உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரான் – ஈராக் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரான்-ஈராக் போர்

ஈரானியப் போர்வீரன்
நாள் செப்டம்பர் 22, 1980ஆகஸ்ட் 20, 1988
இடம் பாரசிக வளைகுடா, ஈரான்-ஈராக் எல்லை
தோல்வியற்ற நிலை; சாதிக்கப்பட்ட ஈராக் தோல்வி; ஈரானின் செயல்முறைத் தோல்வி
நிலப்பகுதி
மாற்றங்கள்
status quo ante bellum
பிரிவினர்
 ஈரான்

குர்திஸ்தான் நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்பு

ஈராக் ஈராக்

அரபு லீக் அரபு நாடுகளின் படைகளும் தன்னார்வலர்களும்.[1]
தளபதிகள், தலைவர்கள்
ஈரான் Ruhollah Khomeini
ஈரான் Abolhassan Banisadr
ஈரான் Ali Khamenei
ஈரான் Akbar Hashemi Rafsanjani
ஈரான் Mostafa Chamran 
ஈராக் Saddam Hussein
ஈராக் Ali Hassan al-Majid
Massoud Rajavi
பலம்
600,000 soldiers,
100,000 to 150,000 Pasdaran and Basij, 100,000 militia,
1,000 tanks,
4,000 armored vehicles,
7,000 artillery pieces,
747 aircraft,
750 helicopters[2]
850,000 in 1980,
1,500,000 by 1988,
3,500 tanks,
8,630 armored vehicles,
12,330 artillery pieces,
3000+ aircraft,
1900+ helicopters[3]
இழப்புகள்
500,000-1,000,000 படையினர்/போராளிகள்/பொதுமக்கள் கொலை (அதிகாரபூர்வ மதிப்பீடு) பொருளாதார இழப்பு= US$500 பில்லியன்[4] 500,000-750,000 படையினர்/போராளிகள்/மக்கள் கொலை அல்லது காயம் பொருளாதார இழப்பு= US$500 பில்லியன்
ஈரான் – ஈராக் போர் - செப்டம்பர் 22, 1980 - தெகுரான்

ஈரான் – ஈராக் போர் ஈரானை ஈராக் செப்டம்பர் 1980 ல் ஆக்கிரமித்தபோது ஆரம்பமாகியது. இது ஆகஸ்ட் 1988 ல் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யுத்தம் 20ஆம் நூற்றாண்டின் மிக நீண்டதும் கடும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். இதன் போது சுமார் ஒரு மில்லியன் அளவான நபர்கள் காயமடைந்தோ கொல்லப்பட்டோ யுத்தத்தினால் பாதிக்கப்பட்டனர். இந்த போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் யுத்தத்திற்கான அடிப்படை காரணிகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

பின்னணி

[தொகு]

ஈரான்ஈராக் இடையிலான எல்லைக் கோடு பல நூற்றாண்டு காலமாகவே சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. 1534 ல் தற்போதைய ஈராக்கை ஒட்டமான் பேரரசு ஆக்கிரமித்த பின்பு சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பிராந்தியமாக ஈராக் மாறியது. இதன்போது ஈரான் இதன் போது கிழக்குப் பகுதியில் ஈராக்கின் எதிரியாக அமைந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் ஈராக் தனி சுதந்திர நாடு ஆகியது. இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை சம்பந்தமான இணக்கமின்மை ஏற்பட்டது. 1937 ல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சர்ச்சைக்குரிய ஷாட் அல் அரப் பிரதேசம் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

எல்லைத் தகராறுக்கு அப்பால் இரு நாடுகளும் தொடர்ந்தும் முறுகல் நிலையிலேயே இருந்தன. காரணம் ஈராக் அரேபியர்களை கொண்ட நாடாக இருக்கின்ற வேளையில் ஈரான் பாரசீகர்களைக் கொண்ட நாடாக இருந்தது. வடக்கே எல்லைப் புறத்தில் குர்து மக்கள் (இவர்கள் அரேபியரோ பாரசீகரோ அல்லர்) இன மக்கள் எல்லையின் இருபுறமும் இரு நாட்டினுள்ளும் வாழ்கின்றனர். அயோத்துல்லா றுகொல்லா கொமேனி போன் ஈரானில் இருந்து நாடுகடத்தப் பட்டவர்கள் ஈராக்கில் குடியேறியமையும் இந்த நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தயது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lesch, David W. (2001), 1979: The Year That Shaped the Modern Middle East, Westview Press, p. 85
  2. Country Study: Iran. Library of Congress. http://lcweb2.loc.gov/frd/cs/irtoc.html. 
  3. "Iran–Iraq War (1980–1988)". Globalsecurity.org.
  4. (امار شهداي جنگ) جامعه شناسي جنگ from Website of Prominent Iranian Journalist and Rights Activist, Emadeddin Baghi
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரான்_–_ஈராக்_போர்&oldid=3714897" இலிருந்து மீள்விக்கப்பட்டது