ஈரயோடோசில் சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அயோடோசில் சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
25041-70-7 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
(IO)2SO4 | |
வாய்ப்பாட்டு எடை | 381.87 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈரயோடோசில் சல்பேட்டு (Diiodosyl sulfate) என்பது (IO)2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடினும் கந்தக அமிலமும் சேர்ந்து இந்த கார உப்பு உருவாகிறது. மஞ்சள் நிறத்தில் படிகங்களாக ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது. [1]
தயாரிப்பு
[தொகு]அயோடிக் அமிலமும் கந்தக அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது:
- 2 HIO3 + H2SO4 → (IO)2SO4 + O2 + 2 H2O
கந்தக அமிலத்திலுள்ள அயோடின் கரைசல் வழியாக ஓசோனாக்கப்பட்ட ஆக்சிசனைச் சேர்த்தால் வினை நிகழ்ந்து ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது.
- I2 + 3 O3 + H2SO4 → (IO)2SO4 + 3 O2 + H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]ஈரயோடோசில் சல்பேட்டு மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. குளிர்ந்த நீரில் குறைவாகக் கரைகிறது.[2]
அடர் கந்தக அமிலத்தில் ஈரயோடோசில் சல்பேட்டு கரையும். பின்னர் இதை இக்கரைசலில் இருந்து மறுபடிகமாக்கலாம்.
வேதிப் பண்புகள்
[தொகு]வளிமண்டல ஈரப்பதத்தின் செல்வாக்கினால் ஈரயோடோசில் சல்பேட்டு நீராற்பகுப்புக்கு உட்பட்டு அயோடின், அயோடிக் அமிலம் மற்றும் கந்தக அமிலமாக சிதைகிறது.
ஈரயோடோசில் சல்பேட்டை சூடுபடுத்தினாலும் சிதைவடைகிறது:[3]
- 4(IO) 2 SO 4 → 2I2O5 + 2I2 + 4SO3 + O2
கந்தக(VI) ஆக்சைடுடன் ஈரயோடோசில் சல்பேட்டு வினையில் ஈடுபடுகிறது:[4]
- (IO)2SO4 + 2SO3 → I2(SO4)3
அடர் கந்தக அமிலத்துடன் சேர்ந்து ஓர் அமில உப்பை ஈரயோடோசில் சல்பேட்டு உருவாக்குகிறது:
- (IO)2SO4 + H2SO4 → 2 IOHSO4
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gillespie, R. J.; Senior, J. B. (July 5, 1964). "Cations and Oxy Cations of Iodine. II. Solutions of Iodosyl Sulfate, Iodine Dioxide, and Iodic Acid-Iodine Mixtures in Sulfuric Acid and Dilute Oleum". Inorganic Chemistry 3 (7): 972–977. doi:10.1021/ic50017a010. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50017a010.
- ↑ "Chemistry of inorganic sulfonates and sulfates of polyvalent iodine". Russian Chemical Reviews 66. 1997. https://www.russchemrev.org/RCR282pdf.
- ↑ Dasent, W. E.; Waddington, T. C. (January 1, 1960). "670. Iodine oxygen compounds. Part II. Iodosyl and related compounds". Journal of the Chemical Society (Resumed): 3350–3356. doi:10.1039/JR9600003350. https://pubs.rsc.org/en/content/articlelanding/1960/jr/jr9600003350.
- ↑ Argument, Cyril (1944). "The iodous sulphates". Durham theses (Durham University): p. 22. https://etheses.dur.ac.uk/9113/.