1930
1930 (MCMXXX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1930 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1930 MCMXXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1961 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2683 |
அர்மீனிய நாட்காட்டி | 1379 ԹՎ ՌՅՀԹ |
சீன நாட்காட்டி | 4626-4627 |
எபிரேய நாட்காட்டி | 5689-5690 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1985-1986 1852-1853 5031-5032 |
இரானிய நாட்காட்டி | 1308-1309 |
இசுலாமிய நாட்காட்டி | 1348 – 1349 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 5 (昭和5年) |
வட கொரிய நாட்காட்டி | 19 |
ரூனிக் நாட்காட்டி | 2180 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4263 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 26 - இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ம் நாளை விடுதலை நாளாக (பூரண சுயராஜ்யம்) அறிவித்தது.
- பெப்ரவரி 18 - கிளைட் டொம்பா (Clyde Tombaugh) புளூட்டோவைக் கண்டறிந்தார்.
- மார்ச் 12 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார்.
- மார்ச் 28 - கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
- ஏப்ரல் 18 - பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது.
- மே 4/மே 5 - மகாத்மா காந்தி மீண்டும் கைதானார்.
- மே 6 - இரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 19 - தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினப் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.[1]
- ஜூலை 13 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
- ஜூலை 30 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் உருகுவே ஆர்ஜெண்டீனாவை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- ஆகத்து 6 - வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.
- ஆகஸ்ட் 27 - பெருவில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
- டிசம்பர் - துருக்கியில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
- டிசம்பர் 28 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
நாள் அறியப்படாதவை
தொகு- நியூத்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.
- அப்காசியா, ஜோர்ஜியா ஆகியன இணைந்தன.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 3 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் (இ. 2012)
- ஏப்ரல் 13 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடலாசிரியர் (இ. 1959)
- சூன் 8 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (இ. 1999)
- சூலை 6 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் (இ. 2016)
- சூலை 9 – கே. பாலச்சந்தர், திரைப்பட இயக்குனர் (இ. 2014)
- ஆகத்து 2 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (இ. 2014)
- ஆகஸ்ட் 5 – நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர்
- அக்டோபர் 6 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், வர்ணனையாளர் (இ. 2015)
- அக்டோபர் 10 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (இ. 2008)
- நவம்பர் 17 – பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)
இறப்புகள்
தொகு- ஜூலை 7 - ஆர்தர் கொனன் டொயில், எழுத்தாளர் (பி. 1859)
- நவம்பர் 26 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1851)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - சி. வி. இராமன்
- வேதியியல் - ஹான்ஸ் ஃபிஷர்
- மருத்துவம் - கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்
- இலக்கியம் - சிங்கிளையர் லூயிஸ்
- அமைதி - Archbishop Lars Olof Nathan Söderblom