின்றன: இவை பெரும்பாலும் பால் வழி, அந்திரொமேடா பேரடை, முக்கோண விண்மீன் பேரடை போன்ற பெரும் பேரடைகளைச் சுற்றி வலம் வருகின்றன. 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில்[3] பெரும்பாலான குறு ஒளிர்வண்டங்கள் பால் வழி, அந்திரொமேடா பேரடை போன்றவற்றின் ஆரம்பப் படிமுறை வளர்ச்சியின் போது ஏற்பட்ட பரலை விசைகளினால் (tidal forces) உருவாகின எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய குறு ஒளிர்வண்டங்கள் விண்மீன் பேரடைகளின் மோதுகையினால் உருவாகின்றன[4].

பால் வழியை 20 இற்கும் மேற்பட்ட குறு ஒளிர்வண்டங்கள் சுற்றிவருவதாகத் தெரியவந்துள்ளது. 2008 ஆய்வு முடிவுகளின் படி[5] பால் வழியில் காணப்படும் மிகப்பெரும் உருண்டையான விண்மீன் தொகுதியான ஒமேகா செண்ட்டாரி ஒரு குறு ஒளிர்வண்டம் என வானியலாளர்கள் கருதுகின்றனர். இதன் நடுவே கருங்குழி ஒன்று காணப்படுவதையும் கண்டறிந்துள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Recipe For Dwarf Galaxies: Start With Leftover Gas", Science Daily, 19 February 2009
  2. "Hubble Sizes up a Dwarf Galaxy". Picture of the Week. ESA/Hubble. பார்க்கப்பட்ட நாள் 25 October 2011.
  3. Metz, M.; Kroupa (2007). "Dwarf-spheroidal satellites: are they of tidal origin?". Monthly Notices of the Royal Astronomical Society 376: 387–392. doi:10.1111/j.1365-2966.2007.11438.x. Bibcode: 2007MNRAS.376..387M. 
  4. New Recipe for Dwarf Galaxies: Start with Leftover Gas Newswise, Retrieved on February 20, 2009.
  5. Noyola, E. and Gebhardt, K. and Bergmann, M. (2008). "Gemini and Hubble Space Telescope Evidence for an Intermediate-Mass Black Hole in ω Centauri". The Astrophysical Journal 676 (2): 1008–1015. doi:10.1086/529002. Bibcode: 2008ApJ...676.1008N. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறு_ஒளிர்வண்டம்&oldid=3345661" இலிருந்து மீள்விக்கப்பட்டது