ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக் கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக்கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா. நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத்தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம். தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக் கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும் போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக் கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் ‘தண்ணீர்’ நாவலின் முதன்மைச் சரடு. ‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு. -என். கல்யாணராமன்
In this novel, the water scarcity of Chennai city is vividly portrayed while narrating the story of two sisters, Jamuna and Chaya, who are destined to live a lonely life.
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
Ashokamitran's Thanneer is that book which deeply reflects the happenings in a life of the 70s-80s water starved Chennai. Centered around Jamuna and her sister Chaya with support from a strong Teacheramma character, the book interlaces the water struggle with the personal life struggle of the women.
The human emotions of despair, anger and resilience in day to day life comes to the fore in this narrative. A simple narrative of a negotiating with the pwd worker on the bribe for doing his work is placed on the same pedestal as one of the characters contemplating suicide. In a sense the book removes the dramatism of characters and all judgments.
In a defining exchange between Teacheramma and Jamuna, they talk about the problems women have to contend with and how it was pointless to accept defeat. It has a silent seething tone and the book still never feels beyond hope. And it does not mind crashing the hopes every 2 pages - like when suddenly uninterrupted water comes in the pipe only to realize it is linked to the drainage water.
It is filled with the dryness and it makes it seem attractive. A great accomplishment.
A slim novella that manages to convey a wealth of emotions and circumstances surrounding the lives of Jamuna and her sister Chaya. Set in Madras in the late 60s during a drought, the novel depicts in its few pages the hardship of day-to-day living. It is unexpectedly feminist in its frank depiction of the kind of stigma and abuse women endured for having the audacity to exist as a person instead fulfilling the only two prescribed roles of wife and mother.
“எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் சில அந்தரங்கங்கள் ஒருவருக்கொருவர் தெரியாத வரையில்தான் சகித்து கொள்ள முடிகிறது”
சென்னையில் ஒரு BPO-வில் வேலை செய்து கொண்டிருந்த போது நண்பர்களுடன் குரோம்பேட்டை MIT கல்லூரி அருகிலிருந்த மாடியில் அறையெடுத்து தங்கியிருந்த காலம். ஒரு நாள் நைட் ஷிப்ட் முடித்துவிட்டு அசந்து தூங்கி கொண்டிருந்தேன், திடீரென்று கீழே ஒரு பெருங்கூச்சல் கேட்டு கண் விழித்தேன், ஹவுஸ் ஓனர் ஒரு வயதான பெண்மணி, கொஞ்சம் சொர்ணாக்கா ரேஞ்சுக்கு இருப்பாங்க, விடுமுறை நாட்களில் அவங்க பேரப்பிள்ளைகள் கேம் விளையாடுவதற்கு என் லேப்டாப்பை பயன்படுத்தும் காரணத்தால் என்னிடம் கொஞ்சம் கனிவா பேசுவாங்க. ஆனா அன்னைக்கு சத்தம் கொஞ்சம் அதிகமா வரவே என்னாடானு மாடியிலயிருந்து எட்டி பார்த்தால் ரூம்மெட்டுடன் பாட்டிம்மா சண்ட போட்டுனுயிருக்காங்க, அதாவது என் நண்பன் திட்டுவாங்கினுயிருக்கான். என்னடா போச்சா திரும்பவும் ரூம் மாத்தனும்மானு நெனச்சுனே கீழ போனா, வா தம்பி நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வீடு கட்டி வாடகைக்கு உட்டு பொழச்சினு இருக்குறேன் எல்லாத்தையும் கெடுத்துடுவான் போலயிருக்கு இந்த பையன், இல்ல பாட்டி ரொம்ப நல்ல பையன் தான் தெரியாம இப்படி பண்ணிட்டான் இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறோம்னு சொல்லி சமாதனப்படுத்தி அவனை அழைத்து வந்துவிட்டேன். மாடிப்படியில் ஏறும்போது ஏன்டா கெழவி திட்டுச்சினு கேட்டதுக்கு... தண்ணிக்கு ஊரே கஷ்டபடுது, டாய்லெட்ல ஏன் அவ்ளோ தண்ணீ ஊத்துற, மாடியில ஊத்துற தண்ணீ சத்தம் இங்க வரை கேக்குதுனு திட்டுதுடா அதுனு சொன்னான், சரி மச்சான் சத்தம் வரமாரி நீயேன்டா தண்ணீ ஊத்துறனு அவன கூல் பண்ண வேண்டியதா போச்சு (House owner is always correct)... இந்த நாவலை படிக்கும்போது தண்ணீருக்காக கஷ்டப்பட்ட அந்த நாட்கள் ஞாயபகம் வந்தது...தண்ணீர் தான் நாவலின் அடிப்படை, தண்ணீர் பிரச்சனை என்பதை தாண்டி மூன்று பெண்களின் வாழ்க்கை இன்னல்களை இக்கதையில் பதிவு செய்கிறார், ஜமுனா-நடிகையாக முயற்சி செய்பவள், சாயா-கணவன் ராணுவத்தில் இருக்கிறான் working woman ஆக அக்கா ஜமுனாவுடன் இருக்கிறாள். இவர்கள் இருவர் தான் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார்கள் இதனிடையே டீச்சரம்மா கதாபாத்திரம் ஒருவர் வருகிறார் அவர் வரும் பகுதியில் வாழ்க்கையின் பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் விதம் நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறது...சென்னையின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லாதது போல் இவர்கள் வாழ்க்கைக்கும் பெரிய தீர்வு இருப்பதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் பிரச்சனைகளை அழுகையுடன் எதிர்கொள்ளும் ஜமுனா எப்படி அதை எளிதாக அனுகு ஆரம்பிக்கிறாள் என்பதுடன் முடிகிறது நாவல். அவசியம் படிக்க வேண்டிய நாவல்🙏🙏🙏
Such a great story 👏 author choice for the community weighted the story to high level. I just travelled to the whole life of teacher amma, Jamuna and Chayaa. The boldness of these characters made me stunned. I can relate the dialogue of Teacher amma about the life of women. How true it is.... Thanneer - made a thirsty for me to read more books of Ashokamithran
எழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்பு வரிசையில் நான் படித்த முதல் புத்தகம் "தண்ணீர்".
அவரது கதைச் சூழலும், கதைமாந்தர்களும் மிகச் சாதாரணமானவர்கள்.
இப்புத்தகத்தில் மக்களின் அன்றாடப் பொழுதுகளின் கூட்ட நெரிசலில், வியர்வையில், ஆடம்பரத்திற்க்கு இடம் இல்லாமல், சின்னச் சின்ன கனவுகளுடனும், ஆசைகளுடனும் தினந்தினம் ஓடி வாழ்க்கையை சலித்துக் கொள்ள எத்தனையோ காரணங்கள் இருந்தும், இறுகப் பற்றிக் கொள்ள ஏதுமின்றி, ஏச்சுப் பேச்சுக்களுக்கும், ஏமாற்றப்படுதலுக்கும், ஏக்கங்களுக்கும் மட்டுமே முழுவதுமாய் ஆளாகி இது எல்லாவற்றிக்கும் மேலாக இவர்களின் தினசரி வாழ்க்கையை திக்குமுக்காட வைக்கும் தண்ணீர் பஞ்சத்திற்க்கு நடுவே வாழும் மூன்று நடுத்தர வயது பெண்களின் கதை இது.
இதிகாசம் தொடங்கி கவிதை, பாடல், நீர்நிலைகள் என பெண்ணையும்-நீரையும் ஒப்பிடுவதாலோ என்னமோ தண்ணீர் என்ற தலைப்புக் கொண்ட இக்கதையும் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமூகத்தையும், பெண்ணையும்-நீரையும் பற்றி பேசுகிறது.
கழுத்தை நெறிக்கும் குடும்ப சூழ்நிலை, காப்பாற்ற யாருமே இல்லை, வரப்போவதும் இல்லை என தெரிந்தும் தினந்தினம் இதே போராட்டம் தான் எனத் தன்னையே சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு வாழும் டீச்சரம்மாவாகவும், நான் நினைக்கும் நல்ல வாழ்க்கை நிச்சயம் ஒரு நாள் வரும் என ஓடிக்கொண்டிருக்கும் சாயாவாகவும், நம்பி ஏமாற்றப்படுதலுக்கு ஆளான ஜமுனாவாகவும்.., எல்லோரும் ஒவ்வொரு நாளும் நீரைத் தேடிக் கொண்டும், பின்னால் ஓடிக் கொண்டும், இன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
The author wonderfully juxtaposes the water crisis that crippled Madras with the stories of Jamuna, Chaya and Teacheramma, three women who strive to overcome the injustice of their lives by being there for each other. Ashokamitran's pithy style does not waste time on backstories and explains entire lives in a single page. By the end of the novel, the water crisis is not over, even street lights are not working, drainage water has mixed with drinking water, Jamuna is pregnant, her lover is still trying to exploit her sexually, Chaya's husband is not coming back any time soon, their mother has gone senile, Teacheramma is suffering her sick husband - Despite such negativity all around, the novel somehow instils hope in us and that is the hallmark of great literature.
நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை - நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் - ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை - பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.
அன்றைய சென்னை மாநகரின் தண்ணீர்ப்பற்றாக்குறையுடன் பெண்களின் துயரங்களையும்,அவலங்களையும் தண்ணீரைக் குறியீடாகக் கொண்டு எழுதிய விதத்தில் அசோகமித்திரன் தனித்து நிற்கிறார்.அசோகமித்திரனை வாசிக்க விரும்புபவர்களுக்கு இக்குறுநாவல் சிறந்த அறிமுகமாக இருக்கும்.
வழக்கம்போல் அசோகமித்திரன் தன் எளிமையான எழுத்து நடையில் 80களில் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டையும், அதனூடாக மூன்று பெண்களின் (சினிமா ஆசையில் சீரழிந்த ஜமுனா, கணவன், குழந்தையை பிரிந்து வாழும் சாயா, நோயாளி கணவன் மற்றும் கொடுமையான மாமியாருடன் அல்லல்படும் டீச்சரம்மா) அவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் பதிவு செய்திருப்பதோடு, பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடியதாக இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது.
அற்புதமான கதை. ஆசிரியரின் கரைந்த நிழலில் வரும் ஒரு பாத்திரம் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மிக மிக கச்சிதமான கதை.
நடுத்தர வர்க்க மனிதர்களில் அதுவும் பிராமண குடும்பத்தில் உள்ள மனிதர்கள் அனைத்திலும் ஒரு சமத்காரத்துடன் இருப்பதை பார்த்ததுண்டு ஆனால் கதையில், பயன்படுத்தும் வார்த்தைகளில், விவரணைகளில் அப்படி ஒரு சமத்காரம் இந்த கதையில் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. அந்த கடைசி சில அத்தியாங்களில் வரும் சித்தரிப்புகள் அவ்வளுவு அருமை... தண்ணீரே இல்லாமல் இருந்து தண்ணீர் வர ஆரம்பிப்பதும் அதை ஆர்வத்துடன் அந்த மனிதன் அடித்து தள்ளுவதும், கதையின் மிக முக்கியமான எதிர் கதாபத்திரம் வருவதும், மிக முக்கியமாக கதையின் மைய கதாப்பாத்திரம் பார்த்து சிரித்துக்கொண்டு இருப்பது, கதையின் ஓட்டத்தை வாசகனுக்கு கடத்தி விடுகிறது எனலாம்.
வாழ்வின் மத்தியகால வாழ்வென்பது அனைத்து நம்பிக்கைகளும் கலைந்து, மீண்டும் நம்மை அடுக்கி மீண்டும் கோத்துக்கொண்டு ஆரம்பிக்கவேண்டிய பருவம். கதையின் மையப்பாத்திரங்களின் சற்று விரைவாக இந்த நிலைக்கு வந்துவிடுகிறது.
துணை என்பது எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் வாழ்வின் பிடிப்பிற்கு ஒரு துணை வேண்டும். அது மிக அந்தரங்கமாக ஒன்றைப்பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல அது தன் இருப்பை உறுதிசெய்வதற்கும் தேவையாக இருக்கிறது.
இந்த கதையில் வரும் ஜமுனாவும் சாயாவும் வேறு வேறு கிடையாது இருவரும் ஒன்றே என்று எனக்குப்படுகிறது. ஜமுனாவின் நிழல்தான் சாயா, சாயாவின் நிஜம்தான் ஜமுனா என்று படுகிறது. ஜமுனாவின் விசயம் தெரிந்தும் அதிலுள்ள ஒவ்வாமை தெரிந்தும் அதை உள்ளூர நினை��்கிறாள். ஜமுனாவின் கனவுகள் அவள் கண்ணெதிரே தகர்வதையும் ரசிப்பதுப்போலே எனக்கு பட்டது. மீண்டும் மீண்டும் கதையில் வரும் பலபடிமங்கள் இதை நிலை நிறுத்துகின்றன.
கதையின் பலம் அந்த சூழல்தான் சென்னை மத்திய குடும்பத்தில் தினம் தினம் நடந்த நடக்கும் சூழல்தான் என்றாலும் அந்த சூழலே ஒரு படிமாக இருப்பது மிகப்பெரும் முயற்சி அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்.
வெறும் தண்ணீதானேதான் சார் என்று ஒரு திரைப்படத்தில் வரும் ஆனால் பலருக்கு அது வெறும் தண்ணீர்தான் ஆனால் இன்னும் ஜமுனாக்களும், சாயாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா...
I'm sure this book is will be there in my heart and memory for a long time. One of the most extraordinary writings I have ever read. The touch of water crisis in the story line is hitting hard at every point. The portrayal of middle class life was on point. My most favourite thing about this book is the subtle feminism in this book. Especially chapter 18 the conversation between that teacher and Jamuna, that made me to think so much about life and people. This book is a GEM. I will definitely recommend this book to everyone I love.
இலக்கியம் என்பது நிஜ வாழ்க்கையைச் சார்ந்து, அதையே பிரதிபலிக்கும் ஒரு கலை. இந்த நாவலில் அந்தப் பிரதிபலிப்பு மிகவும் இயல்பாக அமைந்திருப்பது சிறப்பு எனலாம். நம் காலகட்டத்தில் இருக்கும் சமூகத்தை யதார்த்தமாய்ப் பதித்திருப்பதும் இன்னொரு சிறப்பு எனலாம்.
தண்ணீர் ❤️ • வெகுநாட்களாக என் புத்தக அடுக்கில் மற்றைய புத்தகங்களை நனைக்காமல் இருந்த இந்த நல்ல தண்ணீரை ஒரு மாதிரி பருகிவிட்டேன். அசோகமித்திரன் என்றோ வார்த்து வைத்தது இன்று தாகம் தீர்த்துவிட்டது, இருந்தென்ன அவர் எழுத்தின்மேல் புதுப் பசியையே கிளப்பியிருக்கிறது. பசித்திருப்போம். • அன்றாட வாழ்வில் தண்ணீருக்காய் தவித்துத்திரியும் ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், ஒரு சொட்டு தண்ணீருக்கான அவர்களின் ஏக்கங்களையும், இன்னல்களையும் பின்புலமாக கொண்டு அதற்கு மத்தியிலும் வேறு பல பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் ஒரு பெண்ணின் கதைதான் இது. • ஆரம்பத்தில் கஷ்டங்களை கண்டு துவண்டுபோகும் அவள், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதான தன் பார்வையை மாற்றுகிறாள். அத்தருணத்தில் மழை மண் தொடுகிறது. அவளின் மனப்போக்கை மாற்றும் கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கம் கனமானது. அவளின் தங்கை, அவர்களின் சகோதர பாசம், ஒருவர் கஷ்டத்தில் ஒருவர் துணை என தண்ணீரைப்போலவே மனித நேயமும் காய்ந்துவிட்ட ஒரு சமூகத்தின் மத்தியில் நாளையை மறந்து இன்றை அனுபவிக்க துடிக்கும் இவர்களின் மாற்றத்தோடு கதை முடிவடை��ிறது. • படித்துமுடித்ததும் தாமாகவே வந்தமர்ந்தன கண்ணதாசனின் ஆழமான வரிகள் “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.” “நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
1970 களில் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடும் அதை ஒட்டிய மக்களின் வாழ்க்கையும் பற்றிய ஒரு சுருக்கமான கதை வாசிப்பாக அமைந்தது. ஒண்டி குடித்தனத்தில் இருக்கும் குடும்பங்களை தண்ணீர் எப்படி படுத்துகிறது என்பதையும், இந்த தண்ணீர் குடும்பங்களில் இருப்பவர்களின் உறவுகளை எப்படி பாதிக்கிறது என்பதையும் சுருக்கமாக பதிவு செய்யும் புத்தகம்.
அவர்கள் வாழ்வில் நிகழும் போராட்டம், வலி, வேதனைகள், நம்பிக்கை என பல்வேறு உணர்ச்சிகளை அசோகமித்திரன் அவருக்கே உரிய தனித்துவமான நடையில் தண்ணீர் பற்றாக்குறையை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்.
அசோகமித்ரனின் "தண்ணீர்" சமூகத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளால் வாழ்வில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று பெண்களின் கதை.
கனவுகளை துரத்திக்கொண்டு, சினிமா வாய்ப்புத் தேடும் பெண்ணை சினிமா உலகம் எவ்வாறு நடத்தும் என்பதற்கு சாட்சியாய் ஜமுனா. ராணுவத்திலிருக்கும் கணவனைப் பிரிந்து தனது வேலைக்காக தன் மகனையும் உறவினரிடம் விட்டுவிட்டு தனிமையில் வாழும் ஜமுனாவின் தங்கை சாயா. குடும்ப சூழ்நிலையால் நோயாளி கணவனையும், குடும்ப செலவுகளையும், சுமைகளையும் வேறு வழியின்றி தாங்கும் டீச்சரம்மா.
கற்பு என்ற நிலையை பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிர்ப்பந்தக் கற்புமுறையால் ஜமுனா சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்கள், அதன் விளைவாய் அவள் எடுக்கும் இடைக்கால முடிவுகள் பலவீனமானவை. ஜமுனாவின் போக்கு பிடிக்காமலும், கணவரின் இடமாற்றை எதிர்நோக்கியும் சாயா எடுக்கும் முடிவுகள் சுயநலமானவை. குழந்தையின்மையை பெண்ணின் குறையாக மட்டுமே கணிக்கும் சமூகத்தின் பார்வையால் டீச்சரம்மாவின் வாழ்வு பரிதாபமானது.
இம்மூவரும் நகரத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை அவரவர் தேவைக்கேற்ப சமாளிக்க முற்படுகின்றனர். தண்ணீர் கிடைக்கும் பொருட்டு அவர்கள் பெறும் அனுபவங்களின் மூலம் அவர்களுள் நிகழும் உளவியல் மாற்றங்களும், அதன் விளைவாய் அவர்கள் வாழ்வில் எடுக்கும் தெளிவான முடிவுகளும் கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்கிறது.
தண்ணீர் கிடைக்க தெரு மக்கள் படும் பாடு, தெரு ஓர குழாயடி சண்டை, அரசாங்கத்தின் அலட்சியம், கிசுகிசுக்களின் களமாக மாறும் குழாயடி என பிண்ணனியில் நடக்கும் சம்பவங்கள் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன.
அசோகமித்திரன் அவர்களது எழுத்தில் முதன் முதலில் நான் வாசித்தது ஆகாயத்தாமரை என்னும் புத்தகம். அதன் தாக்கத்தின் அடிப்படையில் அவரின் மற்ற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் எப்போதும் இருந்து வந்தது. ஆகாயத்தாமரை படித்து ஒரு வருடம் முடியும் தருவாயில் "தண்ணீர்" புத்தகத்தை கையில் எடுத்தேன். வெகு வேகமாக எழுத்துக்களில் மூழ்கி இந்த புத்தகத்தை முடித்தேன்.
புத்தகத்தின் முன்னரையில், பால் சக்கரியா அவர்கள் எழுதிய எழுத்துக்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. மிகப் பெரிய மலையாள எழுத்தாளரான இவர், இப்படி முடிக்கிறார், " தண்ணீர் கதையை முப்பது வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தால் நான் இன்னும் மேன்மையான மனிதனும் எழுத்தாளனுமாகியிருப்பேன்". தண்ணீருக்காக போராடிக் களைத்தும், கலைத்தும் போடப்பட்ட மனதிற்குள் பயணிக்கத் தொடங்கினேன். 1973ஆம் ஆண்டு சென்னையின் தண்ணீர் பிரச்சனையை மையமாய் கொண்டு வெளி வந்தக் கதை.
தண்ணீர் தட்டுப்பாடு மானுட உணர்வுகளின் பிரதிபலிப்பில் என்னென்ன விந்தைகளை விதைக்கிறது என்பதையும், மூன்று பெண்களின் சமூக விலக்கல்களின் வழியையும், இவர்களின் வாழ்வின் பாதை எப்படி தண்ணீர் தீர்ந்து போன, ஈரத்தின் எச்சமாக மிஞ்சி நிற்கிறது என்பதே இந்த கதையின் பக்கங்களின் சாரம்.
மனிதர்களின் மனங்களில் ஏற்றத் தாழ்வுக்கான விதை ஆழமாய் வேரூன்றுவது, ஏதேனும் ஒரு பொருளின் தட்டுப்பாட்டில் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்னும் 1000 காரணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு பொருள் கிடைத்தல் என்ற புள்ளியில் நிற்கும் பொழுது அது இன்னும் கோரமாய் விரிகிறது. உன்னால் தண்ணீரை தன் இயல்பில் பெற்று விட முடியாது. என் தயவில் தண்ணீரைப் பெற்று செல்லும் நீ, என் காலுக்கும் கீழான சமூகத்தின் படிநிலையில் உந்தி கொண்டிருக்கிறாய் என்ற வக்கிர நினைவடுக்குகளில், வளர்ந்து உயர்ந்து சிரிக்கிறது சுயநலப்பேய். தண்ணீரைக் கூட சுயநலமாய் சித்தரித்து வேடிக்கை பார்க்க நம் கூட்டத்தினால் மட்டுமே முடியும்!
ஜமுனா, சாயா மற்றும் டீச்சரம்மா ஆகிய மூன்று பெண்களைச் சுற்றி சுழல்வதுதான் இந்த தண்ணீரின் கதைக்கரு. நடிகையாக வேண்டும் என்ற கனவில் மிதந்து மிதந்து மீதமிருந்த ஜமுனா, கணவரின் இராணுவ வேலை காரணமாய் தன் குழந்தையைக் கூட பிரிந்து வாழும், அல்லது வாழ்வதாய் நினைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா, ஜமுனாவுக்கே தெரியாமல் ஜமுனாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமென வரும் டீச்சரம்மா. இவர்களின் மூலம் மானுட வர்க்க மனதின் பேதங்களை அடித்துடைத்து நகர்கிறார் அசோகமித்திரன் அவர்கள்.
"என் ஒருத்தியால இந்த ராட்சத பம்பை அடிக்க முடியல. நேத்திக்கு ரொம்பத் திண்டாடிப் போய்ட்டேன். அந்த ஆளு அடிச்சித்தரமாட்டேங்குறான். அந்த மனுஷனும் அவனை அடிச்சித் தான்னு சொல்ல மாட்டேங்குறார். என்னைக் கோச்சிக்காதேடா கண்ணு"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே".
"நான் ஒரு சுயநலக்காரின்னுதானே நினைச்சுப்பே"...
இப்படியான உரையாடல்கள் கதையின் குறுக்கும் நெடுக்குமாக நீண்டு செல்கிறது. இது சுயநலமே? ஒரு விதத்தில் "ஆம்" என்ற ஒற்றை சொல்லில் நகர்ந்து சென்றாலும், கதையின் அடிநாதமாய் மிஞ்சி நிற்பது சுயநலமும், அதிலிருந்து மீண்டு வர நினைக்கும் நம்பிக்கையும் தான். பல்லுயிர் பெருகித் தழைக்கும் இந்த அண்டத்தில், நம்மைக் குறுக்கி நம் பிரச்சனைகளை மட்டுமே, பெருக்கிப் பார்த்து இந்த வாழ்க்கையினை கடந்து செல்கிறோம். ஒரு நிமிடம் நிதானித்து நம்மைத் தாண்டி வெகுஜன மனிதர்கள் படும��� துயரத்தைப் பார்க்கும் அக்கணத்தில் விலகிப் போகின்றன நம் காலத்து வேதனைகள். இதை தான் இந்தக் கதைக்கான நரம்பின் மீட்டல் இசையென நமக்குக் கொடுக்கிறார் ஆசிரியர்.
சினிமாக் கனவுகள் சரித்த எவ்வளவோ மனுஷிகளில் ஒருவராக வருவது ஜமுனா. சரிந்தது, சினிமாவில் மிகப்பெரிய இடத்தில அமர்த்திக் காட்டுகின்றன என்று ஓயாமல் குரல் கொடுக்கும் பாஸ்கர் ராவிடம். 1973இல் எழுதப்பட்ட கதை இது. 2020இல் ஜமுனாக்க��ும், பாஸ்கர் ராவ்களும் இல்லாமல் போயிருப்பார்களா என்ன? காலத்தையும் வென்று நிற்கும் கதைகள், கருத்தியல், பாத்திரங்கள் ஆகியவற்றைப் படைப்பது தானே மிகப் பெரும் எழுத்தாளுமைகளின் சிந்தனைகள்.
சாயா மற்றும் ஜமுனாவின் தாய், அவர்களது தாய் மாமாவினால் பராமரிக்கப்படுவதும், அங்கே இவர்கள் நடத்தப்படும் விதமும், உறவுகளிடத்து காலப்போக்கில் அறியாமலே நிகழ்ந்திடும் மாற்றங்களை பல படிமங்களாக விளக்குகிறார் அசோகமித்திரன். புத்தகம் முழுக்க தண்ணீரைத் தழுவியே நகர்கிறது. கிணற்றின் ஆழத்தில் தண்ணீர் தேடப்படுகின்ற பொழுதெல்லாம், மனிதர்களின் மனத்தின் ஆழம் பார்க்கப்படுகிறது. எப்போதும் போல தண்ணீர் வாய்க்கப்பெற்றவர் எஜமானராகவும், தண்ணீருக்கு தவிப்பவர் அவர்களுக்கு கீழானவராகவுமே மாறிப் போகிற சமூக அவலங்கள் துல்லியமாய் போட்டுடைக்கின்றன.
வாழ்வில் எல்லோருக்கும் மிக நிச்சயமாக ஒரு பிடிப்புத் தேவைப்படுகிறது. அது சக மனிதரின் மேல் கொண்ட நட்பாகவோ, காதலாகவோ, நேசமாகவோ, ஏதோ ஒன்றாகவோ தேவைப்படுகிறது. டீச்சரம்மா ஜமுனாவிடம் பேசித் தேற்றி அவள் வாழ்க்கையை மாற்றியது அப்படி ஒரு பிடிப்பின் காரணமாகத்தான் என்றே நினைக்கத் தோன்றியது. இதே பிடிப்பின் காரணம் தான், தன் நடத்தையில் வெட்கி, தன்னை விட்டுப் பிரிந்து சாயவை, ஜமுனா தேடிச் செல்ல வைக்கிறது. ஆறுதல் கூறி, தெளிந்த நீரோடையின் சலசலசலப்பை போல, சலிப்புத் தராத வாழ்க்கையின் வேகம் ஜமுனாவைப் பற்றிக் கொள்கிறது. கடைசிப் பக்கங்களில் ஜமுனா புதுப்பிறப்பெடுத்து சாயாவுடன் உரையாடுவதாகவே நினைத்தேன்.
ஒரு பக்கம் தண்ணீருக்கான பெருந்துன்பம், மறுபுறம் அதோடு இணைந்து செல்லும் வாழ்க்கையின் துயரங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் சமூக சாடல்கள், தனித்து விடப்பட்ட பெண்களின் எண்ண ஓட்டங்கள், தண்ணீரை வைத்து விளக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளாய் ஓடி முடிகிறது தண்ணீரின் பயணம்.
"பாஸ்கர் ராவ் இன்னும் அந்தத் தெருவை விட்டுப் போகவில்லை. தள்ளித் தள்ளியே தெருவின் கோடி வரை சென்றிருந்தது கார். இப்போது காரைத் தள்ள சிறுவர்கள் இல்லை. பாஸ்கர் ராவே வெளியில் நின்று ஒன்றிரண்டு ஆட்களுடன் காரைத் தள்ள சிறுவர்கள் இல்லை. பாஸ்கர் ராவே வெளியில் நின்று, ஒன்றிரண்டு ஆட்களுடன் காரைத் தள்ளிக் கொண்டிருந்தான்".
சாயா சிறிது கண்களை இடுக்கிப் பார்த்துவிட்டு, "அவுங்க தள்ளலை போலிருக்கே?" என்றாள்.
"பிடிச்சுத் தூக்கப் பாக்கிற மாதிரித்தான் எனக்கு இருக்கு" என்று ஜமுனா சொன்னாள்.
"ஆமாம் நீ சொன்னவுடனே எல்லாம் சரியாத் தெரியறது. இடது பக்கத்து சக்கரம் இரண்டும் சேத்திலே இறங்கியிருக்கு".
சாயா ஜமுனாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்....
இப்படி முடிகிறது இந்த தண்ணீரின் ஓட்டம். தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உருவ மாறுதல்கள் போல துயரங்களின் மீதான பார்வைகளும் உருமாறும் என்ற புள்ளியிலிருந்து இந்த கதை பெருகிப் பாய்வதை உணர்ந்தேன். நேரம் கிடைத்தால் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம். வாசித்துப் பாருங்கள்...
ஒரே வரியில் சொல்லப்ப���னால் பெண்களின் கண்ணீரும் சென்னையின் தண்ணீரும் (1970 களில்) ..இன்றும் கூட இந்நாவல் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ..#முடிவுறா முடிவைக் கொண்ட அசோகமித்திரனின் படைப்பு
தண்ணீர் பற்றாக்குறை மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என்று ஒரு கூற்று உண்டு. தம் வீட்டுத் தேவைக்காக நீர் எடுக்க இந்தியா முழுவதுமே பல மைல் தூரம் நடப்பது பெண்கள் தான். மஹாராஷ்டிரா மாநிலத்தில் தண்ணீர் எடுக்கத் தனியாக மனைவிகள் கொள்ளும் பழக்கமே தற்போது உருவாவதை தன் நீர் எழுத்து நூலில் நக்கீரன் ஐயா சொல்வார். (Google search: Water wives)
இதையெல்லாம் சொல்வது எதற்கு என்றால், தண்ணீர் பற்றாக்குறையினால் அதிகம் அவதிக்குள்ளாவது பெண்கள் தான்! இந்நாவலிலும், நீர் தட்டுப்பாடும், அதனூடாக ஜமுனாவின் சிக்கல்களும் தான் கதைக்கரு. ஆணாதிக்க சாதிய சமூகம் பெண்களிடம் எதிர்பார்க்கும் பண்புகள், தம் சுயத்தை விற்றும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாததால் வரும் சிக்கலாகவே நான் இக்கதையைக் காண்கிறேன்.
தண்ணீர் இல்லாத சென்னையில் தவலையோடு நானும் பம்பு தேடி அலைந்திருக்கிறேன் என்பதால் இன்னும் எனக்கு நெருக்கமாகிறது 'தண்ணீர்'. அழுக்குத் தண்ணீர், நாற்றம் அடிக்கும் நீர், மண் கலந்த நீர் என்று வந்தாலும், எப்படியோ சென்னை தான் கொள்ளும் அளவை விட அதிக மக்களைத் தாங்குகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அப்படியென்றால், இப்போது நீரின் நிலை இன்னும் மோசமாகத் தான் பல இடங்களிலும் இருக்கும்!
ஜமுனாவுக்கும், டீச்சரம்மாவுக்கும் ஒரு சிக்கல் கதையில் எழுகிறது ; இருவருமே நிற்கதியில் நிற்கும் தருணம் ஒன்று வருகிறது. ஆனால் இருவருமே ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து நிற்காமல் அடங்கிப் போவதும், அதையே ஒரு தியாகமாய், போதனையாய், ஜமுனா பாஸ்கர் ராவையும், டீச்சரம்மா தன் கணவரையும் காலம் காலமாக மன்னித்து வருவது, 'என்ன செய்வது நமக்கு விதித்தது இது தான்' என்று விலகும், பழகிப்போன கதையாகிவிடுவது ஏமாற்றம் தான்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால் இது மைய நீரோட்டக் கதைக்களமாக இருந்திருக்கலாம். ஆனால் பெண்ணிய-சாதிய விழுமியங்களில் சமூகம் இன்றிருக்கும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இக்கதையை மீள் விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் உள்ளது.
இவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால், பெருநகர தண்ணீர்த் தட்டுப்பாட்டை உள்ளபடி கதையோடு பதிவு செய்திருக்கும் நூல் இது. சிறு சிறு அத்தியாயங்களாய் ஒரே நாளில் வாசிக்கவும் முடிகிறது.
அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மலையாளி புத்திஜீவியின் நிரந்தர உதாசீனத்தோடும் அகந்தையோடும் அதை வாசிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு பக்கம்
புரளும்போதும் என் மனம் பதைக்கத் தொடங்கியது. ஒவ்வொரு பக்கம் முடியும்போதும் நான் ஒரே சமயத்தில் பதற்றமும் ஆனந்தமும் அடைந்தேன். என்னுடைய முன்தீர்மானங்கள் வீசியெறியப்பட்டன. என்னுடைய மலையாளி கர்வம் அடங்கியது. ஜமுனாவும் சாயாவும் டீச்சரம்மாவும் என்னை ���வர்களது தனிமைக்கும் துக்கங்களுக்கும் தண்ணீரில்லாத நாட்களுக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தைபோல் கைப்பிடித்து அழைத்துச் ச��ன்றார்கள். கடின இதயமுள்ளவனான நான் இடையிடையே எனது ஈரமான கண்களை ரகசியமாகத் துடைத்துக்கொண்டேன். ‘தண்ணீ’ரை வாசித்து முடித்தபிறகு நான் சிறிதுநேரம் மரத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.
1971இல் எழுதிய நாவல். இந்த முப்பது வருடங்களாகக் கேரளத்தில் நாங்கள் இலக்கியத்தின் பெயரால் என்னவெல்லாம் சமத்காரங்களும் குலுக்கல்களும் தமுக்கடிப்புகளும் நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம், களங்கமில்லாத ரத்தினம்போல இந்த நாவல் தமிழ் மண்ணில் எளிமையும் நிர்மலமுமான வாழ்க்கையை, நவீனத்துவத்துக்கும் அதிநவீனத்துவத்துக்கும் அப்பாலுள்ள நிரந்தர மனிதத்துவத்தின் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ‘தண்ணீ’ரை முப்பது வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தால் நான் இன்னும் மேன்மையான மனிதனும் எழுத்தாளனுமாகியிருப்பேன்.
Thaneer.....A Short novel about the lives of sisters jamuna and Saya, setup in the city of Madras in 1970's. The story is unveiled in a narrative which uses the water scarcity issues as the backdrop. The issues are still relevant today and how it affected people from all sections - the working and upper class.
Ashokamithran sets up a strong , independent character in Saya and the opposite in Jamuna. Every character introduced in the novel , is not left without explaining the troubles they faced due to the water shortage.
My favorite episodes included the one with the teacher explaining Jamuna about her life sufferings and the one in which jamuna's sick mom remembers how she was ill-treated by her in-law years back.
A must read just to understand how the issues faced by women and the water-related problems in 70s are even still relevant today. A short read, can be finished in a day.
The main character of the book is good consumable water. Though the book is depiction of things happened in past, the same situation is what people face each summer in areas very near us, if you are citizen of one such area then this is book about u, if not then u get to know your neighbors. It is certain that this is going to be our state in future but for now we can feel happy that things are better.
The very good thing about the book is though water is the center character, this books talk also about people, sufferings, behavior, belief, thoughts, different character, actions and what not. Each character in this book is very true and that is actually a major strength. Some sharp dialogues and conversations makes it a good psychological book too.
If you want to know more about people in lower middle class, their daily life and details about them then try this book, you will not feel naively.
கதையின் தன்மை சற்றும் மாறாமல் கதை முழுக்க நிகழும் சிறு சிறு நிகழ்வுகளால் தண்ணீர் தட்டுப்பாட்டின் கஷ்டத்தையும் பெண்களுக்கு நிகழும் துயரங்களையும் சொல்கிறார் அசோகமித்திரன். ஜமுனாவை மையமாக்கி கதை நகர்கிறது, ஆனால் அவளை ஒரு கதாநாயகியாக எந்த நிகழ்விலும் ஆசிரியர் காட்டவில்லை. கதையின் போக்கில் வரும் ஒரு சாதராண கதாபாத்திரமாகவே சித்தரிக்க படுகிறாள். டீச்சரம்மாள் சில அத்தியாயங்கள் மட்டும் வந்தாலும் அவளின் வாழ்க்கையை நோக்கிய பார்வை வியக்க வைக்கிறது. அவளும் ஜமுனாவும் பேசி கொள்ளும் அந்த அத்தியாயம் தான் கதையின் பின் பகுதி மாறுதல்களுக்கு ஒரு தொடக்க புள்ளியாக இருக்கிறது. புத்தகத்தின் முன்னுரையில் உள்ளது போல கதையின் முடிவு தேடி படிப்போருக்கு இது கண்டிப்பாக ஏமாற்றத்தை தரலாம். பதிலாக நிதானத்துடன் ஒவ்வொரு பாத்திரத்தையும் உள்வாங்கி படிக்கும் பொழுது சிறிது சோகம், வெறுமை, சுய நலம் மற்றும் அங்கங்கே சிறு சிறு புன் முறுவல் என கதை ஒரு மெல்லிய நீரோட்டம் போல் நகரும்.
This is a short novel and the story mainly revolves around the 3 characters: jamuna , chaya and teacher. Ashoka mithran surprises us by telling a story with few characters each having their own challenges in their own life and it is being told as it is on how they are facing their life at one side and how we evolved through the water over the years in other side(pumping, well, lorry etc are briefly explained). Both happens seamlessly. At the end, you might feel it was incomplete and many author would change the way it ended for many reasons but it is the reality and I loved the way it ended which was also appreciated by other author in preface
Brief of character: Jamuna -- how she struggles to get into her aim,the author tells you how you feel when you are not considered by others through Jamuna Teacher -- the author tells you how she struggles with their life on home and in work environment through Teacher(At first, everyone might think she is employed and there would be no issues but the part where teacher explains her issue and showing another child life to Jamuna and asks her back again now tell me Ithellam oru prechanaya? is the favourite part in the whole story which you might take back with you Chaya -- the author tells you how a life would be and the struggles when married at young age through Chaya
நான் படித்த முதல் தமிழ் நாவல் அசோகமித்திரனின் "தண்ணீர்".
"தண்ணீர்" என்பது வெறும் ஒரு கதையாக மட்டுமல்ல; அது சமூகத்தின் அடிப்படைகளை, பெண்ணின் வாழ்வியல் நிலையை, மற்றும் நீரின் முக்கியத்துவத்தை பற்றிய ஒரு ஆழமான பார்வையை வழங்குகிறது.
பெண்ணும் நீரும், இரண்டும் ஒரே அளவிலான திறன்கள் மற்றும் அழகுகள் கொண்டவை. நீர், இயற்கையின் தர்மம் மற்றும் தேவையான உண்மைகளை ஒப்பிடும்போது, பெண்ணின் தன்மையை, சக்தி மற்றும் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது நீரில்லாத ஒரு வாழ்க்கையை சமாளிக்க வேண்டியபோது, கதாபாத்திரங்கள் தங்கள் தனிப்பட்ட போராட்டங்களையும், நம்பிக்கையையும், ஏமாற்றத்தையும் சந்திக்கின்றன. இக்கதையில் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு பிரத்தியேக வடிவத்தில் மனித உறவுகளை, எதிர்பார்ப்புகளை, மற்றும் அதிர்ச்சிகளை பிரதிபலிக்கின்றன.
டீச்சரம்மா, தன்னால் மாற்றம் செய்ய முடியாத சூழ்நிலையில், தனது வாழ்க்கையை அந்த நெருக்கடிகளுக்கு அடங்கிக் கொள்ள பழகிக்கொள்கிறார், ஏனெனில் வேறு வழி இல்லை என்று உணர்கிறார்.சாயா, எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில், வாழ்க்கையின் போராட்டங்களிலிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டிருப்பவராக காட்சியளிக்கிறார்.ஜமுனா, நம்பிக்கையை வைத்திருந்தாலும், மாறாத வறுமையிலும் ஏமாற்றங்களிலும் சிக்கிக்கொள்கிறார்.
அவர்களெல்லாம் தினந்தோறும் தண்ணீருக்காக அலைய, ஒரு நாள் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உயிர்த்தேடல் நடத்துகின்றனர். இது ஒருவகையில் நீர் என்பது உண்மையான பொருட்டல்ல; அது அவர்களுடைய வாழ்க்கையின் நிலையை, பிரச்சனைகளை பிரதிபலிக்கின்ற ஒரு மாயமே என்று கூட சொல்லலாம்.
ஒரே முறையில் படித்து விடக்கூடிய அளவுள்ள புத்தகம். என் இவ்வளவு சீக்கிரமே முடிந்துவிட்டது என ஏங்க வைக்கும் அளவிற்கு சுவரரஸ்யம் மிகுந்த நாவல். முன்னுரையில் குறிப்பிட்டது போல கதை மாந்தர்களுக்கு என்ன ஆகும் தண்ணீர் பிரச்சினை தீர்த்து விடுமா என நினைத்து நாவலை அணுகாமல், வாசிக்க வாசிக்க காட்சிகளாக மனதில் கேள்விகளை எழுப்பும் உன்னதமான புத்தகம்... படித்ததில் பிடித்தவை ^ நெருங்கியவர்களானாலும் சில அந்தரங்கங்கள் ஒருவருக்கொருவர் தெரியாத வரையில்தான் சகித்துக்கொள்ள முடிகிறது.
^"நான் இப்பவே சாகணும். இப்பவே சாகண��ம்." "உனக்கு இந்த ஆசை ரொம்ப லேட்டா வந்திருக்கு. எங்களுக்கெல்லாம் உனக்குப் பாதி வயசு இருக்கறப்பவே வந்தாச்சு." "நான் செத்தாக்கூடப் பிடிச்சிழுத்துக்கொண்டு வந்துடறாங்க," - ஓவென்று ஜமுனா அழுதாள். "இதோ பார், போதும் இந்த சாவுப் பேச்சு. உனக்கு நிஜமாச் சாகணும்னு இருந்தா உன்னை யாரும் பிடிச்சிழுக்க முடியாது. அதேமாதிரி நீ ஏதாவது செஞ்சிருக்கே செய்யலேன்னா அதை யாரோ சொன்னான்னு செஞ்சேன் செய்யலேன்னு சொல்லறதெல்லாம் வெறும் பேச்சு."
இதற்கு பின் வரும் டீச்சரின் உரையாடல் கதையின் இறுதியில் ஜமுனாவை உறுதியானவள் ஆக்கியிருக்கும்.
^ யாருடையது என தெரியாலாகினும் தாய்மையை ஏற்க பக்குவப்படுத்திய வாழ்க்கை, நடப்பது நடக்கட்டும் வாழ்ந்து தான் ஆக வேண்டு���ென நடுத்தர மக்களின் வாழ்க்கையை காட்சிகளாக ஓட வைத்தார் அசோகமித்திரன் அவர்கள்....