இரட்டடுக்குச் சிப்பாய்
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்க விளையாட்டில் இரட்டடுக்குச் சிப்பாய் (doubled pawns) அமைப்பு என்பது ஒரே நிறத்திலுள்ள இரண்டு சிப்பாய்கள் முன்னும் பின்னுமாக ஒரே வரிசையில் நிற்பதைக் குறிக்கும். சகோதர சிப்பாயின் வரிசையில் பிரவேசித்த எதிரியின் காயைக் கைப்பற்றும் நிலை ஏற்படும்போது மட்டுந்தான் இரட்டடுக்குச் சிப்பாய் அமைப்பு உண்டாகிறது. அருகிலுள்ள படத்தில் b வரிசையிலும் e வரிசையிலும் உள்ள சிப்பாய்கள் இரட்டடுக்குச் சிப்பாய்களாகும். e-வரிசையில் உள்ள சிப்பாய்கள் இரட்டடுக்கில் நிற்பது மட்டுமின்றி தனித்தும் விடப்பட்டுள்ளன..
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரட்டடுக்குச் சிப்பாய்கள் பலவீனமானவை என்றே கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகளால் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடிவதில்லை. உண்மையில் இத்தகைய இரட்டடுக்கு சிப்பாய் அமைப்பு விளையாடும் ஒரு ஆட்டக்காரரின் ஆட்டத்தில் ஏற்பட்டால் அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார். இரட்டடுக்கை கலைத்து தன்னுடைய சிப்பாயை எட்டாவது வரிசைக்கு முன்னேற்றிச் செல்வது மிகவும் கடினமானதொரு செயலாக அவருக்கு மாறிவிடும். குறிப்பாக இறுதி ஆட்டத்தில், ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்துவிடக்கூடிய காரணியாகவும் இவ்வமைப்பு விளங்குகிறது. எதிர் ஆட்டக்காரரின் பகுதியில் இரட்டடுக்குச் சிப்பாய் அமைப்பை ஏற்படுத்தி அவ்வீரருக்கு தலைவலியை உண்டாக்கும் தந்திரத்தை சதுரங்கத் தந்திரங்களும் திறப்புக் கோட்பாடுகளும் முன்மொழிகின்றன.
தனிமைப்படுத்தப்பட்டும் இரட்டடுக்காவும் தோன்றிவிடும் சிப்பாய்களால் ஆட்டக்காரர்களுக்கு ஏற்படுவது கடுந்தலைவலிதான் என்பதில் சந்தேகமில்லை. இத்தலைவலித் தந்திரத்தை உண்டாக்கி எதிரி ஆட்டக்காரருக்கு இம்சை அளிப்பதை ஒரு சூழ்ச்சியாக சதுரங்கத் தந்திரங்களும் திறப்புக் கோட்பாடுகளும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.
எனினும், சில ஆட்டங்களில் இந்த இரட்டடுக்குச் சிப்பாய் அமைப்புப் பாதகத்தை விருப்பமுடன் வரவேற்று அதையே தன்னுடைய கோட்டைக்கு வழியுண்டாக்கும் சாதகமாகவும் மாற்றிக்கொண்டு விளையாடி, இரட்டடுக்குச் சிப்பாய்களின் தோற்றம் நன்மைக்கே என்று கருதும் சந்தர்ப்பங்களும் நிகழ்கின்றன. இதைப்போலவே எதிரியால் தாக்க முடியாதவாறு சில முக்கியமான சதுரங்களையும் நம்முடைய இரட்டடுக்குச் சிப்பாய்கள் பாதுகாத்து துன்பத்திலும் இன்பம் சேர்த்துவிடும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இந்த உள்ளார்ந்த குறைபாடு, இதுபோன்ற காரணங்களால் சில சந்தர்பங்களில் சிறிய இடராகவும் சிலவேளைகளில் இடரே அல்லாமலும் கூட போய்விடுவதுண்டு. இரட்டடுக்குச் சிப்பாய்களைச் சிற்சில காரணங்களுக்காக விரும்பி வரவேற்று முன்னேறும் திறப்பு ஆட்டங்கள் பல நடைமுறையில் விளையாடப்படுகின்றன. அலெக்கின் தடுப்பாட்டத்தில் இரண்டு குதிரை வேறுபாட்டு முறை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும
மூன்றடுக்கு மற்றும் நான்கடுக்குச் சிப்பாய்கள்
[தொகு]
மூன்றடுக்குச் சிப்பாய்கள் காவலெக்– பாபிபிசர், சர்வதேச ஆட்டம் 1967
|
நான்கடுக்குச் சிப்பாய்கள் கோவாக்சு – பார்த்து இடையிலான ஆட்டம் 1994
|
ஆட்டப்போக்கில் நிச்சயமாக மூன்றடுக்கு, நான்கடுக்கு, அதற்கு மேலுமாக சிப்பாய்கள் ஒரேவரிசையில் அடுக்கி நிற்கும் அமைப்பு தோன்றிவிடுவதற்கும் வாய்ப்புகள் உண்டாகின்றன. படத்தில் உள்ளது 1967 ஆம் ஆண்டு உலோபிமிர் காவலெக் - மாபி பிசர் இடையில் நடைபெற்ற ஒரு சர்வதேசப் போட்டியில் ஏற்பட்ட மூன்றடுக்கு சிப்பாய் அமைப்பாகும். இவ்வாட்டத்தில் இறுதி வரையிலும் மூன்றடுக்குச் சிப்பாய்கள் வரிசை அப்படியே மாறாமலிருந்து 28 நகர்த்தல்களுக்குப்பின் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
அலெக்சாண்டர் அலெக்கின் - விளாதிமிர் நெனாரோக்கோவ் இடையில் 1907 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டம், 1981 ஆம் ஆண்டில் சான் வாண்டர் வைல் - விளாசுடிமில் ஓர்டு இடையிலான் ஆட்டம் மற்றும் சில ஆட்டங்களில் நான்கடுக்குச் சிப்பாய்கள் அமைப்பும் தோன்றியுள்ளது. நீண்ட நான்கடுக்குச் சிப்பாய்கள் கொண்ட ஆட்டமாகக் கருதப்படுவது கோவாக்சு மற்றும் பார்த்து இவர்களுக்கிடையில் நடைபெற்ற ஆட்டமாகும். நான்கடுக்குச் சிப்பாய்கள் 23 நகர்வுகள் வரை நீடித்த இந்த ஆட்டம் இறுதியில் சமநிலையில் முடிந்தது.[1] அதேநேரத்தில் இவ்வாட்டம் ஒரே வரிசையில் கூடுதல் சிப்பாய் நிற்பதனால் உண்டாகும் பலவீனத்தையும் விளக்கியது. (படத்திலுள்ள ஆட்டம்)
இரட்டடுக்குச் சிப்பாய் வகைகள்
[தொகு]
இரட்டடுக்குச் சிப்பாய்கள் பல்வேறு வகைகளாக உள்ளன. (பார்க்க அருகிலுள்ள படம்). முக்கியமான நான்கு காரணங்களுக்காக இரட்டடுக்குச் சிப்பாய்கள் பலவீனமாகக் கருதப்படுகின்றன.
- நகரும் ஆற்றலில் பின்னடைவு உண்டாகிறது.
- இயல்பான சிப்பாயாக செயல்பட இயலுவதில்லை.
- சிப்பாய்க்குச் சிப்பாய் பரிமாற்றம் நிகழும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
- பலவீனமான முதல் சிப்பாய் தாக்கப்படும்போது பின்னால் நிற்கும் யானை உதவிக்கரம் நீட்டமுடியாத நிலை உண்டாகிறது.
b-வரிசையில் உள்ள இரட்டடுக்குச் சிப்பாய்களும் f-வரிசையில் உள்ள இரட்டடுக்குச் சிப்பாய்களும் நல்லதொரு சூழலில் காணப்படுகின்றன. h-வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாய் நிற்கும் சிப்பாய்கள் எதிரியின் ஒரு சிப்பாயால் தடுக்கப்பட்டு நகரமுடியாமல் செயலிழந்து நிற்கின்றன. இவற்றில் இரண்டாவதாக நிற்கும் சிப்பாய்க்காவது சிறிது மதிப்பு இருப்பதாக கருதப்படுகிறது (பெர்லினர் 1999 : 18 – 20)
இவற்றையும் காண்க
[தொகு]- எதிரியில்லாச் சிப்பாய்
- சிப்பாய் கட்டமைப்பு
- தனித்திருக்கும் சிப்பாய்
- பின்தங்கிய சிப்பாய்
- இணைந்திருக்கும் சிப்பாய்கள்
அடிக்குறிப்புகள் மற்றும் உசாத்துணைகள்
[தொகு]- Berliner, Hans (1999), The System: A World Champion's Approach to Chess, Gambit Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-901983-10-2
- Hooper, David; Whyld, Kenneth (1992), The Oxford Companion to Chess (2nd ed.), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866164-9