குப்பைத் தொட்டி
Appearance
குப்பைத் தொட்டி குப்பைகளை தற்காலிகமாக இட்டு வைக்கும் தொட்டி ஆகும்.
குப்பைகளை அங்கும் இங்கும் போடாமல் குப்பைத் தொட்டியில் போடுவது ஒரு நற்பழக்கம் ஆகும். இது குப்பைகளை சுத்தம் செய்வதை இலகுவாக்குகிறது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருகிறது. நோக்கிருமிகள் பரவுவதை தடுக்கிறது.
தற்காலத்தில் நகரங்களில் குப்பைகளை பல்வேறு வகைகளாக பிரித்துப் போடுவதும் வழக்கம். பொதுவாக கரிம அல்லத்து உயிரி கழிவுகள் (மரக்கறித் தோல், இறைச்சியின் எலும்புகள் போன்ற) ஒரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. மறுபயனீடு செய்ய கூடிய செய்தித் தாள்கள், உலோகங்கள் வேறு ஒரு வகையாக] பிரிக்கப்படுகின்றன. இலகுவாக மக்காத பொருட்கள் ஒரு வகையாக பிரிக்கப்படுகின்றன. இவை தவிர வேறு பிரிவுகளும் உண்டு.