குரோமியம்(II) ஆக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(II) ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12018-00-7 | |
பண்புகள் | |
CrO | |
வாய்ப்பாட்டு எடை | 67.996 கி/மோல் |
தோற்றம் | கருப்பு |
உருகுநிலை | 300 °C (572 °F; 573 K) (சிதைவடைகிறது) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், Pearson symbol |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(II) ஆக்சைடு (Chromium(II) oxide) என்பது CrO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது[1]. கருப்புநிறத் தூளாக காணப்படும் இச்சேர்மம் பாறையுப்பு வடிவில் படிகமாகிறது. குரோமியம்(III) ஆக்சைடை, ஐப்போபாசுபைட்டுகள் குரோமியம்(II) ஆக்சைடாக குறைக்கின்றன.
- H3PO2 + 2 Cr2O3 → 4 CrO + H3PO4
சுற்றுச் சூழலில் எளிதாக குரோமியம்(II) ஆக்சைடு ஆக்சிசனேற்றம் அடைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Satish. Anand, Raj. Kumar (1989), Dictionary of Inorganic Chemistry, Anmol Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-236-6
இவற்றையும் காண்க
[தொகு]- குரோமியம்(III) ஆக்சைடு
- குரோமியம்(IV) ஆக்சைடு
- குரோமியம்(VI) ஆக்சைடு