உள்ளடக்கத்துக்குச் செல்

உட்கடல் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல் வலயங்களின் திட்ட வரைபடம்

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின்படி, உட்கடல் பகுதி (Internal waters) என்பது, ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் அடிகோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள நீர்ப்பரப்பு ஆகும். தீவுகள் இதில் சேராது[1]. ஆறுகள், கால்வாய் போன்ற நீர்வழிகளும் சிறிய விரிகுடா பகுதிக்குள் இருக்கும் நீர்ப்பரப்பும் உட்கடல் பகுதிக்குள் அடங்கும்.

ஒரு நாட்டிற்குள் இருக்கும் இறையாண்மை அதன் உட்கடல் பகுதிக்கும் பொருந்தும். ஒரு கடலோர நாடு, உட்கடல் பகுதி சார்ந்த சட்டம் இயற்ற, பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த, மற்றும் எந்த வளங்களையும் பயன்படுத்த அதற்கு அதிகாரம் உண்டு. நாடுகளுடன் ஒப்பந்தங்கள் இல்லையென்றால், வெளிநாட்டு கப்பல் உட்கடல் பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. குற்றமற்ற செல்வழிக்கும் கூட உரிமை இல்லாமல் இருப்பது தான் உட்கடல் பகுதி மற்றும் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்புக்கும் உள்ள வேறுபாடு ஆகும்[2]. தீவு நாடுகளில் கடைகோடித் தீவு வரை உள்ள தீவு நீர், உட்கடல் பகுதி நீராக கருதப்படுகிறது, ஆனால் இதில் குற்றமற்ற செல்வழிக்கு அனுமதி தர வேண்டும், எனினும் தீவு நாடு குறிப்பிட்ட கடல் பாதைகளை இந்த நீரில் நியமிக்கலாம்.

ஒரு வெளிநாட்டு கப்பல் உட்பகுதி நீருக்குள் நுழைய அனுமதிப் பெற்றிருந்தால், அது அந்நாட்டின் கடலோர சட்டத்திற்கு உட்பட்டது ஆகும். துறைமுகத்தில் நிகழ்த்தப்படும் குற்றம் மற்றும் அங்கே கப்பல் குழுவால் நிகழ்த்தப்படும் குற்றம் கடலோர நாட்டின் வரையறைக்குள் வருகின்றது. கடலோர நாடு கப்பலின் விவகாரங்களுக்குள் கப்பலின் தலைவரே உள்ளூர் அதிகாரிகளின் தலையீட்டை கோரினால், கடலோர நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அல்லது சுங்க விதியை செயல்படுத்த தலையிடலாம்.

பிணக்குகள்

[தொகு]

ஒரு நீர் வழியை ஒரு நாடு தன் உட்கடல் பகுதி என்று உரிமை கோரினால், மற்ற நாடுகளில் அது சர்ச்சையை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, கனடா வடமேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியை தனது உட்கடல் பகுதி என்று உரிமை கோரியதால், ஐக்கிய அமெரிக்காவில் பிணக்கை ஏற்படுத்தியது[3][4][5][6].

1994இல் உருவாக்கப்பட்ட கடல் சட்டத்தின் பன்னாட்டு தீர்ப்பாயத்திற்கு, பலநாடுகளுக்கு இடையில் நடைபெறும் கடல் சார்ந்த பிணக்குகளைத் தீர்க்கும் அதிகாரம் உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. UN Convention on the Law of the Sea, Part II, Article 8 Internal waters
  2. UN Convention on the Law of the Sea, Part II, Article 2
  3. "UNCLOS part IV, ARCHIPELAGIC STATES". Admiralty and Maritime Law Guide. 10 December 1982. பார்க்கப்பட்ட நாள் 2008-01-18.
  4. Nathan VanderKlippe (April 9, 2006). "Northwest Passage gets political name change". CanWest News Service இம் மூலத்தில் இருந்து April 2, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160402114448/http://www.canada.com/ottawacitizen/news/story.html?id=6d4815ac-4fdb-4cf3-a8a6-4225a8bd08df&k=73925. பார்த்த நாள்: 2008-01-18. 
  5. Rob Huebert (Winter 2001). Climate Change and Canadian Sovereignty in the Northwest Passage. ISUMA. பக். 86–94 இம் மூலத்தில் இருந்து 2002-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020131061534/http://www.isuma.net/v02n04/huebert/huebert_e.shtml. பார்த்த நாள்: 2008-01-13. 
  6. Alanna Mitchell (February 5, 2000). "The Northwest Passage Thawed". Globe and Mail. pp. A9 இம் மூலத்தில் இருந்து 2007-12-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071228222850/http://www.carc.org/whatsnew/writings/amitchell.html. பார்த்த நாள்: 2008-01-18. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்கடல்_பகுதி&oldid=3871277" இலிருந்து மீள்விக்கப்பட்டது