கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கன்சர்வேட்டிவ் கட்சி Conservative Party | |
---|---|
தலைவர் | போரிஸ் ஜான்சன் |
தொடக்கம் | 1834 |
முன்னர் | டோரி கட்சி |
தலைமையகம் | 4 மெத்தியூ பார்க்கர் வீதி, லண்டன், |
இளைஞர் அமைப்பு | எதிர்காலக் கன்சர்வேட்டிவ் |
பெண்கள் அமைப்பு | கன்சர்வேட்டிவ் பெண்கள் அமைப்பு |
வெளிநாட்டுக் கிளை | வெளிநாட்டுக் கன்சர்வேட்டிவ்கள் |
உறுப்பினர் (2014) | 149,800[1] |
கொள்கை | பழமைவாதம்[2] பொருளாதாரத் தாராண்மைவாதம்[2] பிரித்தானிய ஒற்றுமைவாதம் Euroscepticism[2] |
அரசியல் நிலைப்பாடு | மைய-வலது |
பன்னாட்டு சார்பு | பன்னாட்டு சனநாயக ஒன்றியம் |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பியக் கன்சர்வேட்டிவ்கள் கூட்டமைப்பு |
நிறங்கள் | நீலம் |
மக்களவை | 331 / 650 |
பிரபுக்கள் அவை | 232 / 793 |
லண்டன் பேரவை | 9 / 25 |
ஐரோப்பிய நாடாளுமன்றம் | 20 / 73 |
உள்ளூராட்சி[3] | 8,296 / 20,565 |
இணையதளம் | |
conservatives.com |
கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிசக் கட்சி (Conservative and Unionist Party)[4] (பொதுவாக கன்சர்வேடிவ் கட்சி), பழமைவாதக் கட்சி என்று பொருள்படும் ஐக்கிய இராச்சியத்தின் ஓர் அரசியல் கட்சியாகும். இங்கிலாந்து அரசியலில் நடு-வலது பார்வை உடைய இக்கட்சி தற்போதைய வடிவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துவக்கப்பட்டது.
1678 ஆம் ஆண்டு உருவான டோரி கட்சியின் மறுபிறப்பாக விளங்கிய இக்கட்சி இன்று சில நேரங்களில் டோரி கட்சி என்றே வழங்கப்படுகிறது. இக்கட்சி அரசியல்வாதிகளும் டோரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களது பெயர் விளக்குவதைப்போலவே இக்கட்சியினர் புதுமைகளைப் புகுத்துவதை எதிர்க்கின்றனர். அரசுக் கட்டுப்பாடுகள் குறைந்து தனியார்த்துறை தழைப்பதே இவர்களது கொள்கையாகும்.
இருபதாம் நூற்றாண்டின் மூன்றில் இருபகுதி இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். 2010ஆம் ஆண்டு நடந்துள்ள பொதுத்தேர்தலில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மக்களவை (காமன்சு) யில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இக்கட்சி லிபரல் டெமக்கிராட் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. தற்போதைய கட்சித் தலைவராக போரிஸ் ஜான்சன் பதவி வகிக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Membership of UK political parties - Commons Library Standard Note". UK Parliament. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-05-10.
- ↑ 2.0 2.1 2.2 Wolfram Nordsieck. "Parties and Elections in Europe". parties-and-elections.eu. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2015-05-10.
- ↑ "Local Council Political Compositions". Keith Edkins. 24 November 2013. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Conservative and Unionist Party". www.robinsonlibrary.com. Archived from the original on 2011-09-19. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளியிணைப்புகள்
[தொகு]- அலுவல்முறை இணையதளம்
- உட்கட்சி கொள்கை உரையாடல் பரணிடப்பட்டது 2020-08-27 at the வந்தவழி இயந்திரம்
- கார்டியன் இதழ் கட்டுரை - சிறப்பு அறிக்கை: கன்சர்வேடிவ் கட்சி