கடவுச்சொல் பலம்
ஒரு கடவுச்சொல் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை கடவுச்சொல் பலம் (Password strength) என்கிறார்கள். பொதுவாக குறிப்பிட வேண்டுமென்றால், கடவுச்சொல்லை கண்டுபிடிக்க முயல்பவர் எத்தனை தடவைகளில் கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பார் என்பதை அளவிடுதலாகும். பலமிகுந்த கடவுச்சொலைப் பயன்படுத்துதல் பாதுகாப்பானதாகும். எனவே மின்னஞ்சல் நிறுவனங்களும், வங்கிகளும் பாதுகாப்பான கடவுச்சொல்லைப் பயன்படுத்துமாறு பயனர்களை வேண்டுகின்றன.
பாதுகாப்பான கடவுச்சொல்
[தொகு]வெறும் சொற்களை மட்டும் கொண்டிருக்கும் கடவுச்சொற்கள் பாதுகாப்பானவை அல்ல. கடவுச்சொல்லைக் கண்டுபிடிக்க முயல்பவர், அகராதியில் உள்ள அனைத்துச் சொற்களையும் பிரபலமான சொற்களையும் உள்ளிட்டு சோதிப்பார். எனவே இத்தகைய சொற்களைத் தவிர்க்க வேண்டும். கடவுச்சொல் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமென்றால், எழுத்துக்களுடன் எண்களையும் குறியீடுகளையும் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, a1brS, ve4Op'
கடவுச்சொற்களை கண்டுபிடிக்க தற்போது ஏராளமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிமிடத்திற்கு ஆயிரம் கடவுச்சொற்கள் என, அகராதியில் உள்ள அனைத்துச் சொற்களையும் உள்ளிட்டு எளிதில் கண்டுபிடிக்கும் செயலிகளும் உள்ளன. இத்தகைய கருவிகள், பத்து எழுத்துருக்களைக் கொண்ட கடவுச்சொல்லை ஒரே நாளில் கண்டுபிடிக்கக்கூடியவை.