சூன் 27
நாள்
(ஜூன் 27 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 27 (June 27) கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1743 – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார்.
- 1759 – கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
- 1760 – செரோக்கீ போராளிகள் பிரித்தானியப் படைகளை எக்கோயீ போரில் (வட கரொலைனாவில்) வென்றனர்.
- 1806 – பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர்.
- 1806 – டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.[1]
- 1844 – பின்னாள் புனிதர்களின் கிறிஸ்து சபையை நிறுவிய இரண்டாம் யோசப்பு இசுமித்தும் அவரது சகோதரரும் இலினொய், கார்த்தேசு சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1898 – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை நோவா ஸ்கோசியாவைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
- 1905 – உருசிய-சப்பானியப் போரின் போது, பொத்தெம்கின் என்ற உருசியப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் பியாலிசுத்தோக் நகரை பர்பரோசா நடவடிக்கையின் போது கைப்பற்றின.
- 1941 – உருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1950 – கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.
- 1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
- 1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
- 1957 – டெக்சஸ்–லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1973 – உருகுவை அரசுத்தலைவர் உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.
- 1974 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.
- 1976 – ஏர் பிரான்சு 139 (டெல் அவீவ்-ஏதென்ஸ்-பாரிசு) பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
- 1977 – சீபூத்தீ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- 1980 – பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.
- 1981 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது "மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை" வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மா சே துங் மீது குற்றஞ்சாட்டியது.
- 1982 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
- 1988 – பாரிசு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
- 1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
- 1994 – சப்பானில் ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 660 பேர் காயமடைந்தனர்.
- 1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
- 2007 – 1997 முதல் பதவியில் இருந்த பிரித்தானியத் தலைமை அமைச்சர் டோனி பிளேர் பதவி துறந்தார்.
- 2013 – சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
- 2014 – ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1789 – டானியல் புவர், இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. 1855)
- 1838 – பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1894)
- 1869 – எம்மா கோல்ட்மன், லித்துவேனிய-கனடிய மெய்யியலாளர், செயர்பாட்டாளர் (இ. 1940)
- 1872 – ஏபர் தவுசுட் கர்டிசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1942)
- 1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்க எழுத்தாளர், செயர்பாட்டாளர் (இ. 1968)
- 1899 – சி. கணபதிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1986)
- 1912 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016)
- 1922 – அகிலன், தமிழக எழுத்தாளர் (இ. 1988)
- 1927 – டொமினிக் ஜீவா, ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2021)
- 1939 – ராகுல் தேவ் பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1994)
- 1943 – உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் இசைக் கலைஞர் (இ. 2015)
- 1958 – மரியா சூபர், அமெரிக்க வானியலாளர்
- 1962 – சுனந்தா புஷ்கர், இந்திய-கனடிய தொழிலதிபர் (இ. 2014)
- 1963 – சுசில் குமார் சிங், இந்திய அரசியல்வாதி
- 1964 – பி. டி. உஷா, கேரள தடகள விளையாட்டாளர்
- 1975 – தோபி மக்குயர், அமெரிக்க நடிகர்
- 1992 – கார்த்திகா நாயர், இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1839 – ரஞ்சித் சிங், சீக்கிய பேரரசை நிறுவியவர் (பி. 1780)
- 1844 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறிஸ்து சபையை நிறுவிய அமெரிக்கர் (பி. 1805)
- 1952 – சி. ஆர். சுப்பராமன், தென்னிந்திய இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1924)
- 1987 – எம். பி. நாச்சிமுத்து சென்னிமலை, கைத்தறி நெசவுத் துறையில் சமூக சேவகர் (பி. 1913)
- 1988 – ஆர். முத்துசாமி, ஈழத்து இசையமைப்பாளர், பாடகர் (பி. 1926)
- 1998 – நிகில் சக்கரவர்த்தி, இந்திய இதழிகையாளர் (பி. 1913)
- 2006 – கா. செ. நடராசா, ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1930)
- 2007 – டி. எம். தியாகராஜன், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)
- 2008 – சாம் மானேக்சா, இந்திய இராணுவத் தளபதி (பி. 1914)
- 2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)
- 2016 – ஆல்வின் டாப்லர், அமெரிக்க சமூக அறிவியலாளர், நூலாசிரியர், எழுத்தாளர் (பி. 1928)
- 2019 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (பி. 1944)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.