கால்சியம் ஐதரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஐதரைடு
| |
வேறு பெயர்கள்
கால்சியம்(II) ஐதரைடு
கால்சியம் ஈரைதரைடு ஐதரோலித் | |
இனங்காட்டிகள் | |
7789-78-8 | |
ChemSpider | 94784 |
EC number | 232-189-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 105052 |
| |
பண்புகள் | |
CaH2 | |
வாய்ப்பாட்டு எடை | 42.094 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் நிறத்தூள் (தூய்மையான நிலையில் வெண்மை) |
அடர்த்தி | 1.70 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 816 °C (1,501 °F; 1,089 K) |
தீவிரமாக வினைபுரிகிறது | |
கரைதிறன் | ஆல்ககாலில் வினைபுரியும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP12 |
புறவெளித் தொகுதி | Pnma, No. 62 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−181.5 கி.யூல்•மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
41.4 யூல்•மோல்−1•கெ−1[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H260 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் ஐதரைடு, பொட்டாசியம் ஐதரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கால்சியம் ஐதரைடு (Calcium hydride) என்பது CaH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காரமண் உலோகத்தினுடைய ஐதரைடு சேர்மம் என்பதால் இதை ஒரு காரமண் ஐதரைடு என்று அழைக்கிறார்கள். தூய்மையான நிலையில் வெண்மை நிறத்துடனும் மாதிரிகளில் சாம்பல் நிறத்துடனும் காணப்படும் கால்சியம் ஐதரைடு தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து ஐதரசன் வாயுவை வெளியிடுகிறது. எனவே இச்சேர்மத்தை ஓர் உலர்த்தும் முகவராக அல்லது ஓர் ஈரமுறிஞ்சியாக பயன்படுத்த இயலும்.
கால்சியம் ஐதரைடு உப்பைப் போன்ற கட்டமைப்பு கொண்ட ஓர் உப்புநீர் ஐதரைடு ஆகும். பெரிலியத்தை விட கனமான கார உலோகங்கள் மற்றும் காரமண் உலோகங்கள் அனைத்தும் உப்புநீர் ஐதரைடுகளாக உருவாகின்றன. சோடியம் ஐதரைடு நன்கு அறியப்பட்ட ஓர் உதாரணமாகும். இது சோடியம் குளோரைடின் மையக்கருத்தை ஒத்த கட்டமைப்பில் படிகமாகிறது. இவ்வினங்கள் யாவும் கரைப்பான்களில் கரையாது மற்றும் வினைபுரியாது. கால்சியம் ஐதரைடு PbCl2 கட்டமைப்பில் (காட்டுனைட்டு)
தயாரிப்பு
[தொகு]300 முதல் 400° செல்சியசு வெப்பநிலையில் [2]
கால்சியம் மற்றும் ஐதரசன் ஆகிய தனிமங்கள் நேரடியாக இணைந்து கால்சியம் ஐதரைடு உருவாகிறது.
பயன்கள்
[தொகு]உலோக ஆக்சைடுகள் ஒடுக்கும்
[தொகு]Ti, V, Nb, Ta, மற்றும் U போன்ற தனிமங்களின் உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்கும் முகவராக CaH2 பயன்படுகிறது. கால்சியம் உலோகமாக இது சிதைவடைந்து இச்செயல்முறையை CaH2 நிகழ்த்துகிறது :[2]
- TiO2 + 2 CaH2 → Ti + 2 CaO + 2 H2.
ஐதரசன் மூலம்
[தொகு]ஐதரசன் உற்பத்தியில் கால்சியம் ஐதரைடு பயன்படுத்தப்படுகிறது. 1940 ஆம் ஆண்டுகளில் ஐதரோலித் என்ற வர்த்தகப் பெயரில் ஐதரசன் மூலமாக இச்சேர்மம் விற்பனைக்கு கிடைத்தது.
'இச்சேர்மத்தின் வர்த்தகப் பெயர் ”ஐதரோலித்’’[3] ஆகும். அவசர காலங்களில் ஆகாயக் கப்பல்களில் கையடக்க ஐதரசன் மூலமாக இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இப்பயன்பாட்டிற்கு இதுவோர் விலையுயர்ந்த முறையாகும்.'[4]
அவசர காலம் என்று குறிக்கப்பட்டிருப்பது அநேகமாக போர்க் காலத்தை குறிப்பிடுவதாக இருக்கலாம். ஆயினும், பல பத்தாண்டுகளாக இச்சேர்மம் பரவலாக வானியல் பலூன்களை ஊதுவதற்கு ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான வழிமுறையாக பயன்படுத்தப்படுகிறது.
அவ்வாறே, வேதியியல் பரிசோதனைகளுக்காக சிறிய அளவில் மீத்தூய ஐதரசனை உற்பத்தி செய்ய ஆய்வகங்களில் இது வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. டீசல் எரிபொருளின் ஈரப்பதம், CaH 2 </ sub> உடன் சேர்க்கப்பட்டு வெளிவிடப்படும் ஐதரசன் மூலம் மதிப்பிடப்படுகிறது [2].
ஈரமுலர்த்தி
[தொகு]CaH2 தண்ணீருடன் ஈடுபடும் வினை கீழே தரப்பட்டுள்ளது:
- CaH2 + 2 H2O → Ca(OH)2 + 2 H2
H2 மற்றும் Ca(OH)2 ஆகிய நீராற்பகுப்பு விளைபொருட்கள் இரண்டும் உலர் கரைப்பானில் இருந்து ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன.
மூலக்கூற்று சல்லைடைகளுடன் ஒப்பிடுகையில் கால்சியம் ஐதரைடு ஒரு மிதமான ஈரமுலர்த்தியாகவே கருதப்படுகிறது.[5] ஆனால் சோடியம் உலோகம் அல்லது சோடியம்-பொட்டாசியம் கலப்புலோகம் போன்ற ஈரமுலர்த்திகளைக் காட்டிலும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது ஆகும். அமீன், பிரிடின் போன்ற காரக் கரைப்பான்களில் ஈரமுலர்த்தியாக கால்சியம் ஐதரைடு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆல்ககால்களை உலர்த்துவதற்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். CaH2 பயன்படுத்துவதில் சில இடர்பாடுகளும் உள்ளன:
- எந்தக் கரைப்பானிலும் கரையாது என்பதால் இதன் வினைத்திறம் குறைவு ஆகும். LiAlH4]] சேர்மத்திற்கு மாறாக இதனுடைய உலர்த்தும் வேகம் குறைவாகும்.
- ஏனெனில் CaH2 மற்றும் Ca(OH)2 இரண்டும் கிட்டத்தட்ட பிரித்தறியமுடியாத தோற்றத்தில் காணப்படுகின்றன. எனவே CaH2 மாதிரியின் தரத்தை கண்களால் கண்டறிவது இயலாது.
ஒலிமாற்றுணர் வழிமாற்றி
[தொகு]அட்லாண்டிக் போரில், செருமன் நீர்மூழ்கிக் கப்பல்கள் போல்டு எனப்படும் ஒலிமாற்றுணர் வழிமாற்றிகளாக கால்சியம் ஐதரைடுகளை பயன்படுத்தின[6] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-94690-7.
- ↑ 2.0 2.1 2.2 Peter Rittmeyer, Ulrich Wietelmann “Hydrides” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_199
- ↑ Hydrolith in thefreedictionary.com
- ↑ Adlam G.H.J. and Price L.S., A Higher School Certificate Inorganic Chemistry, John Murray, London, 1940
- ↑ Williams, D. B. G., Lawton, M., "Drying of Organic Solvents: Quantitative Evaluation of the Efficiency of Several Desiccants", The Journal of Organic Chemistry 2010, vol. 75, 8351. எஆசு:10.1021/jo101589h 10.1021/jo101589h
- ↑ McNeil, Ian (2002-06-01). An Encyclopedia of the History of Technology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134981649.