உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை சீர் நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:31, 8 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இலங்கை சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்

இலங்கை சீர் நேரம் (Sri Lanka Standard Time, SLST, இலங்கை நியம நேரம்) என்பது இலங்கையின் நேர வலயம் ஆகும். இது கிரீன்விச் இடைநிலை நேரம் அல்லது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்த்தில் இருந்து 5 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள் முன்னோக்கியதாகும். (ஒ.ச.நே + 05:30).[1] இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை.

1880 ஆம் ஆண்டு முதல் இலங்கை சீர் நேரம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டது.[2] 1880 இல் இலங்கை சீர் நேரம் ஒசநே+5:30 ஆகவும், 1942 சனவரி மாதம் இரண்டாம் உலகப் போரின் போது யப்பான் இலங்கையை ஆக்கிரமிக்க அண்மித்திருந்த போது இலங்கை சீர் நேரம் ஒசநே+6:00 ஆகவும் 1942 செப்டம்பர் மாதம் UTC+6:30 ஆகவும் மாற்றப்பட்டது. போருக்குக் பின்னதாக 1945ஆம் ஆண்டு அது மீண்டும் ஒசநே+05:30க்கு மாற்றியமைக்கப்பட்டது.[2]

1996 இல் இலங்கையில் அப்போது காணப்பட்ட மின்வழுப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் 1996 மே 24 நள்ளிரவில் நேரம் ஒசநே+6:30க்கு மாற்றப்பட்டது.[3] 1996 ஆக்டோபர் மாதம் நேரம் ஒசநே+6:00க்கு மாற்றப்பட்டது.[2] ஆனாலும், இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஒசநே+05.30 நேரவலயமே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.[2]

இலங்கை நேரப்படி 2006 ஏப்ரல் 15 ஆம் நாள் 00:00 மணியானபோது அது இந்திய சீர் நேரத்துடன் ஒன்றுமாறு ஒசநே+05.30 ஆக மாற்றியமைக்கப்பட்டது.[2][4]

இலங்கையில் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் அதன் பின்னர் அம்முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

இவற்றையும் பார்க்க

[தொகு]

இந்திய சீர் நேரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Lanka Time". GreenwichMeanTime.com. Archived from the original on 2010-02-24. பார்க்கப்பட்ட நாள் 2010-03-02.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Time to end Sri Lanka time split?". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016.
  3. "Principal Sri Lanka Events". Ferguson's Ceylon Directory, Colombo. 1997. 
  4. "Clarke in protest at Sri Lanka time zone switch". டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 2014-10-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_சீர்_நேரம்&oldid=3672439" இலிருந்து மீள்விக்கப்பட்டது